ஆன்மிகமும் படைப்பும்- கடிதங்கள்

எரிமருள் [சிறுகதை]

அன்பு ஜெ,

ஒரு கவிதையே கதையாய் தன்னை உருமாற்றிக் கொண்டது போல அமைந்திருக்கிறது இந்த ’எரிமருள்’. நான்’ முதிர்ந்த ஒரு தருணத்தில் என் தனிமையின் ஆழத்தை எண்ணி சிறுபிராய நான் –ஐ சென்று சந்தித்தார் போல இருந்தது.

எங்கோ தனிமை எனும் தேவதையின் ஒரு துளித் தேனை, மதுவை சுவைத்துவிட்டிருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன். தனிமையின் இனிமையை, அதன் அருகமர்வை முற்றிலும் தழுவ என்றுமே மனம் தயாராயிருக்கும் தான். ஒருவேளை யாரும் பார்க்கப்படாத இடங்களும், நிகழ்வுகளும், தருணங்களும், உயிர்களும், உருவங்களும் அந்த தேவதை வெளிப்படுத்தியதால் தானோ.

பேருந்துகளின் சன்னலோர தனிமைக்காக தவிர்த்த மனிதர்கள், சொற்கள், சல சலப்புத் தருணங்கள் என இவையாவுமே தனிமையின் தேவதை என்னை முத்தமிட, அணைத்துக் கொள்ள தவிர்த்தவை தானோ என்று நினைத்துக் கொண்டேன். யாருமறியாது, நான் அதிக நேரம் செலவிடும் இடங்கள் என் பள்ளி வளாகத்திலும், கல்லூரியிலும் இருக்கத் தான் செய்தது. கிடத்த நேரமெல்லாம் மனம் அங்கேயே சென்று உட்காரும். ஆம் அவள் என்னை முத்தமிட்டிருக்க வேண்டும்.\

தனிமையின் உச்சம் சொல்லி புரியவைக்க முடியாதவையே. நீங்கள் சொல்வது போல ளக்கப்பட முடியாத ஒன்றை உளம்கொண்டவனின் தத்தளிப்பு தான் அது.

தனிமைக்காக தியாகம் செய்த பிடித்த, பிடிக்காத, பெயர் தெரியாத நபர்கள், தருணங்கள், சொற்கள் இருக்கின்றன தான். ஆனால் ”எதனாலோ நீ அந்த ஒரு தருணத்திலிருந்து காலத்தை முன்னும் பின்னும் வெட்டிக்கொண்டாய். அதை குன்றாத கூடாத ஒரு துளிக்காட்சியென்றே நிறுத்திக்கொண்டாய்” எனும் வார்த்தைகளில் சற்றே சிலிர்த்துத் தான் விட்டேன். இது போன்ற என் வாழ்வின் மிகச் சில தருணங்களை நினைவு படுத்தினேன்.

இந்த இணையத்தின் முடிவிலி நிகழ்தகவு தரவுகளைப் போலவே இந்த உலக மனிதர்கள். அவர்களைத் தவிர்ப்பதன் தனிமை அளப்பரியது தான்.

”இங்கு எவ்வுறவும் மீண்டும் நிகழ்வதுதான். கருவறை புகுவதற்கு முன்னரே இருப்பதுதான். அறிகையில் நாம் திடுக்கிடுவது அதனால்தான். அணுகிய விரைவை எண்ணி வியப்பதும் அகலமுடியாமையை எண்ணி அஞ்சுவதும் அதனாலேயே. நீ என்னை அறிந்த முதற்கணத்தை ஒருபோதும் மறந்ததில்லை.” என்று சொன்னீர்களே. ஆம்! அவளை எண்ணிப் பார்த்தேன் அந்த முதற்கணத்தை, முதல் முத்தத்தை. நான் மறக்கவில்லை தான்.

இறுதி முடிபின் தழுவல்/முத்தம் என்பது காலத்தில் முதிர்ந்துவிட்ட/காலமே ஆகிவிட்ட நான் -ஐ அவள் தழுவ ஓடி வந்து கொண்டிருப்பதான ஒரு காட்சிப் பிம்பம் போல மனதில் பதிந்து விட்டது. செந்தழல் என மனதில் பற்றிக் கொண்டது. கவிதையே ஒரு கதையாய் நின்று விட்டிருக்கிறது என்னுள். அற்புதமான கதை.

அன்புடன்,

இரம்யா.

அன்புள்ள ஜெ

நூறுகதைகளை அவ்வப்போது மீண்டும் சென்று படித்துக்கொண்டிருக்கிறேன். பலகதைகளை இதற்குள் மனதுக்குள் நீண்டநேரம் ஓட்டிவிட்டேன். இப்போதுதான் கதைகளின் உண்மையான அர்த்தங்கள் பல புரிகின்றன

நிறைய கதைகளில் ஒரு முக்கியமான analogy உள்ளது. Creativity  மற்றும் sprituality இரண்டையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து கதைசொல்கிறீர்கள். அவை ஒன்றுக்கொண்டு தொடர்புடையவை. ஒன்றைச் சொல்லித்தான் இன்னொன்றைச் சொல்லமுடியும்.

உதாரணமாக இன்னதென்று அறியாத சிற்பத்தைச் செய்துவிடும் செவிட்டூமையான சிற்பியின் கதையான ஆகாயம். அதை Creative அனுபவம் spritual என்பதா இல்லை அனுபவம் என்பதா என்பதுதான் நுட்பமான மர்மம்.அதேபோல பல கதைகள். குமிழி. அதுவும் குழந்தைப்பிறப்பு என்ற spritual அனுபவத்தை Creative அனுபவமாக மாற்றிக் காட்டுகிறது. தேவி போன்ற கதைகள்கூட தெய்வம் பலமுகம் கொள்ளும் அனுபவத்தை நடிகை மேடையில் வெளிப்படும் அனுபவமா மாற்றிக் காட்டுகின்றன. குருவி, இறைவன் எல்லா கதைகளுமே இந்த வரிசையில் வந்துவிடும்

இந்தக்கோணம் வந்தபிறகு பல கதைகளை மிக ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது

ஆனந்த் குமார்

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைஆனந்தரங்கம்பிள்ளை- கடிதம்
அடுத்த கட்டுரைஇலக்கியப்படைப்புக்களை கதையாகச் சொல்லலாமா?