அமுதமும் தீவண்டியும்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

ஒரு சிறுகதையை இரு பகுதிகளாகப் பிரித்துக்கொள்கிறேன். தர்க்கப் பகுதி. மற்றொன்று அதர்க்கமானது. தர்க்கப்பகுதி வாசக போத மனதுடனான தொடர்புறுத்தலை நிகழ்த்துகிறது. அதர்க்கப்பகுதி அபோத மனதுடன் தன் ஆடலை நிகழ்த்திக்கொள்கிறது. இவ்விரு பகுதிகளுக்கு மான நெசவே சிறுகதை எனும் வடிவம் என புரிந்துகொள்கிறேன்.

சிறுகதைகளிில்  அதர்க்கப்பகுதியில்தான் அக்கதையின் நுண்மை வெளிப்படுகிறது. குறிப்பாக நவீன தமிழ் சிறுகதைகளில்  முடிவில் சிறு நகர்வு,  அதன் வழி நாம் கதையின் Sub text ஐ காண்கிறோம். உங்கள் கதைகளில் தர்க்கப்பகுதி கனவுக்குள் மெல்ல இட்டுச் செல்கிறது. தொன்மங்களின் வழியோ உணர்வெழுச்சிமிக்க நாடகீய தருணம் ஒன்றின் வழியோ அதர்க்கப்பகுதி அமைகிறது.

அமுதம் சிறுகதை zoom out கோணத்திலிருந்து zoom in ஆகிச் செல்கிறது. ஒரு நிலப்பகுதியின் காடு செறிந்த தன்மை. பசுக்கள் புலிகளாலும் செந்நாய்களாலும் வேட்டையாடப்படுவது. பின் ஒரு அரசி ( ஒரு பெண்) குழந்தைகளின் ஆரோக்யத்தை மனதில் கொண்டு பசுக்கள் வளர்க்க ஏது செய்கிறாள். அதன் பின் ஒரு குடும்பம் அதில் 8 பெண்கள். பதினொன்று குழந்தைகள். குடும்பத்தலைவர் பசு வாங்க ஏற்பாடு செய்கிறார். இப்படியாக கதையின் தர்க்கப்பகுதி.

அதன்‌பின் அப்பசு முதல் நாளிலிருந்தே மெல்ல நம்மை கதையின் அதர்க்கப்பகுதிக்குள் இட்டுச்செல்கிறது. ஆறு நாழி பால் அல்ல அதற்கும் அதற்கும் மேலென ஒரு ஊருக்கே பால் சொரிகிறது. இவ்விடத்தில் கதை அதன் Sub text நோக்கி திரும்பிவிடுகிறது.

ஒரு பெண்ணால், பெண்களால் அவளின் கருணையால் செழிக்கும் ஒரு சமூகம் ஆணின் ஆணவத்தை மெல்லச் சீண்டுகிறது. தளத்தில் வந்த ஒரு கடிதம் “ஆண் அன்னையின் முலையை அமுதமாகக் காண்கிறான். மனைவியின் முலையில் காமம். இவ்விரண்டிற்கும் மத்தியில் பெண் நிற்கிறாள். இரண்டையும் பயன்படுத்தி தூர வீசுகிறான்” என்பதாக. கதையின் வாசிப்பு சாத்தியங்களில் இந்த நுண்(micro) தளமும் ஒரு சாத்தியம். இதை மீறி கதைகொள்ளும் பரந்துபட்ட தளமொன்று (macro)  உள்ளது.

கதையில் தர்க்கப் பகுதியில் இருப்பது பெண். அவளிலிருந்து கதை உருவாக்கியெடுப்பது ‘பெண்மையை’. பெண்மையென்று ஆகும் போது அது பொதுமையான ஒரு குணமாக ஆகிவிடுகிறது,பெண்ணில் வேரூன்றியிருக்கும்போதும். அது எந்த பாலுக்கும் எந்த உயிரிலும் காணக்கூடிய ஒரு குணமாக மாறிவிடுகிறது. காந்தியை பெண்தன்மை கொண்ட தலைவர் என்று எங்கோ வாசித்தாக நினைவு. எப்பாலிலும்  எவ்வுயிரிலும் காணக்கூடிய குணமான பெண்மை எனும் குணத்திற்குள் நுழைகையில் கதையின் macro தளத்திற்குள் நாம் பிரவேசிக்கிறோம்.

கதையில் வரும் பசுவின் குணாதிசியங்களை இயற்கையின் மேல் போட்டுப் பார்க்கலாம். அல்லது இயற்கைக்கும் மனிதனுக்கமான உறவாக. மண் ஒளி நீராலான ஒரு மாபெரும் நெசவின் விளைவல்லவா நம் உணவு? இயற்கை சார்ந்த ஒவ்வொன்றும் வணங்கப்படுகிறது. ஒரு சூழியல் ஆர்வலர் கடல் பற்றி பேசுகையில் சொன்னார் “கடல் அவ்வளவுதான். மீட்டெடுக்க முடியாது.” அழிந்த உயிரினங்கள், அதன் ecosystem எவ்வளவு பாதிப்பை கண்டுள்ளது என நீண்டது உரையாடல். கடலும் வணங்கப்பட்ட ஒன்று‌. அத்தனை உயிர்க்கும் உணவிட்ட ஒன்றின் இன்றைய நிலை பரிதாபமானது. அதையும் மீறி கடல் வழங்கிக் கொண்டுதான் உள்ளது.

அப்பசு துரத்தப்படும்போது அதன் மேல் மலம் எரியப்படும்போது, காந்தி நினைவுக்கு வந்தார்.பசு துரத்தி எரிக்கப்பட்டபின்னும், அந்நிலத்தின் பசுக்கள் பால் சொரிகின்றன. எவ்வளவு பொருந்தி வருகிறது?
ஜீஸஸ் எனும்‌ தொன்மத்தையும் நாம் இவ்விடத்தில் பொருத்திப்பார்க்கலாம்.

கடிதத்தின் ஆரம்பத்தில் சொன்ன கதையின் தர்க்க அதர்க்கப் பிரிவுக்கு வருகிறேன். இவ்வளவு விரிவான நீளமான அதர்க்கப்பகுதி நவீன தமிழ்  இலக்கிய சிறுகதைகளில் அரிது என்றே நினைக்கிறேன். என் சிறு வாசிப்பில் இதே அளவிற்கு அதர்க்கப்பகுதி நீண்டதாக உணர்வெழுச்சி மிக்கதாக ஆழமானதாக எழும் ஒரு சிறுகதை கி.ராவின் “பேதை”. மற்றபடி நான் வாசித்த வரையிலான தமிழ் சிறுகதைகளில் அதர்க்கப்பகுதி அல்லது sub text டினுள் நம்மை இட்டுச் செல்லும் பகுதி ஒரு திருப்பமாக அல்லது  மாற்றொளி கோணத்தில் கதையைக் காணச் செய்யும் நுட்பமாகவே வெளிப்பட்டுள்ளது.

அன்புடன்
ஸ்ரீநிவாஸ்
திருவாரூர்

அன்பு ஜெ,

இரண்டாவது முறையாக இக்காவை சந்திக்கிறேன். முதன் முதலில் அவரை ”அருகே கடல்” சிறுகதையில் சந்தித்திருந்தேன். ஒரே இடத்தில் தான் வருவார் மனதை அள்ளிச் சென்று விடுவார். “போனதெல்லாம் அல்லாவுடைய கணக்கில் எழுதிவிடு” என்ற வரியும் மனதில் பதிந்து போயிருந்தது. இவரைப் போன்றோரை வாழ்வில் சந்திக்க நேர்கையில் அந்தப் பொழுதுகளை தவறவிடக்கூடாது என்று மட்டுமே மனம் நினைக்கிறது. நீங்கள் உங்கள் பாதையில் அவரை சந்தித்திருக்கக் கூடும் என்று மட்டும் விளங்கியது.

”தீவண்டி” ஜான். ஜானைப் போல ஒரு மனிதர் இந்த உலகில் அரிதானவர்கள் தாம். எந்தவித உலகியல் கணக்கோடும் பழகாதவர்கள். கதையில் அவர் இல்லாமலேயே அவரைப் பற்றி மட்டுமே பேசி அவரின் முழு பிம்பத்தையும் கடத்தி விட்டிருந்தீர்கள். தான் வாழ்ந்த காலத்தில் பெயரும் புகழும், கிடக்காத ஒரு நபர். ஆனால், தன்னை இத்துனை துல்லியமாக நினைக்க ஏதுவான நினைவுகளை விட்டுச் செல்லும் ஒரு ஆன்மா. இது போன்று ஜான் சென்ற இடங்களிலெல்லாம் பல நினைவுகளை, அதை நினைத்து மகிழ சில மனங்களையும் விட்டுச் சென்றிருக்க வேண்டுமே. ”நினைவுகள்” அவை மட்டும் தானே நம்மால் விட்டுச் செல்லக் கூடியவை.

கதை முழுவதுமாக சிரிப்பை நிரப்பி அதன் அடியாழத்தில் இனம்புரியா சோகத்தை நிறப்பியிருக்கிறீர்கள். படித்து முடிக்கையில் கலவையான மன நிலை நிறம்பியிருந்தது ஜெ. இக்காவையும், ஜானையும் போன்ற ஜின்களை வெறுமே நாயரைப் போல வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஜான் நினைவுகளை ஆக்கிரமித்திருந்தார்.

அருமையான கதை. நன்றி ஜெ.

அன்புடன்,

இரம்யா.

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைவெறுப்பெனும் தடை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதர்மபுரி காந்தி உரை, காணொளி