கதைகள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நூறுகதைகளின் வழியாகவே சென்றுகொண்டிருக்கிறேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஆனால் எனக்கான கதை என்பது சூரியனை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கும் எழுகதிர் [சிறுகதை] கதைதான். எனக்கு அது ஒரு குறியீடு.

அந்தக்கதையை நான் எப்படிப் புரிந்துகொண்டேன் என்று என்னால் தெளிவாகச் சொல்லிவிடமுடியாது. வேண்டுமென்றால் ஓரளவு இப்படிச் சொல்வேன். அவன் முதலில் வேறொன்றிலிருந்து தப்பி ஓடுகிறான். அவனுடைய பயணம் விலகிச் செல்வதாக இருக்கிறது. அதன்பிறகு அவன் தனக்கானதை நோக்கிச் செல்கிறான். தேடிச்செல்கிறான். தன் பயணத்தை அதனிடம் ஒப்படைத்துக்கொள்கிறான்.

நான் ஒன்றிலிருந்து தப்புவதற்காக ஏற்றுக்கொண்ட பயணம் ஒன்று இருந்தது. வடக்கே ரொம்பதூரம் சென்றேன். அதன்பிறகு அரேபியா. ஆனால் அதன்பிறகு அதுவே என்னைக் கொண்டுசென்றது. என் திசையை நான் கண்டுகொண்டேன். இன்றைக்கு நான் என் பாதையை தேர்வுசெய்யவில்லை, அதுதான் என்னை தேர்வுசெய்திருக்கிறது என்று உணர்கிறேன். அந்தக்கதை என்னுடைய சொந்தக்கதை.

நன்றி

எம்.அக்பர்

ஆசிரியருக்கு வணக்கம்,

சனிக்கிழமை நண்பர்களுடன் மாயப்பொன் கதையை விவாதித்தபின் நேற்று எழுதினேன். நேசையனை படிக்கும்போது என்னையே நினைத்துக்கொண்டேன். (எனக்கு மாய பொன் எண்ணெய் தான) மிகக் கவனமாக ஒவ்வொரு கொப்பரையையும் பார்ப்பேன்.கொப்பரை அல்லது கடலை அல்லது எள்ளை செக்கில் போட்டபின் அருகிலேயே நின்று கவனிப்பேன் .மொபைல் பார்ப்பதோ வேறு சிந்தனைக்கோ இடம் தரமாட்டேன் .அது  எண்ணையாக மாறும் அந்த ஷணம் பேரானந்தம்.

பிறரின் உடல் நலத்திற்கான கலப்படமில்லாத எண்ணையை நான் நான் தயாரிக்கிறேன் எனும் கர்வம் அதில் இருக்கிறது . சில மாதங்களுக்கு முன் எனது மாமாவின் மகன் பைசல் சுனிதாவிடம்  திருவனந்தபுரத்தில் கடை எப்படி போகிறது என விசாரித்துவிட்டு “எண்ண கடன்னா ,எல்லா எண்ணையும் வெக்கணும் .மிஷின் செக்கு,பாமாயில், வில குறஞ்சது எல்லாம் இருந்தாத்தான் விக்கும் .குறஞ்சத கேட்கவனுக்கு ,குறஞ்சத குடுக்கணும் .ஆனா மச்சான் அத செய்யபாட்டான்” என்றிருக்கிறான் . ஆம் நேசையனைபோல் எண்ணையில் உயர்தரமான மரசெக்கு  மட்டுமே என்னால் தயாரிக்க முடியும்.

திருவனந்தபுரத்திலிருந்து வந்து ஒரு மாதம் வீட்டிலேயே இருந்தேன் .ஆகஸ்ட் முதல் தேதியன்று எனது பங்கு தாரரின் தந்தை என்னை அழைத்து “ஷாகுல் கொஞ்சம் வெளிநாடு ஆர்டர்கள் இருக்கிறது,இங்கே வந்து செக்கில் எண்ணை ஆட்டுகிறாயா?என கேட்டார் .உடனே சென்று விட்டேன். கப்பல் பணியை போல, மர செக்கில் எண்ணெய் ஆட்டுவதும் கடும் உடல் உழைப்பை கோரும்.எண்ணெய் வெளியேறும் குழாயின் அடைப்பை அடிக்கடி இரும்பு கம்பியால் குத்தி விடவேண்டும்.சில நேரங்களில் மிக கடினமாக அடைத்துகொள்ளும் .அந்த இரும்பு கம்பியை சுத்தியலால் அடித்துத்தான் அடைப்பை நீக்க முடியும்.கை மணிகட்டு,இடுப்புபகுதியில் ஒரு வலி இருந்துகொண்டே இருக்கும் .இரவில் படுத்ததும் கனவுகளின்றி நல்லுறக்கம்,அதிகாலை தொழுகைக்குத்தான் விழிப்பு வரும் .

சல்மான் கேட்பான் “வப்பா ஆயிரம் ரூபா க்கு  எத்தரே செக்கு ஆட்டணும்” என. “பத்து செக்கு மக்களே”என்பேன். “அப்போ காலைல அஞ்சுமணிக்கு போனா பத்து செக்கு ஆட்ட முடியுமா” “லே பத்து செக்கு ஆட்டிட்டு அவரு உயிரோட இருக்காண்டாமா”  என சுனிதா சொல்வாள் . எண்ணெய் ஆலையில் ஐந்து செக்குகள் உள்ளன இரு நிரந்தர பணியாளர்கள் இரண்டு செக்கு வீதம் ஒரே நேரத்தில் எண்ணெய் ஆட்டுவார்கள். எனக்கு ஒரு செக்கு மட்டுமே கிடைக்கும்.தேங்காய் கொப்பரை என்றால் இருபது கிலோ வீதம் ஐந்துமுறை ஆட்டலாம் அதிக பட்சம் ஆறு. ஒரு கிலோவிற்கு ஐந்து ரூபாய்தான் கூலி எள் என்றால் பதினாறு கிலோதான் போட முடியும் .ஐந்து முறை எள் போட்டு ஆட்டினால் நானூறு ருபாய் மட்டுமே கிடைக்கும் .

நான் என்னிடம் கேட்டேன் கடும் உடல்உழைப்பு (மெல்லிய வலி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் )மிகக்குறைந்த கூலி ஏன் இன்னும் இதை செய்கிறாய் என.உயர்தர எண்ணெய் தயாரிக்கிறேன் எனும் போதை தலைக்கேறிவிட்டது .அது தான் காரணம்.ஒருநாள் தாமதாக வீட்டிற்கு வந்தபோது இளையவன் சல்மான் “நீங்கோ செக்க கெட்டிபிடிச்சுட்டு அங்கேயே கெடைங்கோ” என்றான். ஆம் எண்ணெய் ஆட்டுவதை நான் மிக நேசிக்கிறேன் .அதுதான் எனக்கு இன்பம் .நான் நேசையனேதான் அவருக்கு சாராயம் ,எனக்கு எண்ணெய்.

இருந்தாலும் என் பொருளாதார தேவைக்காக மீண்டும் நான் கப்பல் பணிக்கு சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறேன். நேற்று சுக்கிரியில் தன்னறத்தை கண்டவர்கள் யார் என  கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை .கப்பல் பணியையும் இதுபோல் நேசித்தேன். நான் யார் ,எது தெய்வம் என புரிந்தும்,உணர்ந்தும் விட்டேன் .அறிவதர்க்கோ,அடைவதற்கோ ஒன்றும் இல்லை என்பதிலும் தெளிவாக உள்ளேன் . எது நானாக இருக்கிறதோ அதுவே எல்லாமாக இருக்கிறது .

ஷாகுல் ஹமீது

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைவெண்முரசு சுவரொட்டிகள்
அடுத்த கட்டுரைஞானி,தத்துவம்- கடிதங்கள்