சிம்மமும் பெண்களும்- கடிதங்கள்

சீனச்சிம்மம்

சிந்தே [சிறுகதை]

அன்பு ஜெ,

”சிந்தே” என்ற வார்த்தையே புதிதாக இருந்தது எனக்கு. அது சார்ந்த தொன்மங்கள், நம்பிக்கைகள் பற்றியெல்லாம் விளக்கியிருந்தீர்கள். வடகிழக்கு -பர்மா பகுதிக்கும் நமக்கும் ஏதோ ஓர் பந்தம் இருக்கத் தான் செய்கிறது ஜெ. ”ரங்கூனுக்கு போவது” சார்ந்த நாட்டுப்புறப் பாடல்கள் இருக்கின்றனவே. ஒருவகையில் கதையின் நாயகனின் வரலாற்றை அவர்களின் வாழ்க்கைகளில் ஒன்றாக தான் பார்த்தேன்.

அந்த வீட்டைப் பற்றிய உங்களின் நுணுக்கமான சித்தரிப்பில் நான் எழுப்பிய பிகிம்பத்தில் பிரமித்துப் போய்விட்டேன். சிறுவயதில் என் கனவு பெரும்பாலும் மரத்தில் தனியாக கட்டப்பட்ட ஒற்றை அறை வீட்டைச் சார்ந்து தான் இருக்கும். என் கனவின் உள் நுழைவில் அந்த பிம்பத்தைக் கொண்டு தான் கண் உரங்க ஆரம்பிப்பேன். அதன் பிரம்மாண்ட எழுச்சியாக இந்த வீடும் இடமும் அமைந்தது. புங்ரோ –வை இணையத்தில் தேடி அடந்தேன். காடுகளுக்குள் ஒளிந்து கிடக்கிறது.

சிந்தே காவல் தெய்வமாக, பழியைப் பொறுக்காத தெய்வமாக, தொன்மாகி ஓர் உள்ளுணர்வாக மாறிப்போயிருந்ததைக் கண்டேன். சிந்தேயின் பிரம்மாண்டமான உருவமே மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் எண்ணங்களில் வரும் விலங்குகள் அப்படித்தான் இருக்கின்றன. ரம்யோலாவின் உள்ளுணர்வு அவளையும், குழந்தையும் வழி நடத்துகிறது. பின்னும் அவள் முன்னரே கணித்த அவள் கணவனின் மரணமும், அவளின் முடிவும், மகனின் எழுச்சியும் என யாவுமே அந்த உள்ளுணர்வின் நீட்சியாகத் தான் பார்த்தேன்.

வன விலங்குகள் சார்ந்த ”கண்டறிதல்கள்” எனக்கு எப்போதுமே வேடிக்கையை அளிக்கக்கூடியவை தான். சமீபத்தில் கருப்பு பேந்தர் வகை உயிரினம் முதல் முறையாக மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டதான ஒரு செய்தியைப் பார்த்தேன். அது என்ன ”முதன் முதலாக”?. அது அங்கு தான் வாழ்ந்து வந்திருக்கிறது. தான் அறியாத எந்த உயிரும், நிகழ்வும் இந்தப் பூமியில் நிகழவில்லை/இல்லை என்ற மனிதனின் ஆணவத்தை என்ன சொல்வது. அதன் உலகிலும் கூட தான் நாம் இல்லை. அதற்காக நாம் இல்லை என்றாகிவிடமுடியுமா. கோவில்களிலுள்ள யாழி சிற்பங்கள் எங்கோ ஒரு இடத்தில் அல்ல, பல கோவில்களில், இடங்களில் காண முடிகிறது. அது இருந்திருக்கவே முடியாது என்று சொல்லிவிடமுடியுமா. இந்த இரடிண்மையை ஏன் பலராலும் ஒத்துக் கொள்ள முடியவில்லை. சிந்தேவும் எனக்கு அப்படித்தான். என் நினைவுகளில் அது புங்ரோவின் காடுகளில், அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அன்புடன்

இரம்யா.

அன்புள்ள ஜெ

நூறு கதைகளை படித்துக்கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒரே ஆசிரியர் எழுதும் நூறுகதைகளை தொடர்ச்சியாக வாசிப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. படிக்கப்படிக்க கதை என்ற மாய உலகம் அளிக்கும் பிரமிப்பும் திகைப்பும் புதுப்புது வாழ்க்கைத்தர்சனங்களும் என்னை வேறொருத்தியாக ஆக்கிக்கொண்டிருக்கின்றன

இந்த நூறுகதைகளில் வரும் பெண்களின் சித்திரங்கள்தான் என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்கின. இந்தக்கதைகளில் அபலைகளான பரிதாபமான பெண்கள் எவருமே இல்லை. ஆச்சரியமான விஷயம்தான் இது. பொதுவாக இலக்கியங்களில் பெண்களின் அவலநிலையை காட்டுவதுதான் வழக்கம். இந்தக்கதைகளில் வரும் பெண்கள் எல்லாமே தங்கள் விதியை எதிர்த்துப் போராடி வெல்பவர்கள். நிலைகொள்பவர்கள். இத்தனை அற்புதமான பெண் கதாபாத்திரங்களை வெறும் நூறுநாட்களுக்குள் படைத்திருக்கிறீர்கள் என்பதைப்போல பிரமிப்பூட்டும் இலக்கியச் சாதனை தமிழில் இதுவரை நடக்கவில்லை

வேட்டு கதையிலும் சரி ஆபகந்தி கதையிலும் சரி தங்கள் கீழ்நிலையில் இருந்து பெண்கள் மேலெழுந்து வருகிறார்கள். நற்றுணை போன்ற கதைகளில் தங்கள் மீதான தடைகளை உடைக்கிறார்கள். தேவி போன்ற கதைகளில் விஸ்வரூபமாக வெளிப்படுகிறார்கள். ஆனால் எந்தக் கதாபாத்திரமும் பொய்யல்ல. உண்மையில் வாழ்ந்த மனிதர்கள், நம்மால் அருகே பார்க்கக்கூடியவர்கள். அது இன்னும் பிரமிப்பை உருவாக்குகிறது. என் மனமார்ந்த வணக்கம்

ஆர்.தேவிப்பிரியா

***

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைசெய்திநிறுவனங்கள்- கடிதம்
அடுத்த கட்டுரைகாவேரியின் முகப்பில்-2