வெண்முரசு துவங்கிய போதும் அழகு, எங்களுடனேயெ இத்தனை வருடங்கள் வளர்ந்தபோதும் அழகு, இளமழை பொழிந்துகொண்டிருக்கும் இருள்பிரியா இக்காலையில் நிறைவுற்ற போதோ இன்னும் பேரழகு. அவ்வன்னையின் தாலாட்டு ஓய்ந்த பின்னரும் அது சென்றடைந்த இடத்திலேயே இருக்கும் சீர்ஷனைப்போல வெண்முரசு நிறைவடைந்த பின்னரும் அது என்னை அழைத்துச் சென்று விட்டிருக்கும் அவ்வுலகிலேயே நிறைவுடன் இருக்கிறேன்.
கட்டுரை வெண்முரசென்னும் உறவின் நிறைவு- லோகமாதேவி