திசை தேர் வெள்ளம்-ஊழின் பெரு நடனம்- அந்தியூர் மணி

இருளின் வடிவாக தோன்றும் அம்பை பீஷ்மரை அழிக்கும் பொருட்டும்,அதை தடுக்கும் பொருட்டு ஒளியின் வடிவாக கங்கையும் பொருதும் போரில் தொடங்கும் நூல் போரின் இழப்பால் வஞ்சம் தீர்ந்த பின் எஞ்சும் பயனின்மையினால் ஒருவருக்கொருவர் ஆறுதலாக மாறும் நிலையில் முடிவுறுகிறது.கொள்கையின் பொருட்டு வாழ்ந்து அன்னையின் ஒளி பெற்ற பீஷ்மர் ஒளியை தொடரும் இருள் போல அம்பை உருவாக காரணமாகிறார்.கொள்கை எனும் அன்னையின் கொடைகளான நற்பண்புகளான சகோதர்களுடன் களமிறங்கும் ஒருவன் தான்  உருவாக்கிய செயலின் விளைவால் அனைத்தையும் இழக்கும் மானுட துன்பியல் நாடகம் இது.

திசை தேர் வெள்ளம்-ஊழின் பெரு நடனம் 

 

முந்தைய கட்டுரைஅஞ்சலி:அ.மா.சாமி
அடுத்த கட்டுரைசாக்ரட்டீஸ்,ராஜாஜி,ஈவெரா- பாடபேதங்கள்