மழைப்பாடல்- சுரேஷ் பிரதீப்

தொன்மங்களை கதை நகர்வுடன் இணைத்து விவரித்துக் கொள்ளும் பயிற்சியை முதற்கனல் அளித்திருந்தாலும் மழைப்பாடல் மேலு‌ம் சிக்கலான பரிணாமம் கொண்ட தொன்மங்களைக் கொண்டுள்ளது. அதேநேரம் அவற்றை இணைத்துக் கொள்ள முடியாததும் வாசிப்பிற்கு தடையாக இருக்காது என்றே எண்ணுகிறேன். மேலும் பல அத்தியாயங்கள் தொடங்கும் இடத்திலிருந்து பல்வேறு நிகழ்வுகளினூடாக பயணித்து மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்து நிற்கின்றன. எக்குறிப்புகளும் இல்லாமல் அத்தியாயத்தின் திசை மாறுவதையும் மீண்டும் வந்து இணைந்து  கொள்வதையும் துல்லியமாக பிரித்தறிய முடிகிறது.

மழைப்பாடல்- சுரேஷ் பிரதீப்

முந்தைய கட்டுரைகி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு
அடுத்த கட்டுரைஅழகிய நதி- கடலூர் சீனு