இங்கிருந்து சென்றவரிடம்

 

ஈ கடலும் மறு கடலும்
பூமியும் மானமும் கடந்நது
ஈரேழு பதினாலு லோகங்ஙள் காணான்
இவிடுந்நு போணவரே
அவிடே மனுஷனுண்டோ? அவிடே மதங்களுண்டோ?

இவிடே மனுஷ்யன் ஜீவிச்சிருந்நதாய்
இதிகாசங்ஙள் நுணபறஞ்ஞு
ஈஸ்வரனே கண்டு இபிலீஸினே கண்டு
இதுவரே மனுஷ்யனே கண்டில்ல
கண்டில்ல கண்டில்ல மனுஷ்யனே கண்டில்ல
இவிடே சமத்வம் பூவிட்டிருந்நதாய்
வெறுதே மதங்கள் நுண பறஞ்ஞு
ஹிந்துவினே கண்டு முஸல்மானே கண்டு
இதுவரே மனுஷயனே கண்டில்ல
கண்டில்ல கண்டில்ல மனுஷ்யனே கண்டில்ல

[தமிழில்]

இந்த கடலையும் மறுகடலையும்
பூமியும் வானமும் கடந்து
ஈரேழு பதினாலு உலகங்கள் கடந்து
இங்கிருந்து சென்றவர்களே
அங்கே மனிதன் உண்டா?
அங்கே மதங்கள் உண்டா?

இங்கே மனிதன் வாழ்ந்திருந்ததாக
இதிகாசங்கள் பொய் கூறின
ஈஸ்வரனைக் கண்டேன் இபிலீஸைக் கண்டேன்
மனிதனை காணவில்லை

இங்கே சமத்வம் மலர்ந்திருந்ததாக
மதங்கள் பொய் கூறின
இந்துவை கண்டேன் முசல்மானைக் கண்டேன்
மனிதனை மட்டும் காணவில்லை

[படம் கடல்பாலம். 1969

பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் [மலையாளத்தில் பாடிய முதல்பாடல்]

இசை தேவராஜன்

எழுதியவர் வயலார் ராமவர்மா

முந்தைய கட்டுரைநூறுகதைகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…