மலைவிளிம்பும் தங்கநூலும்- கடிதங்கள்

ஓசூர் வழியோர மலை

மலைவிளிம்பில் [சிறுகதை]

அன்பு ஜெ,

மாற்று/ இணை பிரபஞ்சம் ஒரு வகையான மாற்று வரலாற்றை உருவாக்க வல்லதென்ற  அறிவியல் புனைவுகள் என்னை எப்பொழுதுமே மெய்சிலிர்க்க வைப்பவைதான். வாழ்வின் மிக முக்கியமான தருணங்களின் போது அதை கூர்ந்து நோக்க அது எனக்கு இருவழிப்பாதையாகத்தான் காட்சியளித்திருக்கிறது. முதன் முதலில் இருவழிப் பாதை/ இருவேறு நிகழ்த்தகவுகள் கொண்ட வழி பற்றிய செய்தியை என் பள்ளிப் பருவத்தில் ராபர்ட் ஃப்ராஸ்ட் -ன் கவிதை வாயிலாகத் தான் அடைந்தேன். என்றும் நினைத்துப் பார்க்கும் வரிகள் அவை.

“Two roads diverged in a yellow wood,

And sorry I could not travel both

And be one traveler, long I stood

And looked down one as far as I could

To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,

And having perhaps the better claim,

Because it was grassy and wanted wear;

Though as for that the passing there

Had worn them really about the same,

And both that morning equally lay

In leaves no step had trodden black.

Oh, I kept the first for another day!

Yet knowing how way leads on to way,

I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh

Somewhere ages and ages hence:

Two roads diverged in a wood, and I—

I took the one less traveled by,

And that has made all the difference.”

இந்த வரிகளின் விளிம்பில் கண்ர்த் துளிகள் வராமல் இருந்ததேயில்லை. வாழ்வின் விளிம்பில் இதை சொல்லிக் கொள்ள ஏதுவான பாதையை யே நான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற அவா இருக்கிறது. நம் வாழ்வின் அத்தகையதான தருணங்களை ஒவ்வோர் காலகட்டத்திலும் வாழ்க்கை கொணர்ந்து முன் சேர்த்து பதிலுக்காக காத்துக் கிடக்கும். அதில் நாம் தேர்ந்தெடுக்க வழியையும் ஒருவாறு புலப்படுத்தும் தான். ஆனால் முடிவெடுக்கும் அதிகாரம் நிகழ்வுகளுக்கில்லை. சதைப்பிண்டமுள்ள ஆன்மாவுக்கே அது கொடுக்கப்படுகிறது.

ஒரு வகையில் கதையின் நாயகனுக்கும் அத்தகையதொரு இரு வழி நிகழ்த்தகவுப் பாதையைக் கொடுத்திருந்தீர்கள். அவன் தேர்ந்தெடுத்து சென்ற பாதையின் கீழ்மையை, ஒரு வகை தாமோ நிலையை அடைந்து அவன் இறந்துபட்டதாக தெறிந்தபோது என்னையறியாமல் அவன் மேல் ஒரு வெறுப்புணர்வு படர்ந்திருந்தது. வாழ்வின் உச்சகட்ட துரோகத் தோல்விகளில் சிக்குண்ட மனிதர்களின் ஒரு வழிப்பாதையை சொல்லியிருந்தீர்கள். இன்னொரு பாதையொன்று உண்டு. அது ராஜோ கர்மாவை பாதையாக்கி நீள்வது. ”தாமோ குணத்தை விட  ராஜச குணம் எவ்வளவோ மேலானது” என்ற வரிகளை நினைவு கூற்கிறென். அத்தகையதொரு பாதையை அவன் தேர்ந்தெடுத்திருந்தால்???? என்ற கேள்விக்கான புனைவை வசகர்கள் எங்களிடம் விட்டிருந்தீர்கள். அது புனைவு வெளியை வாசகனே கட்டமைக்க ஏதுவான இடம்.

“சாவதற்கு முன் உணர்ந்தேன், எனக்கு அளிக்கப்பட்ட அந்த வாய்ப்பை நான் தவிர்த்தபோது தெய்வத்தின் கையை தட்டிவிட்டிருக்கிறேன்.” என்று கதையின் நாயகன் நினைக்கும் தருணத்தைப் பற்றி எப்பொழுதுமே பயம் எனக்கு. அந்த ஒரு கணம் என்றைக்கும் வந்துவிடக்கூடாது என்றே அந்த இரு வழி நிகழ்த்தகவு பாதையை நான் அடையும் போதெல்லாம் கூர்ந்து யோசிப்பதுண்டு. திரும்பத்திரும்ப ஓர் உள்ளுணர்வால் உந்தப்பட்டாலொழிய அந்தப் பாதையை நான் தீவிரமாக பற்றுவது கிடையாது.

“எதிர்காலத்தை தானே  முழுமையாகத் திட்டமிட்டு அமைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கையில் மனிதன் தெய்வத்தை அவமதிக்கிறான். திறக்கும் நல்வாய்ப்புகளின் வழியாக தன்னை நம்பி, தெய்வத்தை நம்பி ,துணிந்து முன்செல்பவன் தான் விரும்பியதை அடைகிறான். விரும்பிய ஒன்றை பயத்தால் கைவிடுபவன் எதையுமே அடைய தகுதியற்றவனாக தன்னை ஆக்கிக்கொள்கிறான்.”  என்ற உங்களின் வரிகளை உபதேசமாக நெஞ்சில் நிறைக்கிறேன்.

இறுதி முடிபில் மிச்சமிருக்கும் ஒரு நிகழ்த்தகவு வாய்ப்புக்காக மகிழ்கிறேன். அதற்கான் புனைவை நானே எழுதிக் கொண்டேன். அது அந்த நல்வாய்ப்பை பயன்படுத்துவதான முடிபு. மலைவிளிம்பில் கவனமோடு நின்றிருக்கும் துரோகங்களின் முடிபுக்கான வாய்ப்பைத் தவரவிடாத முடிபு.

அருமையான கதை ஜெ. நாயகனின் பயணப் பாதையை பற்றிய நுணுக்கமான சித்தரிப்பும் அருமை ஜெ. நன்றி.

அன்புடன்,

இரம்யா.

‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் கதையை மிக விரும்பி வாசித்தேன். நானும் ஒரு நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு கேள்வி வந்தது. மதநூல்கள் மட்டும் ஏன் இப்படி முடிவே இல்லாமல் வாசிக்கத்தக்கவையாக இருக்கின்றன? உதராணமாக ஷேக்ஸ்பியர் நாடகங்களை நாள்தோறும் ஐம்பதாண்டுகள் வாசிக்கமுடியுமா? ஆனால் பைபிளை வாசிக்கிறார்கள்.

அதற்கு நண்பர் பதில் சொன்னார். உண்மையில் மதநூல்கள் அவ்வளவு ஆழமானவை அல்ல. அவற்றை வாசித்து வாசித்து இவர்கள் ஆழமாக ஆக்குகிறார்கள். எந்த நூலையும் அப்படி உரையெழுதி விளக்கி ஆழமாக ஆக்கலாம். முடிவில்லாததாக ஆக்கலாம். அதை ஈடுபாட்டுடனும் நம்பிக்கையுடனும் செய்தால்போதும்

தங்கப்புத்தகம் என்பது நம் நம்பிக்கை. நம் மனம். அந்த அர்த்தத்தில் வாசித்தால் இந்தக்கதை மிக ஆழமானதாக ஆகிவிடுகிறது

டி.ராகவேந்திரன்

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

முந்தைய கட்டுரைவண்ணக்கடல்- சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைதிருமூலரும் வேதாந்தமும்