அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க

அ.கா.பெருமாள் அறிமுகம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். தாங்கள் அடுத்த நிகழ்வு.  நாட்டார் வழக்காற்றியல் துறையில் பல நூல்களை எழுதியுள்ள திரு அ.கா. பெருமாள் அவர்களுடன் நடத்தலாம் என்று சொன்னதுமே, அவர் நூல்களை வாங்க அமேசானிலும், தமிழ் இணையதளங்களிலும் குறிப்பாக ebooks, தேட ஆரம்பித்தேன். தளத்தில் , நீங்கள், வாசகர்கள் எழுதிய கட்டுரைகளின் மூலம்,  அவரின் முக்கியத்துவத்தையும், நூல்களையும் அறிந்திருந்தாலும், அவருடைய   ஒரு நூலையாவது  முழுமையாக வாசித்துவிட்டு அவரிடம் பேசலாமென, வாங்குவதற்காக தேடினேன்.

amazon.com-ல் மூன்றே மூன்று புத்தகங்கள் இருந்தன.

வயல்காட்டு இசக்கி

அகிலத்திரட்டு அம்மானை

சடங்கில் கரைந்த கலைகள்

பூதமடம் நம்பூதிரி

Tamildigitallibrary.in-ல் இரண்டு புத்தகங்கள் கிடைத்தன.

இலவச பிடிஎஃப்  நூல்கள்

கன்னியாகுமரி – அன்னை மாயம்மா
தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியின் கணிப்பு

Archive.org-ல் ஒரே ஒரு புத்தகம் இருந்தது.

நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி

நான், இன்றும் எழுதவதற்கு முன், ‘அ’ என்று போட்டுவிட்டு எழுதுபவன்.  அம்மா , அப்பா மேல் உள்ள பற்று, முதலில் எழுதிய எழுத்து , ‘அ’ இப்படி பல காரணங்கள்.  அ.கா. பெருமாள், அவரது புத்தகங்கள் என் அம்மாவுக்கு , சமர்ப்பணம் அம்மாவுக்கு என்று இருக்க, அட, இவரும் நம்மளாட்ட அம்மா பிரியர் போல என்று, கன்னியாகுமரி – அன்னை மாயம்மா, நூலை முதலில் வாசித்தேன். கடலோரக் குப்பைகளை பொறுக்கி தீ வைக்கும் அந்த அன்னையின் வரலாற்றில் அமானுஸ்யம் நிறைந்து இருந்தாலும், அ.கா. பெருமாள் அவர்கள் ஆய்வும் செய்து தரவுகளுடன் எழுதியுள்ளதால், .அமானுஸ்யம் மறைந்து உண்மையே நிற்கிறது. என்ன ஒரு அருமையான வாழ்க்கை என்று கன்னியாகுமரி அன்னை மாயம்மாவின் மேல் பொறாமையாகவும் இருந்தது. அடுத்து , தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியின் கணிப்பு வாசிக்க இருக்கிறேன்.   நிகழ்வு ஆரம்பிக்குமுன், மேற்கொண்ட நூல்களை வாசித்துவிடுவேன்.

தொடர்ந்து ஒவ்வொரு மாபெரும் ஆளுமைகளுடன் உரையாடல்களை ஏற்பாடு செய்து, வெகு நாட்களாக நிலுவையில் இருக்கும், அ.கா. பெருமாள் போன்ற ஆளுமைகளின் அபுனைவு நூல்களையும் வாசிக்க வைக்கும் தங்களின் இந்த முயற்சிக்கு மிக்க நன்றியும், வணக்கங்களும்.

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

ஆஸ்டின்.

நகர்நடுவே நடுக்காடு
அ.கா.பெருமாள்:குமரி
பண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம், அ.கா.பெருமாள்
அ.கா.பெருமாள்
அ.கா.பெருமாள்
அ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி
அ.கா.பெருமாள் அறுபது
அ.கா.பெருமாளின் தமிழறிஞர்கள் – கடிதம்
அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’
வயக்காட்டு இசக்கி
பறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து
திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு
ஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…
முந்தைய கட்டுரைமுரசும் சொல்லும்- காளிப்பிரசாத்
அடுத்த கட்டுரைசென்றவரும் நினைப்பவரும்-கடிதங்கள்