சிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும்- கடிதம்

அன்புள்ள ஜெ.,

நீங்கள் திருவனந்தபுரம் திரைப்பட விழா குறித்து எழுதிய பதிவில் நீங்கள் பார்த்த படங்களின் வரிசையில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படத்தைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது ஒரு ‘ஆந்தாலஜி ‘  என்று கேள்விப்படுகிறேன். உங்களுடைய எந்தக் கதை அந்தப் படத்தில் உள்ளது? இது போல சில படங்கள் விழாக்களில் மட்டுமே திரையிடப்படுவதன் காரணமென்ன? மற்ற மொழிகளை ஒப்பு நோக்க தமிழில் இலக்கியத்திலிருந்து சினிமா சென்ற படைப்புகள் மிக மிகக் குறைவே. தில்லானா மோகனாம்பாள், மோகமுள் போல. இலக்கியம் சினிமாவை பாதித்ததைப் போல, சினிமா இலக்கியத்தை பாதித்திருக்கிறதா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

சிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும் சினிம மூன்று கதைகளால் ஆனது. என்னுடைய தேவகி சித்தியின் டைரி அதில் உள்ளது. அசோகமித்திரனின் விமோசனம், ஆதவனின் ஆகியகதைகளின் திரைவடிவம்.

அதை நான் திருவனந்தபுரம் படவிழாவில் கண்டேன். நிறைந்த அரங்கில் பலத்த கைத்தட்டல் பெற்ற படம் அது. உலக அளவில் பல திரைவிழாக்களில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறது.

அத்தகைய படங்களுக்கு பெரிய வணிகமதிப்பு இங்கே இல்லை. இங்கே திரைவிமர்சகர்கள்கூட வணிகப்படங்களையே போற்றுகிறார்கள். நிறுவன வலிமை இருந்தாலொழிய வெளியிடுவது போராட்டமே. சாய் வசந்த் முயல்கிறார் என நினைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைதன்மீட்சி- கடிதம்
அடுத்த கட்டுரைஉடையாள்-7