குளிரொளித் தென்றல்

கேழைமான் என்று தேடி கண்டடைந்த பாடல்.நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது வெளிவந்தது. அன்று ஒரு பெரிய அலையை கிளப்பியது. இணையத்தில் பார்த்தபோது இன்றும் அதேபோல பிரபலமாக இருப்பது தெரிகிறது. பலர் பாடியிருக்கிறார்கள். இளம்பாடகி சீதாலட்சுமி பாடிய வடிவமும் அழகானது

ஆனால் பி.சுசீலாவின் குரலில் உள்ள கொஞ்சலும் குழைவும் உருவாக்கும் அழகு இணையற்றது. சுசீலாவின் மிகச்சிறந்த காலகட்டம்.

பெண்குழந்தையை கொஞ்சும் பாடல் இது. என் ஆத்மாவில் விரியும் பொன்மலர். கார்த்திகை மாத நிலவின் குளிரொளி. ஆனால் உச்சம் கேழைமான் குழவி என்னும் அழைப்புதான்

பிந்து நீ ஆனந்த பிந்துவோ

என் ஆத்மாவில் விரியும் ஸ்வர்ண புஷ்பமோ

ஆதிர குளிரொளி தென்னலோ!

 

கஸ்தூரி பூசிய கவிளில் முகரான்

தாகம்  தாகம் எனிக்கு மோகம்

ஒரு நோக்கு கண்டோட்டே

கிளிகொஞ்சல் கேட்டோட்டே

ஞான் என்னே மறந்நோட்டே

 

என் ஆத்மசரஸில் விடரும் அபிலாஷ

சுந்தர குமுதினி நீ மாத்ரம்

சந்திரிக சாறில் நீராட்டினெத்திய

குஞ்ஞிளம் கேழமானே

கே.ஜே.ஜோய்

படம் சந்தனச் சோல

எழுதியவர் டாக்டர் பாலகிருஷ்ணன்

இசை கே.ஜே.ஜோய்

பாடியவர் பி.சுசீலா

[தமிழில்]

பிந்து நீ ஆனந்தத் துளியோ

என் ஆத்மாவில் விரியும் பொன்மலரோ?

ஆதிரை நாளின் குளிர்ந்த ஒளிமிக்க தென்றலோ

 

கஸ்தூரி பூசிய கன்னத்தை முகர

தாகம் தாகம் எனக்கு மோகம்

ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன்

கிளிக்கொஞ்சலை கேட்டுக்கொள்கிறேன்

என்னை நானே மறக்கிறேன்

 

என் ஆத்மாவின் சுனையில் விரியும்

ஆசையின் அழகிய தாமரை நீ மட்டுமே

நிலவின் சாறில் நீராட வந்த

குட்டிக் கேழைமானே

சந்தன நதியில்…

காத்திருக்கிறாள் இரவுமகள்

கையை தொடாதே!

கேட்கப்படுகின்றனவா பிரார்த்தனைகள்?

ஐயையா, நான் வந்தேன்