நாயுலகு- கடிதங்கள்

நாயுலகு

அன்புள்ள ஜெ,

உங்கள் பதிவில் இருந்த நாய்களின் படம் ஏனோ பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சில வருடங்களுக்கு முன் வெளிவந்த ‘வைட் காட்’ திரைப்படத்தை நினைவுறுத்தியது. கைவிடப்பட்ட ஒரு நாய் தன் சகாக்களின் உதவியுடன் தன்னை வளர்த்த  சிறுமியை தேடிச் செல்லும் கதை. கிட்டத்தட்ட Planet of the Apes சாயல் கொண்டது.

செர்னோபில் போன்ற பேரழிவு நடந்த இடங்களை மனிதர்கள் விட்டு சென்ற பின் அங்கு re-wilding என்று கூறப்படும் இயற்கை மீட்சி  நடந்துள்ளது போல் இப்போது சிறிதளவேனும் நம்மை சுற்றி நடந்தால் வீடுறைவின் பயன் என்று எண்ணிக்கொள்ளலாம்.

விலங்குகளின் உலகில் வாழ்வதும் ஒரு வரமே.

– தினேஷ்

***

அன்புள்ள ஜெ

நாயுலகு ஓர் அருமையான சின்ன கட்டுரை. ஒரு குறிப்புதான். அது உங்கள் அன்றாடத்தின் ஒரு பகுதி. ஆனால் அந்தக்கடைசி வரி அதை ஒரு இலக்கியப் படைப்பாக ஆக்குகிறது.

நாய்களின் உலகம். அதிலுள்ள நட்பும் கொண்டாட்டமும். அந்தப் புகைப்படங்களில் தெரியும் நாய்களெல்லாமே உற்சாகமானவையாக இருக்கின்றன. ஆரோக்கியமானவையாகவும் இருக்கின்றன

காலையில் இப்படி ஒரு கட்டுரையை வாசிக்கநேர்வது புத்துணர்ச்சியை அளிப்பது

ஜெயவேல்

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – முதற்கனல் முதல் பிரயாகை வரை-சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைஉடையாள்-9