முதற்கனலில் இருந்து…

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

முதற்கனல் நாவலைப் படித்து முடித்ததும் எழுதும் கடிதம் இது. தாங்கள் நலம் என நினைக்கிறேன். அதனையே வேண்டுகிறேன்.

தந்தைக்கும் மகனுக்குமான போரின் முதல் பொறிதான் இந்த கனல் நாவலோ எனத் தோன்றுகிறது. இந்த போர் காலகாலமாக நடந்து வரும் ஒன்று.

நாவல் ஒரு கனவுலகைக் கண் முன் நிறுத்தி, இன்னும் மீள முடியாததாக இருக்கிறது. இதற்கு முன் மகாபாரதம் முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. முதற்கனலின் கதை எனக்குப் புதிது.

கதைக்குள் கதை நாவலை ஒரு நிகர் உலகமாகக் காட்டுகிறது. உதாரணமாக பீஷ்மர் அதிதியாகத் தங்கும் கிராமத்தில், அந்த இளம்பெண் காணும் கனவு. சிகண்டியும் அதே கனவைக் கண்டதாகவும் அவள் அன்னைதான் அது என தன் குருதேவரிடம் தெரிவிப்பதும், ஒருவகை பரவசத்தை அளிக்கிறது.

காமம் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வரம். அதை எப்படி கையாள்வது எனத் தெரியாதவனுக்கு நரகம், தெரிந்தவனுக்குச் சொர்க்கம். பல்வேறு மனிதர்களின் காமங்கள் வழியே நாவல் வேறு பரிணாமம் பெற்று வளர்கிறது. அம்பையின் காமம் கனலாகி, சிகண்டியான கதை முதற்கனல் நாவல்.

மறுவாசிப்பு நிச்சயம் தேவை என்பதால், மறுமுறை படித்துவிட்டு என்னுடைய சந்தேகங்களை கேட்கிறேன்.

ஆசிரியருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். நிச்சயம் இதை எழுதுவது என்பது தவம்.

நன்றி

மகேந்திரன்.

முதற்கனல் வாசிப்பில் சித்தராங்கதன் கனாகச் சுனையில் ஆழ்ந்து நோக்கிக்கொண்டிருப்பதை படித்தபோது கிரக்கத்தொன்மத்தில் நெமிசிஸ்ஸிடம் சாபம் பெற்ற நர்சிஸஸ் நீரில் தனது தீரா முகபாவங்களைக் கண்டு தன்னுருவின் மீது தானே காதல் கொள்ளும் சித்திரத்தினை மனம் சென்று தொட்டது.அவனுடைய தாயும் சத்தியவதி போன்று செவிசஸ் என்ற நீர்மகள் என்பது இன்னும் வியப்பாக இருந்தது

முதற்கனல் சித்திரங்கள்

அஸ்ருபிந்துமதியின் கதை தேவிபாகவதத்தில் உள்ளது. அது முன்னரே முதற்கனலில் வந்துவிட்டது. மாமலரில் அஸ்ருபிந்துமதியை யயாதியின் காமத்தால் கண்டடையப்பட்ட முழுமையான பெண்ணுருவம் என்றும் தேவயானி சர்மிஷ்டை ஆகிய இருவரின் இணைப்பு என்றும் சொல்கிறீர்கள்.

அஸ்ருபிந்துமதியின் கதை