மல்லர் கம்பம் நிகழ்ச்சி
ஆசிரியருக்கு வணக்கம்,
எங்களது கிளப் டென் அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்திருந்த மல்லர் கம்பம் இணையவழி நிகழ்ச்சி கடந்த 27-09-2020 குறித்த நேரத்தில் அந்த கலைஞர்கள் நடத்தி காண்பித்தார்கள் .
நிகழ்ச்சி துவங்கும் ஒரு மணிநேரத்திற்கு முன் பெய்த கடும் மழையால்,நடத்த முடியுமா என கலக்கத்தோடு இருந்த நேரம் வருண பகவான் கருணை காட்டியாதால் .நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம்,
அதன் காணொளிபதிவை இத்துடன் இணைத்துள்ளேன் .
அவர்களின் திறமையை வார்த்தையால் விவரிக்க தேவை இல்லை . கண்கள் நிரம்ப நான் பார்த்தேன்.
ஷாகுல் ஹமீது