அன்புள்ள ஜெ
நூறுசிறுகதைகள் ஒரு அசாதாரணமான சாதனை. அந்தக்கதைகளை வாசித்து முடித்தபின் மனதுக்குள் தொகுக்கவே முடியவில்லை. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உலகம். கதைகளை நினைவில் எழுப்பும்போது ஒவ்வொரு கதையும் தனித்தனியகா நினைவில் வருகின்றன. கதைகளில் சில அப்படியே நினைவில் மறைந்துவிடுகின்றன. பிறகு அவற்றை நினைத்துக்கொண்டு அடாடா அந்தக்கதையை எப்படி மறந்தேன் என்று நானே நினைத்துக்கொள்வதுண்டு. ஒரு கதை இன்னொரு கதையை நினைவில் இழுத்துக்கொண்டு வரவில்லை. பெரும்பாலான கதைகள் அவற்றின் தனியுலகிலேயே இருக்கின்றன. இந்த தனித்தன்மைதான் அவற்றின் பலம் என நினைக்கிறேன்
கதைகளில் என்னை பதற்றம் அடையவைத்த மூன்று கதைகள் உண்டு. ஆபகந்தி, மூத்தோள், அருள். மூன்றும் என் மனசிலே ஓர் இடத்திலே இருக்கின்றன. நான் சம்பந்தப்படுத்திக்கொண்டேன். அது என் அனுபவம் நான் ஒரு கோயிலில் அப்படி ஒரு விசித்திரமான சிலையை கண்டேன். அது என்ன என்று பலரிடம் கேட்டேன்.அது பிரசவ வலி எடுத்த ஒரு பெண்ணின் சிலை. அந்தச்சிலை எனக்கு நெடுங்காலம் கனவிலே வந்துகொண்டிருந்தது. அதன்பின் ஒருமுறை எனக்கு பெரிய நோய் வந்தது. சாவுபயம் வந்து அலைக்கழித்தது. நேராக கும்பகோணம்போய் அந்தச் சிலையை பார்த்துவந்தேன். பயம் போய்விட்டது.இன்றைக்கும் போய்ப்பார்ப்பது உண்டு. எப்படி பயம் போகிறது என்று விளங்கவே இல்லை
எஸ்.டி.சண்முகநாதன்
அமுதம் [சிறுகதை]
அன்பு ஜெ,
பசுவின் அமுதம் என் அன்னையின் அமுதத்தை விட எனக்கு அணுக்கமான ஒன்று. நான் பிறந்த அதே நாளில் எங்கள் வீட்டில் ஓர் ஆண் கன்று பிறந்தது. என் அன்னையின் அமுதம் சரிவர சுரக்க இயலாத போது புதிதாய் கன்று ஈன்ற பெரியவளின் மடிப்பாலில் தான் வளர்ந்தேன் நான். ஒரு மாட்டுப் பாலை நானும் கன்றுக் குட்டியும் மட்டுமே குடித்து வளர்ந்ததாகச் சொல்லுவார்கள் என் பாட்டி. அவள் பகடியாய் ”எங்க எது பெறக்கனுமோ அது பெறக்கல” என்று சொல்லுவாளாம். பெண் பிள்ளைகள் சமூகத்தில் பெரும்பாலும் தேவையற்றவர்களாத் தான் பார்க்கப்படுகிறர்கள். அமுதம் ஒன்று தான். ஆனால் பொருளாதாரத் தேவைக்காக பசுக்கள் மதிக்கப்படுகின்றன போலும்.
இத்தனை அதிகமான பால் சுரக்கும் பசுவை புனைவாக எடுத்துக் கொள்வதா இல்லை எங்கள் திருவில்லிபுத்தூரின் ஆண்டாள் நாச்சியார் பாடியது போல,
“தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்”
-என்பது போல பசுக்கள் இருந்திருக்குமோ என்று வியந்தேன். இங்கிருக்கும் மாடுகளிலிருந்து வரும் பாலில் ஏதோ சிறப்பான ஒரு சுவை இருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு இந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியிலிருக்கும் புற்கள் தான் காரணம் என்கிறார்கள். இத்தகைய சுவையான பாலிலிருந்து பெறப்படும் பால்கோவிற்கு மேலும் சுவை இருப்பதனால் தான் புவிசார் குறியீடும் தந்திருக்கிறார்கள். அப்படியானால் பன்றிமலைக் காட்டின் புற்களை மேய்ந்து அதில் செழிப்புற்று, துடியன் குறுக்கன் காணியிடமிருந்து பெறப்பட்ட அந்த காட்டுப்பசுவுக்கு அத்தகையதொரு வரம் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் ஜெ.
ஒரு வகையான தாய்மை உணர்வு கதை முழுவதுமாக விரவி இருந்தது. பசுவின் அந்த உணர்வு நிலையை ஐந்தறிவு உயிர்களும், சில பெண்களும் தவிற யாரும் அறிந்திருக்கவில்லை. நூறுவயதான மூத்த குறத்தி வேட்டச்சி தான் அம்மச்சிப்பசுவை தெய்வமாக நிறுத்தினாள் என்பதிலிருந்தே அது விளங்குகிறது. அமுதங்கள் விளைவிக்கும் நன்மைகளினால் ஒருவகை சமத்துவம் தழைத்தோங்கத் தொடங்குகிறது. அது கண்டு பொறுக்காத ஆணவம் மிக்கவர்களால் அது வெறுக்கப்படுகிறது.
” ஏன்னாஆணுக்குக்காமம்அகங்காரத்திலேயாக்கும். அது நிறையணுமானா பெண்ணு அடங்கணும். இப்ப எந்த பெண்ணுடே நிறைஞ்சு அடங்குதா? சொல்லுடே!” என்பவையெல்லாம் நீங்கள் காணிக்கும் அப்பட்டமான உண்மைகள் எனக்கு. பெண்களின் முன்னேற்றம் சுயாதீனத்தில், பலவீனத்தை வேரறுப்பதில் இருக்கிறது. சார்ந்து பெண்கள் வாழ்வத்ற்கான தேவை இருக்கும் நிலையை உருவாக்குவதே ஒவ்வொரு ஆணும் தன் கடமையாக செய்கிறான். சிலர் அதை அன்பு எனும் போர்வையிலும், சிலர் அதிகாரம் எனும் போர்வையிலும் செய்கின்றனர். எத்தகையதொரு அமுதத்தையும் பெண்களுக்குத் தடுத்துவிடலாம். ஆனால், இயற்கையின் அமுதத்தை யாராலும், யாருக்கும் தடுத்து விட முடியாது என்பது விளங்குகிறது ஜெ.
”ஒரு சொல் தணியாதவர்களாக, ஒரு சொல் பொறுக்காதவர்களாக” அந்தப் பெண்கள் அமையக் கிடைத்த அமுதமான அம்மச்சிப்பசு/அமிர்தலட்சுமி அன்னை அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்கப்பட வேண்டியவள்.
அன்புடன்,
இரம்யா.
100. வரம் [சிறுகதை]
99. முதலாமன் [சிறுகதை]
98. அருகே கடல் [சிறுகதை]
97. புழுக்கச்சோறு [சிறுகதை]
96. நெடுந்தூரம் [சிறுகதை]
95. எரிமருள் [சிறுகதை]
94. மலைவிளிம்பில் [சிறுகதை]
93. அமுதம் [சிறுகதை]
92. தீவண்டி [சிறுகதை]
91. பீடம் [சிறுகதை]
90. சிந்தே [சிறுகதை]
89. சாவி [சிறுகதை]
88. கழுமாடன் [சிறுகதை]
87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
86. தூவக்காளி [சிறுகதை]
85. சிறகு [சிறுகதை]
84. வண்ணம் [சிறுகதை]
83. ஆபகந்தி [சிறுகதை]
82. ஆமை [சிறுகதை]
81. கணக்கு [சிறுகதை]
80. சுக்ரர் [சிறுகதை]
79. அருள் [சிறுகதை]
78. ஏழாவது [சிறுகதை]
77. மணிபல்லவம் [சிறுகதை]
76. மூத்தோள் [சிறுகதை]
75. அன்னம் [சிறுகதை]
74. மலையரசி [சிறுகதை]
73. குமிழி [சிறுகதை]
72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
71. செய்தி [சிறுகதை]
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1
69. ஆகாயம் [சிறுகதை]
68. ராஜன் [சிறுகதை]
67. தேனீ [சிறுகதை]
66. முதுநாவல்[சிறுகதை]
65. இணைவு [சிறுகதை]
64. கரு [குறுநாவல்]- பகுதி 1
64. கரு [குறுநாவல்]- பகுதி 2
63. ‘பிறசண்டு’ [சிறுகதை]
62. நிழல்காகம் [சிறுகதை]
61. லாசர் [சிறுகதை]
60. தேவி [சிறுகதை]
59. சிவம் [சிறுகதை]
58. முத்தங்கள் [சிறுகதை]
57. கூடு [சிறுகதை]
56. சீட்டு [சிறுகதை]
55. போழ்வு [சிறுகதை]
54. நஞ்சு [சிறுகதை]
53. பலிக்கல் [சிறுகதை]
52. காக்காய்ப்பொன் [சிறுகதை]
51. லீலை [சிறுகதை]
50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]
49. கரவு [சிறுகதை]
48. நற்றுணை [சிறுகதை]
47. இறைவன் [சிறுகதை]
46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]
45. முதல் ஆறு [சிறுகதை]
44. பிடி [சிறுகதை]
43.. கைமுக்கு [சிறுகதை]
42. உலகெலாம் [சிறுகதை]
41. மாயப்பொன் [சிறுகதை]
40. ஆழி [சிறுகதை]
39. வனவாசம் [சிறுகதை]
38. மதுரம் [சிறுகதை]
37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]
36. வான்நெசவு [சிறுகதை]
35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]
34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
33. வான்கீழ் [சிறுகதை]
32. எழுகதிர் [சிறுகதை]
31. நகைமுகன் [சிறுகதை]
30. ஏகம் [சிறுகதை]
29. ஆட்டக்கதை [சிறுகதை]
28. குருவி [சிறுகதை]
27. சூழ்திரு [சிறுகதை]
26. லூப் [சிறுகதை]
25. அனலுக்குமேல் [சிறுகதை]
24. பெயர்நூறான் [சிறுகதை]
23. இடம் [சிறுகதை]
22. சுற்றுகள் [சிறுகதை]
21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
20. வேரில் திகழ்வது [சிறுகதை]
19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
18. தங்கத்தின் மணம் [சிறுகதை]
17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]
16. ஏதேன் [சிறுகதை]
15. மொழி [சிறுகதை]
14. ஆடகம் [சிறுகதை]
13. கோட்டை [சிறுகதை]
12. விலங்கு [சிறுகதை]
11. துளி [சிறுகதை]
10. வேட்டு [சிறுகதை]
9. அங்கி [சிறுகதை]
8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]
7. பூனை [சிறுகதை]
6. வருக்கை [சிறுகதை]
5. “ஆனையில்லா!” [சிறுகதை]
4. யா தேவி! [சிறுகதை]
3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
2. சக்தி ரூபேண! [சிறுகதை]
1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]