ஆலன் டூரிங்

அன்புள்ள ஜெ,

தொழில்நுட்பம் மூலமாக மக்களைக் கண்கானிப்பதும் அதன் வழியாக சட்டங்களை நடைமுறைப்படுத்துவரும் வளர்ந்து வரும் விவாதம் தான் என்றாலும் சமீபத்திய கொரானா நெருக்கடி ஆகியவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான நியாயமான காரணங்களை அளித்துள்ளது. ஆனாலும் இதைப் பற்றிய எதிர்ப்புகளும் குறிப்பிடத்தக்க வல்லுனர்களிடம் இருந்து வந்துகொண்டுள்ளன

இதில் தகவல் திருட்டு,  தவறான முறையில் பயன்படுத்துதல் என்பது எல்லாம் இருபுறம் இருந்தாலும் ஒரு சட்டம் நூறு சதவீதம் எந்த அற பரிசீலனையும் இல்லாமல் செயல்படுத்தப்பட்டால் சரியா என்ற கேள்வி முக்கியமாக எழுகிறது. ஒரு சட்டம் நூறு சதவீதம் செயப்படுத்தபடும்போது சமுதாயத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி தடைபடுகிறது.

வெண்முரசு தருணத்தின் சொன்னால், திரவுபதிக்கு ஏற்பட்ட அவமானம் கூட அப்போதிருந்த சட்டப்படி சரி தான். ஆனால் அது அறத்தை மீறியதால் மொத்த ஸிஸ்டமே அழிவதற்கான பொறியாக அமைந்துள்ளது.

சட்டம் என்பது எங்கு கடுமையாக இருக்கவேண்டும் எங்கு அதைத் தாண்டி பார்க்கும் பார்வை தேவைப்படுகிறது என்பதை பற்றிய உங்கள் கருத்துகளையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

இன்றைய கணிப்பொறி மற்றும் செயற்றை அறிவுத்துறையின் தந்தை எனப்படும் ஆலன் டூரிங் வாழ்வில் நிகழ்ந்த இந்த முரண் பற்றி எனது பார்வையை ஒரு கட்டுரையாக எழுதியுள்ளேன். தங்கள் பார்வைக்கு.

ஆலன் டூரிங் – ஒரு விதியும் ஒரு சட்டமும்

ப்ரைவஸி ஒரு ஆடம்பரமா

அன்புடன்

சுரேஷ் பாபு

முந்தைய கட்டுரைடார்த்தீனியம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷக்கிணறு- சுனீல் கிருஷ்ணன்