முதற்கனலும் வாழ்வும்

அன்புள்ள ஜெ

முதற்கனல் நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். அதன்பின் அதைப்பற்றிய கடிதங்கள், கட்டுரைகளை வாசித்தேன். முதற்கனல் உண்மையில் எனக்கு திகைப்பை அளித்த நாவல். நான் நவீன இலக்கியத்தை சென்ற நான்காண்டுகளாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இதை எப்படி வாசிப்பதென்றே எனக்குத் தெரியவில்லை. இதை புராணம் என்று வாசிப்பதா, அல்லது புராணங்களை எப்படி இது மறு ஆக்கம் செய்திருக்கிறது என்று வாசிப்பதா என்றெல்லாம் குழப்பம்

ஆனால் வாசகர்கடிதங்களும் விவாதங்களும் அந்தக் குழப்பத்தை தீர்த்துவைத்தன. என்னுள் ஆழமான பல புரிதல்களை உருவாக்கின. இந்தத்தொன்மங்களெல்லாம் எதற்கு? இதை எவரும் கேட்கலாம். ஆனால் உண்மையில் இந்தத் தொன்மங்களெல்லாம் நம் மனதின் ஆழத்தில் உள்ளன. நம் வாழ்க்கையை இவைதான் முடிவுசெய்கின்றன. நாம் அதை அறிவதே இல்லை.

முதற்கனலில் தாட்சாயணி கதையை வாசித்தபோது என் அத்தையின் வாழ்க்கையை நினைத்துக்கொண்டேன். திகைப்பாக இருந்தது. அப்படியே அத்தையின் வாழ்க்கையுடன் அந்த தொன்மக்கதை இணைந்துவிட்டது. தொன்மத்திலிருந்து இந்த வாழ்க்கை மனநிலை வருகிறதா, இல்லை தொன்மத்தை நோக்கி வாழ்க்கை செல்கிறதா என்று சொல்லமுடியாது.

இந்தத் தொன்மங்களை விளக்கமாக அறியாமல், அதை புரிந்துகொள்ளாமல் நம்மால் நம்மை புரிந்துகொள்ளமுடியாது. ஆனால் அதற்கான வழிமுறைகள் நம் கதைகளிலே இல்லை. அந்த வழிமுறையைத்தான் வெண்முரசு காட்டுகிறது. முதற்கனலில் கதைக்குள்ளேயே ஒரு கதை தொன்மமாக வருகிறது. இன்னொன்று அம்பை போன்ற பெண்களின் வாழ்க்கையாக வருகிறது. இரண்டும் மிகச்சரியாக இணைந்துகொள்கின்றன.இதுதான் நம் அன்றாட வாழ்க்கையிலும் நிகழ்கிறது

முதற்கனலில் இருந்து இப்போதுதான் நான் மழைப்பாடலுக்குப் போகப்போகிறேன். முதற்கனலை வாசிப்பது அளித்த பயிற்சி மழைப்பாடலையும் வாசிக்கவைக்கும் என நினைக்கிறேன்

எஸ்.ரம்யா

என் தந்தையின் மரணத்திற்குப் பின்பான வெறுமை, பாதுகாப்பின்மை, குற்ற உணர்ச்சி ஆகியவற்றோடு, வீட்டில் முடங்கி இருந்த நாட்களில் வெண்முரசு பற்றி அறிந்து உங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன். அப்போது முதற்கனல் முடிந்திருந்தது என்று நினைவு,அல்லது சரியாக நினைவில்லை. ஆனால் 2014 முதலேயே நானும் வெண்முரசு வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

வெண்முரசும் வாழ்வும்

பெண் எந்த ஒரு சிக்கலான நேரத்திலும்! எவ்வளவு கண்ணீரிலும் பேசும் சக்திப்படைத்தவளாக இருக்கிறாள். சொல்லப்போனால் பொருள் பொதிந்த வார்த்தைகளையும், திசைகள் தோறும் எழும் மொத்த நாக்கையும் கட்டிபோடும் சொல் சொல்கிறாள். முறிமருந்து இல்லாத தனி விஷம்கொண்ட விஷ சொற்கைளை உதிக்கிறாள். அவள் சொல்லிய பின்புதான் அவள் மனமே அந்த சொற்களை அறிகின்றது

முதற்கனல் தாயும் தாய்மையும் -ராமராஜன் மாணிக்கவேல்


அழியா அழல் – முதற்கனல் பற்றி சுனீல் கிருஷ்ணன்

முதற்கனல் வாசிப்பினூடாக

முதற்கனல் – சுரேஷ் பிரதீப்

முதற்கனல் – எண்ணங்கள்

முதற்கனல் – நோயல் நடேசன்

முதற்கனல் வடிவம்

முதற்கனல் – சில வினாக்கள்

வெண்முரசு – முதற்கனல் முதல் பிரயாகை வரை-சுரேஷ் பிரதீப்

முதற்கனல் – கடிதம்

முந்தைய கட்டுரைசு.வெங்கடேசன்
அடுத்த கட்டுரைகதிர்சூடும் புதுநெல்லின் கிசுகிசுப்பு