பால் சலோபெக்கின் பயணம்

https://www.nationalgeographic.org/projects/out-of-eden-walk/#section-0

அன்புள்ள சார்,
அமெரிக்காவை  சேர்ந்த இதழாளர் பால் சலோபேக்-கின் இந்த நடை பயணம் ஆர்வமூட்டுகிறது. ஆதி மானுடர்களின் வழியில்… இதியோப்பிவியால் தொடங்கி தென்னமெரிக்கா வரை நடை பயணமாக செல்ல வேண்டும் என்பது  திட்டம். மொத்தம் சுமார் 31,000 கிலோமீட்டர்கள். இந்த வருடம் மார்ச் மாதத்தில் இந்தியாவும் வந்துள்ளார். இங்கு கங்கையின் கரை வழியாக பயணித்து மியன்மார் சென்றார். எனக்கு ஆர்வம் ஊட்டுவது அவரின் பயண குறிப்புகள் தான். அவர் செல்வதெல்லாம் கிராமங்களுக்கு… விவசாயிகள், மேய்ச்சல் மக்களிடம் அதிகமாக உரையாற்றுகிறார். அந்த கிராமங்களிலேயே தங்கி கொள்கிறார். பிள்ளைகளுக்கு கை தொழில் சில கற்று தருகிறார். இந்த கிராமங்களின் வாழ்க்கை முறையை எழுதுகிறார். இதெல்லாம் தான் சரித்திரம் என்கிறார். உலகின் ஒட்டு மொத்த சாமானியர்களின் வாழ்க்கை குறிப்புகளின் பெட்டகமாக இதைஎல்லாம் நேஷனல் ஜாக்ராபிக் தளம் வெளியிடுகிறது. அவர்களுக்கே உரிய அருமையான காட்சி தொகுப்புகளுடன் இந்த கட்டுரைகளை அளிக்கிறார்கள். பால் ச்லோபெக்  இதழியலில் உயரிய விருதான புலிட்சர் பரிசை இரண்டுமுறை வாங்கியவர். அதிக காலம் ஆப்பிரிக்காவில் வேலை பார்த்தவர்.
2013-இல் ‘அவுட் ஆப் ஏதேன்’ என்ற இந்த பயணத்தை தொடங்கினார். குறைந்தது இன்னொரு ஐந்தாண்டுகள் இந்த பயணம் நீழலம் என்று சொல்கிறார்கள். எங்கள் பத்திரிக்கையில் அவரை பற்றி எழுதினோம்.  உங்களிடமும் பகிரலாம் என்று நினைத்தேன்.
மிக்க அன்புடன்,
ராஜு
முந்தைய கட்டுரைவெண்முரசு மறுவாசிப்பு
அடுத்த கட்டுரைஇளிப்பியல்- கடிதங்கள்