நம் நண்பர்களுடனான குழும உரையாடலை தொடர்ந்து அதில் கவனிக்கத்தக்க ஒன்றை பொதுவில் பதிவுசெய்வதெ மிகவும் தேவையானது என்று கருதினோம்.
குமரகுருபரன் விருதுவிழாவை ஒட்டி நிகழ்ந்த வேணு வேட்றாயன் அவர்களுடனான உரையாடல் ஒரு துவக்கமாக அமைந்த்து.
அதை அடுத்து குழும நண்பர் ஜா. ராஜகோபாலனுடன் ஒரு உரையாடலை பதிவு செய்தோம். இலக்கியத்தில் திருத்தர் / செம்மை படுத்துநர் என்பவரது பணி குறித்து அவர் இதில் உரையாடினார். அந்த இடம் பெரிதும் கவனிக்கப்படாது போவது ஏன் என்றும் அதன் முக்கியத்துவம் என்ன என்றும் திருத்தர்கள் எவ்வண்ணம் இலக்கியத்தில் இயங்கவேண்டும் என்றும் அந்த உரையாடல் ஒரு தெளிவை உண்டாக்கியது
அந்த உரையாடலை இரு பகுதிகளாக யூட்யூப் ல் சுரேஷ்பாபு பதிவேற்றியுள்ளார்.
காணொலி இணைப்புகள் இங்கே உள்ளன
தமிழ் இலக்கியத்தில் திருத்தர்கள் – ஜா.ராஜகோபாலன் நேர்காணல் – பகுதி 1
தமிழ் இலக்கியத்தில் திருத்தர்கள் – ஜா.ராஜகோபாலன் நேர்காணல் – பகுதி 2
இதுகுறித்து தங்களின் கருத்துகளையும் நண்பர்களின் கருத்துகளையும் அறிய ஆவலாக உள்ளோம்.
காளிப்பிரசாத்
அன்புடன்,
R.காளிப்ரஸாத்