விலக்கப்பட்டவர்கள்:கடிதங்கள்

அன்புள்ள எழுத்தாள நண்பருக்கு,

பதிலுக்கு நன்றி.

விலக்கப்பட்டவர்கள் ஆக்கம் நாம் தெரியாத பல அதிர்ச்சித் தகவல்களைக் கொண்டு வந்து நம்பூதிரிகளிடையே நிலவிய கொடுங்கோன்மைத் தனங்களை வெளிச்சமிட்டது. விலக்கிவைக்கப்பட்டவர்களிலிருந்து இரண்டு “விளக்குகள்” தோன்றி ஒளிவிட்டதை நீங்கள் வடித்தவிதம் அற்புதம். இன்னும் எத்தனை பேர் இவ்வாறு தோன்றியிருக்கின்றனரோ நாமறியோம். இவர்களின் கொடுங்கோன்மைத் தனத்திலும் சில நன்மைகள் விளைந்திருக்கின்றன. இல்லையேல் ஒரு எம்.ஜீ.ஆரும், ஷீலாவும் எமக்குக் கிடைத்திருப்பார்களா என்று ஒரு கனம் எண்ணத் தோன்றியது. இத்தனை அதிர்ச்சியூட்டும் தகவல்களை எங்கிருந்து பெறுகிறீர்கள்? தேடல் நிறைந்தவர் நீங்கள் என்ற உண்மை புலப்படுகிறது.இந்த ஆக்கத்தில் நீங்கள்:
மாடம்பு குஞ்சுக்குட்டன் என்ற எழுத்தாளர் குறியேடத்து தாத்ரிக்குட்டியைப் பற்றி  1974ல் ‘பிரஷ்டு’ என்ற பிரபலமான நாவலை எழுதினார். அந்நாவல் 1975ல் ஒரு திரைப்படமாக அதே பேரில் வெளிவந்தது. அதில் புதுமுகமாக அறிமுகமான சுஜாதா அக்காலகட்டத்தில் மிகத்துணிச்சலாக நடித்திருந்தார். பிற்பாடு அவர் கெ.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ மூலம் தமிழில் பிரபலமாக ஆனார்.

எனக்குறிப்பிட்ட அந்த சுஜாதா கூட இலங்கையில் பிறந்தவர் என்ற தகவல் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

வாழ்த்துகளுடன்
எஸ்.எழில்வேந்தன்

அன்புள்ள ஜெ

விலக்கபப்ட்டவர்கள் கட்டுரையைப்படித்து அதிர்ச்சியும் கடைசியில் ஆச்சரியமும் கொண்டேன். நம்முடைய கடந்தகால சரித்திரம் இத்தனை கேவலமாக இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். உண்மையில் நம்முடைய முன்னோடி சிந்தனையாளர்களான பாரதியார் போன்றவர்கள் எத்தனை போராடி பெண்ணுரிமைக்காக பேசியிருக்கிறார்கள் என்ற சிந்தனை ஏற்பட்டது. நிறையபேர் சொல்வதுண்டு பிராமணர்கள் பிரரை ஒடுக்கினார்களென்று. அவர்கள் தங்களைத் தாங்களே ஒடுக்கிக்கொண்டுதான் இருந்தார்கள் என்று உங்கள் கட்டுரை மூலம் தெரிந்துகோண்டேன். மிக ஆச்சரியமான கட்டுரை.

சிவகுமார்

விலக்கப்பட்டவர்கள்

முந்தைய கட்டுரைஸ்லம்டாக் மில்லினர், அரிந்தம் சௌதுரி
அடுத்த கட்டுரைகும்பகோணம்