பெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்

அன்புள்ள ஜெயமோகன்,
திரு குமார்.குமரப்பன் கூறியதைக் கண்டேன். இந்த நூல் சொல்லும் ஆதார கருத்து மேற்கு தன்னுடைய வசதிக்கேற்ப இந்தியாவை துண்டாட அல்லது கட்டுப்படுத்த அமைப்புகளை உருவாக்குகிறது அதில் தெரிந்தோ தெரியாமலோ பல அறிஞர்கள் துணை போகிறார்கள் என்பதுதான். தெரிந்து துணை போவோர் பொதுவாக அதிகமும் கூட. அந்த நூலில் சொல்லபப்ட்ட ஒவ்வொரு தரவுகளும் உண்மையே.

பேராசிரியர் இலக்குவனார் மோர்மோன் சர்ச் தோத்திரங்களுடன் திருவாசகத்தை ஒப்பிடுகிறார்:
I learned many things about the Mormon religion and the Church of the Latter day saints.The Mormon Bible reminded me of a prominent religious literature in Tamil,Thiruvachagam. The redundancy of the words Heart and Honey in Thiruvachagam, can be found easily by any reader of it.Likewise the Mormon Bible uses Heart and Honey many times.A comparative study of these two works may be of an immense benefit to scholars in theology. (http://www.associatedcontent.com/article/822317/i_love_you_americapart_i_pg2.html?cat=9)

மோர்மோன்களைக் குறித்து எந்த அடிப்படை அறிவுடையவர்களும் திருவாசகத்தை குறித்தும் அடிப்படை அறிவுடைய எவரும் இந்த ஒப்பீட்டின் ஒவ்வாமையை அறிவர். (நிச்சயமாக ஹார்ட்டுக்கு தெரிந்திருக்கும்) மிக மென்மையாக சொன்னால் சுந்தர.ராமசாமியை பி.டி.சாமியுடன் ஒப்பிடுவதை போன்ற மடத்தனம் இது. மேலும் இலக்குவனார் தெளிவாக வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்கிற கோட்பாடு உள்ளவர். திராவிட இனவாதக் கோட்பாட்டு ஆதரவாளர். ஒரிஸாவில் கிறிஸ்தவ மதபோதக பெண் வன்புணர்ச்சிக்கு ஆளானதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ”இந்தியாவே மதச்சிறுபான்மையினரின் சித்திரவதை கூடாரமாகிவிட்டதென குறிப்பிடுகிறார்”

http://www.associatedcontent.com/article/1091639/the_rape_of_a_christian_nun.html?cat=9

இவர்தான் ஹார்ட்டால் பெர்க்லே தமிழ் இருக்கைக்கு தேர்வு செய்யப்பட்டவர். மேலும் ஹார்ட் செய்திருக்கும் கம்ப ராமாயணம் குறித்த ’கட்டுடைப்பு’ ஆதாரத்துடனேயே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இவை அனைத்துமே தமிழர் பண்பாட்டை பொது இந்திய பண்பாட்டுப்புலத்திலிருந்து வெட்டி எடுப்பவையாகவே உள்ளது. அத்தகைய போக்குகளே ஊக்குவிக்கப்படுகின்றன. உதாரணமாக ஹார்ட் ராமாயணம் குறித்து கூறியதை எடுத்துக் கொள்வோம். ராமாயணம் ஒரு ‘இருட் காவியம்’ என்கிறார் ஹார்ட். ஒருவித எலியட்டிய வீண் பூமி காவியம் என்பது போன்ற அக உணர்வு சித்தரிப்பாக அவர் அதைப் பார்க்கிறாரென விட்டுவிடலாம். ஆனால் அடுத்து அதிலிருக்கும் சுயக்கட்டுப்பாட்டையும் வீரத்தையும் இரு இன/பண்பாட்டு எதிரெதிர் இரட்டை விழுமியங்களாக முன்வைக்கிறார். தமிழரின் மறமும் பிராம்மணீய அறமும். சங்கப் பாடல்களைப் படிப்போருக்கே இது எத்தனை தவறானது என்பது தெரியும். முழுக்க முழுக்க பத்தொன்பதாம் நூற்றாண்டு இனக்கோட்பாடுகளே ஒரு பண்பாட்டுக்கு ஒற்றை இனமும் ஒற்றை விழுமியமுமே இருக்க முடியும் என கருதுபவை. ஆனால் ஹார்ட்டின் மாஸ்டர் ஸ்ட்ரோக் அதனை நவீன அரசியல் கோட்பாடுகளுடன் இணைப்பதில் தான் உள்ளது: வாசகர்களே ஹார்ட் முன்வைக்கும் ஆய்வுக்கட்டுரை சுருக்கத்தை முழுமையாகப் படித்துப் பார்க்கட்டும்:

The Ramayanam of Kampan is a strange work. It presents a dark view of a world in which nothing is stable, even Rama, who ostensibly represents an absolute, unchanging, and unalterable reality. We find villains suddenly becoming heroes, ugly demonesses turning into women of irresistible beauty, perfect wives becoming shrewish or wicked, and landscapes whose virtue hides menace. On a larger scale, the work finds itself constantly shifting between two views of the world — that of poem, in which the predominant virtue is self-control and the ordered system of Brahmanical thought, and of maram, which is characterized by martial valor, courage, and ultimate power. These two incompatible views not only determine the structure of Kampan’s great work; they also, I would argue, reflect the political realities of his day, in which the great military and imperial power of the Cholas was leavened by the Brahmanical system that they supported. And, in a strange way that brings to mind some modern political themes, they reflect a historical reality, one in which a system from the North came to coexist with a conflicting indigenous system. Kampan had great regard for both world-views, and he knew that they could not be entirely reconciled. He used that fact to endow his work with a creative tension and a constantly shifting perspective that account for its extraordinary power and popularity.

வீரமும் அறமும் incompatible என்பது சரியா? ஏன் அரசதிகாரமும் அறமும் ஒன்று ஒரு சமூகத்தின் தனி விழுமியமாக அடையாளப்படுத்த முடியுமா? மேற்கின் ஆதார ஆதர்ச வாழ்க்கையை (வாஷிங்டனையோ அல்லது ஏசுவையோ) இப்படி கட்டுடைக்கும் ஒரு இந்திய ஆராய்ச்சியாளரை, இந்தியா வாழ் அமெரிக்கர்கள், இந்திய பல்கலைகக்ழகத்தில் தங்கள் பண்பாட்டின் பேராசிரியராக தனி இருக்கை ஏற்படுத்தி கௌரவிப்பார்களா?

மீண்டும் ஒரு விஷயத்தை தெளிவாக்குகிறேன். கம்ப ராமாயணத்தை கட்டுடைப்பதை நான் தவறென சொல்லவில்லை. இனவாத ரீதியில் கட்டுடைப்பதைக் கூட. இலக்குவனார் போன்ற ‘பேராசிரியர்களை’ தேர்ந்தெடுத்து அழைப்பதையும் தவறென சொல்லவில்லை. அதே போல அதே பெர்க்லே தெற்காசிய துறையின் தெலுங்குப் பேராசிரியையாக ஒரு மதமாற்ற பிரச்சாரகரே அதுவும் அமெரிக்க வலதுசாரி ஊடகங்களில் வளைய வரும் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளதையும் நான் குறையாக சொல்லவில்லை. இவற்றைச் சுட்டிக்காட்டுகிறோம் அவ்வளவே.

இச்செயல்முறைகளில் ஒரு போக்கு இருக்கிறது. ஒரு திசை இருக்கிறது. தமிழை பண்பாட்டு ரீதியாக தனித்துப் பிரித்தெடுத்து பின்னர் அதனை அரசியல் சக்தியாக்கும் போது அது மேற்கத்திய தலையீடுகளுக்கு உறுதுணை ஆகிறது.

இறுதியாக இந்நூல் அறிமுக விழாவில் டெல்லியில் இந்நூலின் இரு ஆசிரியர்களும் கூறியவற்றை மீண்டும் சொல்வேன்: இந்த நூல் சொல்பவை இறுதி சத்தியங்கள் என்று சொல்லவில்லை. பல தரவுகளை இங்கு ஒரு குறிப்பிட்ட அமைப்பில் உங்கள் முன் வைக்கிறோம். இவை காட்டும் திசைகளை விவாதிப்போம்.” இது தவறு என நிரூபிக்கப்பட்டால், தமிழர்கள் ஒரு சர்வதேச விளையாட்டில் தெரிந்தோ தெரியாமலோ சதுரங்கக் காய்கள் ஆகிடவில்லை என்பது நிறுவப்பட்டால் அது எனக்கு ஆனந்தமே.

அரவிந்தன் நீலகண்டன்

முந்தைய கட்டுரைஜெயகாந்தன்
அடுத்த கட்டுரைஅமிர்தம் சூரியா