அன்புள்ள ஜெயமோகன்,
“யாருக்காக” என்ற கவிதை மட்டும் தான் இந்த பதிவில் முந்தி நிற்கிறது. அடிநிலை மக்கள் இன்னுமும் இந்தியாவில் உணவுக்காக கையேந்துகிறார்கள். கோவில் வாசலும் முக்கிய சாலைகளும் அவர்களால் நிறைந்து உள்ளது.
உலக நாடுகள் அனைத்திலும் இந்த நிலைமை இல்லாமல் இல்லை.நாம் பணக்கார நாடாக எண்ணும் இங்கிலாந்தில் கூட கை எந்துபவர்கள் இருகிறார்கள். அவர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நம்மிடம் கூட கையேந்துவது தான் கொடுமை.
எத்தனை இலக்கியங்களும் கவிதைகளும் படைக்கப்படாலும், எத்தனை எழுத்தாளர்கள் விருதுகள் பெற்று, வாசகர்களைப் பெற்று, தத்துவங்களும்,நாவல்களும்,சிறுகதைகளும்,கவிதைகளும் அந்த விளிம்பு நிலை மக்களைப் பற்றியே எழுதினாலும் அவர்கள் படிப்பதில்லை. திரைப்படங்களுக்கும் இதே நிலைமை தான்.
யாருக்காக எழுதுகிறோம்,படிக்கிறோம்,முடிவில் பெற்றது என்ன?
என்றும் அன்புடன்,
சி.கார்த்திக்
அன்புள்ள கார்த்திக்
அந்தக்கவிதைகள் பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் ருஷ்யாவின் சைபீரிய முகாமில் உள்ளவர்கள் எழுதிய கவிதைகளின் மொழி பெயர்ப்பு என்றவடிவில் உள்ளன. அந்தக் கோணத்தில் இதை வாசிக்கலாம்
ஜெ