ஜெ
தாங்கள் நலம் தானே?
நேற்று தான் மரபு இலக்கியம் பற்றி தாங்கள் ஆற்றிய உரை youtube இல் பார்த்தேன். வெறும் சொர்களினால் ஆற்றிய உரை அல்ல. உரை முழுவதும் படிமங்கள். கல்பொருசிறுநுரை, பிட்சாடனர் – பிரம்ம கபாலம், அன்றைய நாள் முழுவதும் ப்ரஹ்ம கபாலத்தை பற்றியே யோசித்து கொண்டிருந்தேன். ஆம் creater இன் தலை என்றுமே ஒரு நிரம்பாத தலை
நான் மேலும் அக் குட்டிக் கதைகளினுள்ளும் சென்று ஒன்றை அடைந்தேன். அது… பிரம்மதேவர் பல கதைகளில் ‘ஆணவத்தின்’ குறியீடாகவே சுட்டப்படுகிறார். படைபவனின் தன படைப்பின் மீதான ஆணவம் நிச்சயம் போற்றத்தக்கது, மதிக்கத்தக்கது ஆனால் வெற்று ஆணவம் குறைப்பட்ட அபத்தமான அறிதலாகவே / படைப்பாகவே இருக்க முடியும்.
அறிவிலிருந்து வந்த ப்ரம்ம சூத்திரத்தை விடவும், அனுபவத்தில் இருந்து கிடைத்த ‘ சிவ வாக்கியரின்’ பாடலின் தங்கள் விளக்கம், மிக அருமை. யானை படிமம், எனக்கு குரலினிது உரை என் நினைவுக்கு வந்தது. மீண்டும் அந்த உரையை பார்க்கப் போகிறேன்.
ராமகிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
மரபிலக்கியம் பற்றிய உரையை கண்டேன். செறிவான ஆனால் சுவாரசியமான உரை. மரபிலக்கியம் பயில்வதற்கு ஒரு பிளான் நமக்கு தேவைப்படுகிறது. அதற்குமுன் எதற்காக மரபிலக்கியம் பயில்கிறோம் என்னும் தெளிவு தேவைப்படுகிறது. இரண்டையும் அளிக்கும் அழகான உரை
நன்றி
கார்த்திக் ஆனந்த்