ஆடல்

அன்புள்ள ஜெ

இந்த வீடடங்கு நாட்களில் என்னை நானே எனக்குப் பிடித்தவற்றில் ஈடுபடுத்திக் கொள்ள இதை செய்தேன். இது நான் செய்ய விரும்பும் குறும்பட வகை அல்ல. ஆனால் ஒரு கேமரா, ஒரு வீடு, நடிக்க ஒரு ஆள் (எனது அக்காள்  மகள்) இருக்க எதையாவது செய்வோமே எனச் செய்துவிட்டேன். முக்கியமாக editing  மற்றும் ஒரு கதையை visual ஆகா சொல்ல முடியுமா என எனக்கே ஒரு கற்றலுக்காகவே இதைச் செய்தேன். Canada உரையில் குறும்படங்களுக்கான இடம் பற்றி, ஒரு மாற்று சினிமாவுக்கான தளமாக, சிறு பத்திரிகை போல குறும்படங்களை ஒரு இயக்கமாக முன்னெடுப்பது  பற்றி  நீங்கள் வகுத்தளித்த சொற்களை நிச்சயமாக ஒரு வழிகாட்டியாக கொள்கிறேன். இருந்தும் இந்த காலத்தில் எப்படியோ இது எனது முதல் முயற்சியாகவும் அமைந்துவிட்டது.
ஆனந்த்குமார்
முந்தைய கட்டுரைசெய்திநிறுவனங்களின் எதிர்காலம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉடையாள்-4