அருகாமை- கடிதங்கள்

 அன்புள்ள ஜெ,

“அருகாமை” பதிவை இப்போதுதான் படித்தேன். இன்று காலையில் ஆங்கிலத்தில் சொற்கள் மாறுவதை பற்றிய ஒரு பதிவை படித்தேன்.

Irregardless of your agreeance: language pedants are crying foul too often

https://www.theguardian.com/education/2020/sep/29/irregardless-of-your-agreeance-language-pedants-should-know-when-not-to-care

நன்றி

டி.கார்த்திகேயன்

***

அன்புள்ள ஜெ

நலம்தானே?

வீட்டுக்கு வந்திருந்தேன். நீங்கள் பயணம் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.

அருகாமை பற்றிய கட்டுரை வாசித்தேன். இந்த விஷயம் ஏற்கனவே பலமுறை அறிஞர்களால் தெளிவுபடுத்தப்பட்டது. ஆனாலும் இதை விடாப்பிடியாகச் சொல்லிக்கொண்டிருந்தவர் நன்னன் என்பவர். இவர் மக்கள் டிவியில் தமிழ்சொல்லிக்கொடுத்தவர். உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராக இருந்தவர். ஆனால் பெரிய தமிழறிஞர் என்ற அடையாளம் எப்படியோ அவருக்கு வந்துவிட்டது. திராவிடவெறுப்பு கக்குபவரும்கூட. தமிழை அத்தனைபேருமே தப்பாக உச்சரிப்பதுபோலவும் அதைத்திருத்த தான் மட்டுமே பொறுப்புள்ளவர் என்பதுபோலவும் ஒரு பாசாங்கு அவருக்கு உண்டு. முகம்சுளித்தபடித்தான் பேசுவார். இலக்கணம் பற்றி அவர் சொன்னவை பெரும்பாலும் ஆரம்பப்பள்ளி இலக்கணம். அதை கொண்டு நல்ல தமிழை உருவாக்க முடியாது. அதை பலர் சொல்லியும் அவர் கேட்கவில்லை

இப்போது இலக்கணம் பேசுபவர்கள் பெரும்பாலும் நன்னனிடமிருந்தே இந்த இலக்கணங்களை கற்றுக்கொண்டிருக்கிறார்கள். டைனமிக் கிராமர் என்பதையே இவர்கள் அறிந்திருப்பதில்லை

எஸ்.ராஜராஜன்

***

அன்புள்ள ஜெ

அருகாமை பற்றிய குறிப்பை வாசித்தேன். அதைத் தெளிவு படுத்திக்கொள்ள இணையத்தில் ஒருமுறை தேடினாலே போதும். வையாபுரிப்பிள்ளையின் அகராதியே இணையத்தில் கிடைக்கிறது. அதைக்கூட செய்யத்தெரியாதவர்களின் பேச்சு இதெல்லாம்.

ஆர்.கிருஷ்ணமூர்த்தி

முந்தைய கட்டுரைஅம்பை
அடுத்த கட்டுரைபொருள்முதல் எதிர் கருத்துமுதல்