பாடல்கள்- கடிதங்கள்

கடைசிக் கண்ணீரின் குரல்

ஒரு விடுதலைப்பாடல்.

குடைக்கீழே…

“கடலே, நீலக் கடலே” பாடலில் வரும் “ஒரு பெண்ணின் நினைவில் மூழ்கி, உறங்காதிருக்கும் இரவுகள் உண்டா?” என்ற வரிகள் மிகவும் அற்புதமானவை. பாடலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. மேலும் பல பாடல்களை அறிமுகப்படுத்துங்கள்.

ஜி.சுந்தர்.

அன்புள்ள ஜெ

நீங்கள் அவ்வப்போது அறிமுகம் செய்யும் சினிமாப் பாடல்களை கேட்கிறேன். இந்திப்பாடல்களையும் மலையாளப்பாடல்களையும் மட்டுமல்ல தமிழ்ப்பாடல்களையும் அறிமுகம் செய்கிறீர்கள்.

எனக்கு இந்த அறிமுகங்கள் ஏன் பிடித்திருக்கின்றன என்றால் நீங்கள் இவற்றை இசையூட்டப்பட்ட கவிதைகளாகவே அறிமுகம் செய்கிறீர்கள். சினிமாப்பாட்டுக்களாக அல்ல.

சிலர் சினிமாப்பாட்டுக்களை அறிமுகம் செய்யும்போது இரண்டாவது நிமிடத்தில் பன்னிரண்டாவது செக்கண்டை கேட்டுப்பாருங்க என்றெல்லாம் சொல்வதுண்டு. அது வேடிக்கையானது. இசைகேட்க சினிமாப்பாட்டு கேட்கவேண்டியதில்லை. சினிமாப்பாட்டு என்பது அதனுடைய உணர்ச்சிகரம் மட்டும்தான். இசைநுட்பங்களுக்கு இசைக்குவியலே உள்ளது

அந்த பாவம் என்பது சினிமாப்பாட்டின் வரிகளுடன் அதன் சங்கீதம் இணைந்துசெல்லும்போதுதான் உள்ளது. ஆகவே நீங்கள் முழுமையாக வரிகளுடனும் பொருளுடனும் அறிமுகம் செய்யும்போது முழுமையாக உள்வாங்கமுடிகிறது

ஜி.எச்.கண்ணன்

அன்புள்ள ஜெ

நீங்கள் அறிமுகம் செய்யும் சினிமாப்பாடல்களை நான் கவிதையாகவே வாசிக்கிறேன். கேட்கிறேன். இன்றைக்கு நவீனக்கவிதையில் ரொமாண்டிசிஸமே இல்லை என்று ஆகிறது. ஆகவே இந்த ரொமாண்டிக் மூட் எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் ரொமாண்டிக் மூடிலிருந்து கவிதை அப்படி வெளியே போகமுடியாது. மனிதனுக்கும் அதெல்லாம் தேவையாகிறது

அர்விந்த்

பிரம்மானந்தன்

மாந்தளிரே!

யட்சிப்பாலை

மடிவலையில்…

கூடல்நாதனின் தாலாட்டு

நிகரற்ற மலர்த்தோட்டம்

செண்பகம் பூத்த வானம்

சந்தன நதியில்…

காத்திருக்கிறாள் இரவுமகள்

மலையாளப்பாடல்கள் -கடிதம் 

எண்ணும் பொழுது…

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் ஓவியங்கள்
அடுத்த கட்டுரைசர்வப்பிரியானந்தர்