மழைப்பாடல் வாசிப்பனுபவம் மிகச்சில புத்தகங்கள் அளிக்கக்கூடியது. டால்ஸ்டாயை கணம்தோறும் நினைத்துக்கொண்டேன். பதினெட்டு நாட்கள் ஆனது வாசிக்க. ஒரு கட்டத்துக்கு மேல் இது முடியவே கூடாது, போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியபடி இருந்தது. நிலங்களும் மனிதர்களும் மட்டும் தான், ஆனால் எல்லா கதைகளும் அவ்வளவுதான் என்றும் தோன்றியது. நிலமும் மனிதரும். மழைப்பாடலில் வந்த நிலைக்காட்சிகள் அனைத்தும் பதினோரு வயதுக் கண்களால் பார்த்தேன்
வெண்முரசு தொடர்பானவை வெண்முரசு வாசிப்பு- சுசித்ரா