எளிமையின் குரல்

அன்புள்ள ஜெ

காஸ்யபனின் அசடு வாசித்தேன். அதில் மலையாள வேதாந்த பாடலான ஞானப்பானை பற்றி குறிப்பிடுகிறார். வேதாந்த வகுப்பிலும் ஞானப்பானையிலிருந்து ஒரு மேற்கோள் அளித்தார் ஆசிரியர். தேடிப் படித்தேன். பூந்தானம் நம்பூதிரியின் வாழ்க்கை அவருடைய பாடல்கள் பற்றி அறிந்துகொண்டேன். அவருக்கு நெடுநாளைக்கு பிறகு பிறந்த குழந்தை கொதிக்கும் உலையில் வழுக்கி விழுந்து மரிக்கிறான்.

உன்னி கிருஷ்ணன் மனசில் களிக்கும்போல்

உன்னிகள் பத்து வேணுமோ மக்களே?”

எனும் வரியை வாசித்தபோது பதைத்தது. நம் சித்தர் பாடல்களை போன்ற அதே அமைப்பு கொண்டதாக ஓசை நயம் கூடியதாக தோன்றியது. நீங்கள் எதுவும் எழுதி இருக்கிறீர்களா என தேடினேன். பகடி பற்றிய கட்டுரையில் ஒரேயொரு முறை குறிப்பிட்டு உள்ளீர்கள். தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டியது கூட இல்லை. தமிழில் எழுதினாலே போதும் எனத் தோன்றியது.

இவரைப்பற்றி மேலும் அறிய ஆவல்.

https://youtu.be/9eiSYYX08DA  சித்ரா பாடியது

சுனீல் கிருஷ்ணன்

அன்புள்ள சுனீல்,

காசியபனின் அசடு பற்றி எனக்கும் சுந்தர ராமசாமிக்கும் ஒரு விவாதம் நடந்தது. அதற்கு ஆசிரியர் பெயரையும் அசடு என்றே வைத்திருக்கலாம் என்பது என் எண்ணம். அசட்டு நீள்கதை. அதற்கு சுரா ஆகோ ஓகோ என ஒரு முன்னுரை எழுதியிருந்தார். குளத்து அய்யர் என்னும் காசியபன் சுராவுக்கு பிடித்த ஆளுமை, அவ்வளவுதான். நான் சொல்ல சுரா கடுமையாக முகம்சிவந்து அமைதியாக இருந்தார்.

பூந்தானத்தின் ஞானப்பானைக்கு மலையாள இலக்கியத்தில் முக்கியமான இடமுண்டு. இ.எம்.எஸ்.அதை ஒரு தலையாய இலக்கியப்பிரதி, முன்னோடிப்படைப்பு என்று கருதினார். கல்பற்றா நாராயணன் வரை நவீனஇலக்கியவிமர்சகர்கள் ஆழமாக எழுதியிருக்கிறார்கள்.

ஏன்?மலையாளமொழியின் இரண்டு முகங்கள் ஒன்று சம்ஸ்கிருதம் ஓங்கிய செவ்வியல்மொழி. இன்னொன்று நாட்டுமலையாளம் என்னும் எளிய மக்கள்மொழி. ஆரம்பகட்ட மலையாள இலக்கியங்கள் எல்லாமே தொண்ணூறுசதம் சம்ஸ்கிருதம்தான்.சம்பு காவிய இயக்கம் முதல் உண்ணாயிவாரியரின் நளசரிதம்வரை.

அந்தப்போக்கில் இருந்து வேறுபட்டு நாட்டுமலையாளத்தில் எழுதியவர் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன். அவருக்கு அன்று இலக்கியமதிப்பு இல்லை. ஆனால் பின்னர்வந்த கவிஞர்கள் அவரை முதன்மையானவராக கருதினர். மலையாளப்பண்பாட்டின் தலைமகனாக, மலையாளமொழிக்கே தந்தையாக அவரை நிலைநாட்டியவர்கள் கேசரி பாலகிருஷ்ண பிள்ளை முதல் இ.எம்.எஸ் வரையிலானவவர்கள்.

பூந்தானம் நம்பூதிரி பற்றி சில தொன்மகதைகள் மட்டுமே உள்ளன. பூந்தானம் [பூங்காவனம்] என்னும் நம்பூதிரி மனையில் பிறந்தவர். இது பெரிந்தல்மண்ண அருகே உள்ள கீழாற்றூர் என்னும் ஊரில் உள்ளது. கிபி பதினைந்து அல்லது பதினாறாம் நூற்றாண்டில் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சந்தானகோபாலம் பானைப்பாட்டு, குசேலவிருத்தம் பானைப்பாட்டு இவர் பெயரில் உள்ளது.சில தோத்திரங்களும் உள்ளன.

பூந்தானம் நம்பூதிரி பற்றி ஒரு நல்ல கட்டுரை தமிழில் எழுதப்பட்டு இணையத்தில் கிடைப்பது ஆச்சரியம்தான். [ஞானப்பானை] பானை என்பது ஒரு தாளவாத்தியம். பானையேதான், வாயில் தோல்கட்டப்பட்டிருக்கும். அதை தமிழில் தோல்பானை என்பார்கள். விம்மலோசை எழுப்பும். ரீம்ரீம் என. அதாவது மயில் அகவுவதுபோல. அதற்கேற்ப பாடப்படுவதனால் இந்தப்பாடலுக்கும் பானை என்று பெயர். இந்த நாட்டர்ப்பாடல் வடிவம்தான் தமிழின் அகவல்பாடலின் முதல்வடிவம். நாட்டார்மரபில் அப்படியே நீடிக்கிறது. இந்த பாடலே ஆசிரியப்பாவின் வடிவில் இருப்பதைக் காணலாம்.

இப்பாடலில் உள்ள பல வரிகள் மலையாளிகளுக்கு பழமொழி போல

கண்டு கண்டு இருக்கும் மக்களை

காணவில்லை என்று ஆக்குவந்தும் நீ

இண்டு நான்கு நாளில் ஒருவனை

பல்லக்கில் ஏற்றி கொண்டுசெல்வதும் நீ

மாளிகைமேல் ஏறிய மன்னனின்

தோளில் துணித்தூளி ஏறச்செய்வதும் நீ.

போன்ற வரிகள் ஓர் உலகியல்விவேகமே ஞானமாவதன் தருணங்களை அளிப்பவை.

எளிமையான பக்திக்கவிதை. ஆனால் பக்தி இயக்கத்தின் மைய உணர்ச்சியான உலகவிலக்கமும் இறைப்பணிவும் ஒருங்கே கொண்டது. கேரளத்தின் வீடுகளில் அந்தியில் பாடப்படுவது. என் அம்மா மிக இனிமையாகப் பாடுவார்கள்.

ஜெ

ஞானப்பானை

வந்தனம்

குருநாதன் துண செய்க சந்ததம்
திருநாமங்ஙள் நாவின் மேலெப்பொழும்
பிரியாதே யிரிக்கேணம் நம்முடே
நரஜன்மம் சபலமாக்கீடுவான்

கிருஷ்ண கிருஷ்ண முகுந்தா ஜனார்த்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்சுதானந்த கோவிந்த மாதவ
சச்சிதானந்த நாராயணா ஹரே

காலலீல

இன்னலயோள மெந்தெந்நறிஞீலா
இன்னி நாளையுமெந்தெந்நறிஞீலா
இன்னிக் கண்ட தடிக்கு விநாசவும்
இன்ன நேரமென்னேது மறிஞ்ஞீலா

கண்டு கண்டங்ஙிரிக்கும் ஜனங்ஙளெ
கண்டில்லென்னு வருத்துன்னதும் பவான்
ரெண்டு நாலு தினம் கொண்டொருத்தனெ
தண்டிலேற்றி நடத்துன்னதும் பவான்

மாளிக முகளேறிய மன்னன்றெ
தோளில் மாறாப்பு கேற்றுன்னதும் பவான்

அதிகாரபேதம்

கண்டாலொட்டறியுன்னு சிலரிது
கண்டாலும் திரியா சிலர்க்கேதுமே
கண்டதொன்னுமே சத்யமல்லென்னது
முன்பே கண்டிட்டறி யுன்னிது சிலர்

மனு ஜாதியில் தன்னெ பலவிதம்
மனஸ்ஸின்னு விசேஷ முண்டோர்க்கணும்
பலர்க்கும் அறியேண மென்னிட்டல்லோ
பல ஜாதி பறயுன்னு சாஸ்த்ரங்ஙள்
கர்மத்திலதிகாரி ஜனங்ஙள்க்கு
கர்ம சாஸ்திரங்ஙளுண்டு பலவிதம்
சாங்க்ய சாஸ்திரங்ஙள் யோகங்களன்னிவ
சங்கியில்லது நில்கட்டெ சர்வவும்

தத்வ விசாரம்

சுழந்நீடுன்ன சம்சார சக்ரத்தில்
உழந்நீடும் நமுக்கறிஞீடுவான்
அறிவுள்ள மஹத்துக்களுண்டொரு
பரமார்த்தமருள் செய்திரிக்குன்னு
எளுதாயிட்டு முக்தி லபிப்பானாய்
செவி தன்னிது கேள்ப்பின் எல்லாவரும்

நம்மயொக்கெயும் பந்திச்ச ஸாதனம்
கர்மமென்னறி யேண்டது மும்பினால்
முன்னமிக்கண்ட விஸ்வமசேஷவும்
ஒன்னாயுள்ளோரு ஜ்யோதிஸ்வரூபமாய்
ஒன்னும் சென்னங்ஙு தன்னோடு பற்றாதே
ஒன்னினும் சென்னு தானும் வலயாதெ
ஒன்னோன்னாயி நினக்கும் ஜனங்ஙள்க்கு
ஒன்னு கொண்டறி வாகுன்ன வஸ்துவாய்
ஒன்னிலும் அறியாத்த ஜனங்கள்க்கு
ஒன்னு கொண்டும் திரியாத்த வஸ்துவாய்
ஒன்னு போலே ஒன்னில்லாதெ யுள்ளதின்
ஒன்னொன்னாயுள்ளோரு ஜீவ ஸ்வரூபமாய்
ஒன்னிலுமொரு பந்தமில்லாதெயாய்
நின்னவன் தன்னெ விஸ்வம் சமச்சுபோல்

மூன்னும் ஒன்னிலடங்ஙுன்னு பின்னெயும்
ஒன்னுமில்லபோல் விஸ்வமன்னேரத்து

கர்மம்

ஒன்னு கொண்டு சமச்சொரு விஸ்வத்தில்
மூன்னாயிட்டுள்ள கர்மங்ஙளொக்கயும்
புண்ய கர்மங்ஙள் பாப கர்மங்ஙளும்
புண்ய பாவங்ஙள் மிஸ்ரமாம் கர்மவும்
மூன்னு ஜாதி நிரூபிச்சு காணும்போள்
மூன்னு கொண்டும் தளைக்குன்னு ஜீவனெ
பொன்னின் சங்ஙல ஒன்னிப் பறஞ்ஞதில்
ஒன்னிரும்பு கொண்டென்னத்ரே பேதங்ஙள்
ரெண்டி நாலுமெடுத்து பணி செய்த
சங்ஙலயல்லோ மிஸ்ரமாம் கர்மவும்
ப்ரம்மாவாதியாய் ஈச்ச எறும்போளம்
கர்ம பத்தன் மாரென்னதறிஞ்ஞாலும்

புவனங்ஙளெ ஸ்ருஷ்டிக்க என்னது
புவனாந்த்யப் பிரளயம் கழிவோளம்
கர்ம்ம பாசத்தெ லங்கிக்க யென்னது
ப்ரம்மாவின்னும் எளுதல்ல நிர்ணயம்

திக்பாலன்மாரு அவ்வண்ணம் ஒரோரோ
திக்குதோறும் தளச்சு கிடக்குன்னு
அல்ப்ப கர்மிகளாகிய நாமெல்லாம்
அல்ப்ப காலம் கொண்டோரோரோ ஜந்துக்கள்
கர்ப பாத்திரத்தில் புக்கும் புறப்பட்டும்
கர்மம் கொண்டு களிக்குன்னதிங்ஙனெ

ஜீவகதி

நரகத்தில் கிடக்குன்ன ஜீவன் போய்
துரிதங்ஙள் ஒடுங்ஙி மனஸ்ஸின்றே
பரிபாகவும் வன்னு க்ரமத்தாலெ
நரஜாதியில் வன்னு பிறந்நிட்டு
சுக்ருதம் செய்து மேல்போட்டு போயவர்
ஸ்வர்கத்திங்கில் இருன்னு ஸுகிக்குன்னு
சுக்ருதங்களும் ஒக்கே ஒடுங்ஙும் போள்
பரிபாகமும் எள்ளோளம் இல்லவர்
பரிசோடங்ஙிருன்னிட்டு பூமியில்
ஜாதராய் துரிதம் செய்து சத்தவர்
வன்னொரத் துரிதத்தின் பலமாயி
பின்னெ போய் நரகங்ஙளில் வீழுன்னு

ஸுரலோகத்தில் நின்னொரு ஜீவன் போய்
நர லோகே மஹீஸுரனாகுன்னு
சண்ட கர்மங்ஙள் செய்தவன் சாகும்போள்
சண்டால குலத்திங்கல் பிறக்குன்னு
அஸுரன்மார் ஸுரன்மாராயீடுன்னு
அமரன்மார் மரங்ஙளாயீடுன்னு
அஜம் சத்து கஜமாய் பிறக்குன்னு
கஜம் சத்தங்ஙஜவுமாயீடுன்னு
நரி சத்து நரனாய் பிறக்குன்னு
நாரி சத்துடன் ஓரியாய் போகுன்னு
க்ரிப கூடாதே பீடிப்பிச்சீடுன்ன
ந்ரூபன் சத்து க்ருமீயாய் பிறக்குன்னு
ஈச்ச சத்தொரு பூச்சயாயீடுன்னு
ஈஸ்வரன்றே விலாசங்ஙள் இங்ஙனெ

கீழ் மேலிங்ஙனெ மண்டுன்ன ஜீவன்மார்
பூமியினத்ரே நேடுன்னு கர்மங்ஙள்
ஸீமயில்லாதோளம் பல கர்மங்ஙள்
பூமியின்னத்ரே நேடுன்னு ஜீவன்மார்

அங்ஙனே செய்து நேடி மரிச்சுடன்
அன்ய லோகங்ஙள் ஒரோன்னில் ஒரோன்னில்
சென்னிருன்னு பூஜிக்குந்னு ஜீவன்மார்
தங்ஙள் செய்தோரு கர்மங்ஙள் தன்பலம்
ஒடுங்ஙீடும் அதொட்டுநாள் செல்லும்போள்
உடனெ வந்நு நேடுன்னு பின்னெயும்
தன்றே தன்றே க்ருஹத்திங்கல் நின்னுடன்`
கொண்டு போன்ன தனம் கொண்டு நாமெல்லாம்
மற்றெங்ஙானும் ஒரேடத்திரின்னிட்டு
விற்றூ என்னு பறையும் கணக்கினெ

பாரத மஹிம

கர்மங்ஙள்க்கு விளபூமியாகிய
ஜன்மதேசமிப் பூமி அறிஞ்ஞாலும்
கர்ம நாசம் வருத்தேண மெங்கிலும்
செம்மே மற்றெங்ஙும் ஸாதியா நிர்ணயம்
பக்தன்மார்க்கும் முமுக்ஷு ஜனங்ஙள்க்கும்
சக்தராய விஷயீ ஜனங்ஙள்க்கும்
இச்சிச்சீடுன்ன தொக்கெ கொடுத்திடும்
விஸ்வமாதாவு பூமி சிவ சிவ
விஸ்வநாதன்றே மூலப் ப்ரக்ருதி தான்
பிரத்யக்ஷேண விளங்ஙுன்னு பூமியாய்
அவனீதல பாலனத்தின்னல்லோ
அவதாரங்ஙளும் பலதோர்க்கும்போள்
அது கொண்டும் விசேஷிச்சும் பூலோகம்
பதினாலிலும் உத்தமம் என்னல்லோ
வேதவாதிகளாய முனிகளும்
வேதவும் பஹுமானிச்சு சொல்லுன்னு
லவணாம் புதி மத்யே விளங்ஙுன்ன
ஜம்பு த்வீபொரு யோஜன லக்ஷவும்
சப்த த்வீபுகள் உண்டதில் எத்ரயும்
உத்தமமென்னு வாழ்த்துன்னு பின்னெயும்

பூபத்மத்தினு கர்ண்ணிக யாயிட்டு
பூதரேந்திரன் அதிலல்லோ நில்குன்னு
இதில் ஒன்பது கண்டங்ஙள் உண்டல்லோ
அதிலுத்தமம் பாரத பூதலம்
சம்மதராய மாமுனி சிரேஷ்டன்மார்
கர்ம்ம க்ஷேத்ர மென்னல்லொ பறயுன்னு
கர்ம்ம பீஜ மதீன்னு முளய்க்கேண்டு
பிரம்ம லோகத்திரிக்குன்ன வர்கள்க்கும்
கர்ம பீஜம் வரட்டிக்களஞ்ஞுடன்
ஜன்ம நாசம் வருத்தேண மெங்கிலும்
பாரதமாய கண்ட மொழிஞ்ஞுள்ள
பாரிலெங்ஙும் எளுதல்ல நிர்ணயம்
அத்ர முக்கிய மாயுள்ளொரு பாரதம்
இப்பிரதேச மென்னொல்லாரும் ஓர்க்கணம்

கலிகால மஹிம

யுகம் நாலிலும் நல்லூ கலியுகம்
சுகமேதன்னெ முக்தி வருத்துவான்
கிருஷ்ண கிருஷ்ண முகுந்த ஜனார்த்தன
கிருஷ்ண கோவிந்த ராம என்னிங்கனெ
திருநாம ஸங்கீர்த்தன மென்னியே
மற்றில்லேதுமே யத்ன மறிஞ்ஞாலும்
அது சிந்திச்சு மற்றுள்ள லோகங்கள்
பதிம்மூன்னிலுமுள்ள ஜனங்ஙளும்
மற்று த்வீபுகள் ஆறிலும் உள்ளோரும்
மற்று கண்டங்ஙள் எட்டிலும் உள்ளோரும்
மற்று மூன்னு யுகங்ஙளில் உள்ளோரும்
முக்தி தங்ஙள்க்கு சாத்யமல்லாய்கயால்
கலிகாலத்தெ பாரத கண்டத்தே
கலிதாதரம் கை வணங்ஙீடுன்னு
அதில் வன்னொரு புல்லாயிட்டெங்ஙிலும்
இது காலம் ஜனிச்சு கொண்டீடுவான்
யோக்யத வருத்தீடுவான் தக்கொரு
பாக்யம் போராதெ போயல்லோ தெய்வமே
பாரத கண்டத்திங்கல் பிறந்நொரு
மானுஷர்க்கும் கலிக்கும் நமஸ்காரம்
என்னெல்லாம் புகழ்த்தீடுன்னு மற்றுள்ளோர்
என்ன தெந்தினு நாம் பறஞ்ஞீடுன்னு?

என்தின்றே குறவு ?

காலமின்னு கலியுக மல்லயோ
பாரத மிப்ப்ரதேசவு மல்லயோ
நம்மளெல்லாம் நரன்மாரு மல்லயோ
செம்மே நன்னாய் நிரூபிப்பினெல்லாரும்
ஹரி நாமங்ஙளில்லாதெ போகயோ
நரகங்ஙளில் பேடி குறகயோ
நாவு கூடாதெ ஜன்ம அதாகயோ
நமுக்கின்னி வினாச மில்லாய்கயோ
கஷ்டம் கஷ்டம் நிரூபணம் கூடாதே
சுட்டு தின்னுன்னு ஜன்மம் பழுதே நாம்

துர்லபமாய மனுஷ்ய ஜன்மம்
எத்ர ஜன்மம் பிரயாசப்பெட்டிக்காலம்
அத்ர வன்னு பிறன்னு சுக்ருதத்தால்
எத்ர ஜன்மம் மலத்தில் கழிஞ்ஞதும்
எத்ர ஜன்மம் ஜலத்தில் கழிஞ்ஞதும்
எத்ர ஜன்மங்ஙள் மண்ணில் கழிஞ்ஞதும்
எத்ர ஜன்மம் மரங்ஙளாய் நின்னதும்
எத்ர ஜன்மம் மரிச்சு நடன்னதும்
எத்ர ஜன்மம் மிருகங்கள் பசுக்களாய்
அது வன்னிட்டிவண்ணம் லபிச்சொரு
மர்த்ய ஜன்மத்தின் முன்பே கழிச்சு நாம்
எத்ரயும் பணிப்பெட்டிங்ஙு மாதாவின்
கர்ப பாத்ரத்தில் வீணதறிஞ்ஞாலும்
பத்து மாசம் வயிற்றில் கழிஞ்ஞு போய்
பத்து பந்தீராண்டு உண்ணியாயிட்டும் போய்
தன்னெத்தானபிமாநிச்சு பின்னேடம்
தன்னெத்தானறியாதே கழியுன்னு
இத்ர காலம் இரிக்கும் இனியென்னும்
சத்யமோ நமக்கேதும் ஒன்னில்லல்லோ
நீர்ப்போள போலெ உள்ளொரு தேஹத்தில்
வீர்ப்பு மாத்ரம் உண்டு இங்ஙனெ காணுன்னு
ஒர்த்து அறியாதே பாடு பெடுன்னேரம்
நேர்த்து பொகுமதென்னே பறயாவூ
அத்ர மாத்ரம் இரிக்குன்ன நேரத்து
கீர்த்தி சீடுன்னதில்ல திருநாமம்

ஸம்ஸார வர்ணன

ஸ்தான மானங்ஙள் சொல்லி கலஹிச்சு
நாணம் கெட்டு நடக்குன்னிது சிலர்
மத மத்சரம் சிந்திச்சு சிந்திச்சு
மதி கெட்டு நடக்குன்னிது சிலர்
சஞ்சலாக்ஷிமார் வீடுகளில் புக்கு
குஞ்சிராமனா யாடுன்னிது சிலர்
கோலகங்ஙளில் ஸேவகராயிட்டு
கோலம் கெட்டி ஞெளியுன்னிது சிலர்
சாந்தி செய்து புலர்த்துவானாயிட்டு
சந்த்ய யோளம் நடக்குன்னிது சிலர்

அம்மய்க்கும் புனர் அச்சனும் பார்யய்க்கும்
உண்மான் போலும் கொடுக்குன்னில்ல சிலர்
அக்னி சாக்ஷிணியாயொரு பத்னியெ
ஸ்வப்னத்தில் போலும் காணுன்னில்ல சிலர்
சத்துக்கள் கண்டு சிக்ஷிச்சு சொல்லும் போள்
சத்ருவெ போலெ க்ருத்திக்குன்னு சிலர்
வந்திதன்மாரே காணுன்ன நேரத்து
நிந்திச்சத்ரே பறயுன்னிது சிலர்
காண்க நம்முடெ சம்சாரம் கொண்டத்ரே
விஸ்வ மீவண்ணம் நில்பூவென்னும் சிலர்

பிராஹ்மண்யம் கொண்டு குந்திச்சு குந்திச்சு
பிரஹ்ம்மாவும் எனிக்கு ஒக்கயென்னும் சிலர்
அர்த்தாசக்கு விருது விளிப்பிப்பான்
அக்னி ஹோத்ராதி செய்யுன்னிது சிலர்
ஸ்வர்ணங்கள் நவரத்னங்ஙளெக் கொண்டும்
எண்ணம் கூடாதே வில்குன்னிது சிலர்
மத்தேபம் கொண்டு கச்சவடம் செய்தும்
உத்தம துரகங்ஙளது கொண்டும்
அத்ரயுமல்ல கப்பல் வெப்பிச்சிட்டும்
எத்ர நேடுன்னிது அர்த்தம் சிவ சிவ
வ்ரித்தியும் கெட்டு தூர்த்தராயெப்போழும்
அர்த்தத்தே கொதிச்செத்ர நசிக்குன்னு
அர்த்த மெத்ர வளரே யுண்டாயாலும்
திருப்தியாகா மனஸ்ஸின்னொரு காலம்
பத்து கிட்டுகில் நூறு மதி என்னும்
சதமாகில் ஸஹஸ்ரம் மதி என்னும்
ஆயிரம் பணம் கையில் உண்டாகும் போள்
ஆயுதமாகில் ஆச்சர்யமென்னதும்
ஆசயாயுள்ள பாசமதிங்ஙேன்னு
வேர்விடாதே கரெறுன்னு மேல்க்கு மேல்
சத்துக்கள் சென்னிரன்னால் ஆய அர்த்தத்தில்
ஸ்வல்ப மாத்ரம் கொடா சில துஷ்டன்மார்
சத்து போம் நேரம் வஸ்த்ரமது போலும்
ஒத்திடா கொண்டு போவானொருத்தர்க்கும்

பஸ்ச்சாத்தாபம் ஓரெள்ளோளம் இல்லாதெ
விஸ்வாஸ பாதகத்தே கருதுன்னு
வித்தத்தில் ஆச பற்றுக ஹேதுவாய்
சத்யத்தே த்யஜிக்குன்னு சிலரஹோ
சத்யமென்னது ப்ரம்மமது தன்னே
சத்யமென்னு கருத்துன்னு சத்துக்கள்
வித்ய கொண்டறி யேண்டதறியாதெ
வித்வான் என்னு நடிக்குன்னிது சிலர்
குங்குமத்தின்றே கந்தம் அறியாதே
குங்குமம் சுமக்கும் போலே கர்த்தபம்
கிருஷ்ண கிருஷ்ண நிரூபிச்சு காணும் போள்
த்ருஷ்ண கொண்டும் ப்ரமிக்குன்னெ தொக்கெயும்

வைராக்யம்

எண்ணி எண்ணி குறையுன்னி தாயுஸ்ஸும்
மண்டி மண்டி கரேறுன்னு மோஹவும்
வன்னு ஓணம் கழிஞ்ஞு விஷு வென்னும்
வன்னி லல்லோ திருவாதிர என்னும்
கும்ப மாசத்திலாகுன்னு நம்முடெ
ஜன்ம நக்ஷத்ரம் அஸ்வதி நாளென்னும்
ஸ்ராத்த முண்டகோ விருச்சிக மாஸத்தில்
ஸத்ய ஒன்னும் எளுதல்லினியென்னும்
உண்ணி உண்டாயி வேள்பிச்சதிலொரு
உண்ணி உண்டாயிக் கண்டாவூ ஞானென்னும்
இத்ரமோரோன்னு சிந்திச்சிரிக்கும்போள்
சத்து போகுன்னு பாவம் சிவ சிவ
எந்தினித்ர பறஞ்ஞு விசேஷிச்சும்
சிந்திச்சீடுவின் ஆவோளம் எல்லாரும்
கர்மத்தின்றே வலிப்பவும் ஒரோரோ
ஜன்மங்ஙள் பலதும் கழிஞ்ஞென்னதும்
காலமின்னு கலியுக மாயதும்
பாரத கண்டத்தின்றே வலிப்பவும்
அதில் வன்னு பிறன்னதும் எத்ர நாள்
பழுதே தன்னே போய பிரகாரவும்
ஆயுஸ்ஸின்றே பிரமாண மில்லாத்ததும்
ஆரோக்யத் தோடிரிக்குன்னவஸ்தயும்
இன்னு நாம சங்கீர்த்தனம் கொண்டுடன்
வன்னு கூடும் புருஷார்த்த மென்னதும்
இனியுள்ள நரக பயங்ஙளும்
இன்னு வேண்டும் நிருபணமொக்கயும்
எந்தினு விருதா காலம் களயுன்னு?
வைகுண்டத்தினு போய்க்கொள்வின் எல்லாரும்

கூடியல்லா பிறக்குன்ன நேரத்து
கூடியல்லா மரிக்குன்ன நேரத்தும்
மத்யே இங்ஙனெ காணுன்ன நேரத்து
மல்சரிக்குன்ன தெந்தினு நாம் வ்ருதா
அர்த்தமோ புருஷார்த்தம் இரிக்கவே
அர்த்ததின்னு கொதிக்குன்னதெந்துநாம்
மத்யாஹ்னார்க்குப் பிரகாச மிரிக்கவே
கத்யோதத்தெயோ மானிச்சு கொள்ளேண்டு
உண்ணிக் கிருஷ்ணன் மனஸ்ஸில் களிக்கும் போள்
உண்ணிகள் மற்று வேணமோ மக்களாய்
மித்ரங்ஙள் நமுக்கெத்ர சிவ சிவ
விஷ்ணு பக்தன்மாரில்லே புவனத்தில்
மாய காட்டும் விலாசங்ஙள் காணும் போள்
ஜாய காட்டும் விலாசங்ஙள் கோஷ்டிகள்
புவனத்திலெ பூதிகளொக்கெயும்
பவனம் நமக்கு ஆயதிது தன்னே
விஸ்வநாதன் பிதாவு நமுக்கெல்லாம்
விஸ்வ தாத்ரி சராசர மாதாவும்
அச்சனும் புனர் அம்மையும் உண்டல்லோ
ரக்ஷிச்சீடுவான் உள்ள நாளொக்கயும்
பிக்ஷான்னம் நல்லார் அன்னவும் உண்டல்லோ
பக்ஷிச்சீடுக தன்னே பணியுள்ளு

நாம ஜபம்

சக்தி கூடாதெ நாமங்ஙள் எப்பொழும்
பக்தி பூண்டு ஜபிக்கணம் நம்முடெ
சித்த காலம் கழிவோள மீவண்ணம்
ஸ்ரத்தயோடே வசிக்கேணமேவரும்
காணாகுன்ன சராசர ஜீவியெ
நாணம் கைவிட்டு கூப்பி ஸ்துதிக்கணம்
ஹரிஷாஸ்ரு பரிப்லுதனாயிட்டு
பருஷாதிகளொக்கெஸ்ஸஹிச்சுடன்
ஸஜ்ஜனங்களெ காணுன்ன நேரத்து
லஜ்ஜ கூடாதே வீணு நமிக்கணம்
பக்தி தன்னில் முழுகி சமஞ்ஞுடன்
மத்தனே போலே ந்ருத்தம் குதிக்கணம்
பாரில் இங்ஙனெ ஸஞ்சரிச்சீடும் போள்
பிராரப்தங்ஙள் அசேஷம் ஒழிஞ்ஞிடும்
விதிச்சீடுன்ன கர்மங்கள் ஒடுங்ஙும் போள்
பதிச்சீடுன்னு தேஹம் ஒரேடத்து
கொதிச்சீடுன்ன ப்ரம்மத்தே கண்டிட்டு
குதிச்சீடுன்னு ஜீவனும் அப்போழே
சக்தி வேறிட்டு ஸஞ்சரிச்சீடும் போள்
பாத்ரம் ஆயில்ல என்னது கொண்டேதும்
பரிதாபம் மனஸ்ஸில் முழுக்கேண்ட
திருநாமத்தின் மஹாத்ம்யம் கேட்டாலும்
ஜாதி பார்க்கிலொரு அந்த்ய ஜநாகிலும்
வேதவாதி மஹீஸுரனாகிலும்
நாவு கூடாதே ஜாதன்மாராகிய
மூகரெயங்கொழிச்சுள்ள மானுஷர்
எண்ணமற்ற திருநாமம் உள்ளதில்
ஒன்னு மாத்ரம் ஒரிக்கல் ஒரு தினம்
ஸ்வஸ்தன் ஆயிட்டு இருக்கும் போழெங்கிலும்
ஸ்வப்னத்தில் தான் அறியாதெ எங்கிலும்
மற்றொன்னாயி பரிஹஸிச்செங்கிலும்
மற்றொருத்தர்க்கு வேண்டியென்னாகிலும்

ஏது திக்கிலிருக்கிலும் தன்னுடே
நாவு கொண்டிது சொல்லி என்னாகிலும்
அதுமல்லொரு நேரம் ஒரு தினம்
செவி கொண்டிது கேட்டு என்னாகிலும்
ஜன்ம சாபல்யம் அப்போழே வன்னு போய்
ப்ரம்ம ஸாயுஜ்யம் கிட்டீடும் என்னேல்லோ
ஸ்ரீதர் ஆச்சார்யன் தானும் பரஞ்ஞிது
பாதராயணன் தானும் அருள் செய்து
கீதயும் பரஞ்ஞீடுன்னதிங்ஙனெ
வேதவும் பஹுமாநிச்சு சொல்லுன்னு

அமோதம் பூண்டு சொல்லுவின் நாமங்ஙள்
ஆனந்தம் பூண்டு ப்ரஹ்ம்மத்தில் சேருவான்
மதியுண்டெங்கிலொக்க மதியிது
திருநாமத்தின் மாஹாத்யமாமிது
பிழையாகிலும் பிழ கேடென்னாகிலும்
திருவுள்ளம் அருள்க பகவானே
[சொல்லாக்கம் வி.எஸ்.மணி]

முந்தைய கட்டுரைஉடையாள்-6
அடுத்த கட்டுரைவெண்முரசு- வினாக்கள்-6