நீலமும் சன்னதமும்

வெண்முரசு விவாதங்கள்

அன்புள்ள ஜெ

வெண்முரசில் நீலம் வெளிவந்த காலகட்டத்தில் இருந்த பரவசத்தை இப்போது பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. வாசகர்கள் அதைக் கொண்டாடியிருக்கிறார்கள். வாசகிகளின் கடிதங்கள் ஏராளமாக வந்தது அப்போதுதான் [போர் ஆரம்பித்தபின் ஒரு வாசகியின் கடிதம்கூட கண்ணில் படவில்லை]

இதற்கு என்ன காரணம்? நான் என்ன நினைக்கிறேனென்றால் கண்ணன் இங்கே ஒரு வாழும் ஃபினாமினன். எத்தனை நாகரீகம் வளர்ந்தாலும் கண்ணன் இங்கே மாறாமலிருக்கிறான். இன்றைக்கும் மதுராவில்  “போல் ஹரி போல் ராதா!” என்று நடனமிடும் பித்து வெளிப்பட்டபடியேதான் இருக்கிறது.

இத்தனைதூரம் நம்முடைய ஆழ்மனதிலே ஊடுருவியிருக்கிற ஒரு விஷயத்தை நாம் பொறுப்பாக ஆராய்ந்திருக்கிறோமா? எளிமையான நையாண்டிகள், சர்வசாதாரணமான வரலாற்று ஆராய்ச்சிகள் மட்டும்தான் வெளிவந்திருக்கின்றனவே ஒழிய ஆழமான சிந்தனைகள் வெளிவந்ததே இல்லை.

அதைவிட கண்ணனை அனுபூதியாக அறியும் மனநிலைக்கு அருகே செல்லும் நவீன இலக்கியப்படைப்பே இல்லை. இங்கே கண்ணன் உணர்வுசார்ந்தும் பித்துசார்ந்தும்தான் அணுகப்பட்டானே ஒழிய எவ்வகையிலும் அறிவார்ந்த தேடலால் அல்ல. அப்படியிருக்க கண்ணனை அந்த தளத்தை தவிர்த்துவிட்டு ஆராய்வதென்பது அறிவின்மையாகவே அமையும் என்பதுதான் உண்மை.

இலக்கியம் என்பது ஆராய்வதற்குரியது அல்ல. பறவையை கூடவே பறந்து அறிவதற்குரியது இலக்கியம் என்பார்கள். கண்ணன் என்னும் பரவசத்தை அதே பரவசத்துடன் கூடவே சென்று அறிகிறது நீலம். ஆகவேதான் வாசகர்கள் அதைக் கொண்டாடினார்கள். அதேசமயம் அது நவீன இலக்கியச்சூழலுக்குள் கண்ணனைக் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. எல்லாவகையான அறிவார்ந்த ஆராய்ச்சிக்கும் அது இடமளிக்கிறது. நீலம் ஒரு நவீன இலக்கியப்படைப்பாகவும் உள்ளது

நீலம் நாவலைப்பற்றிய வாசகர்களின் எதிர்வினைகளைப்பற்றியே ஒரு நீண்ட ஆராய்ச்சிக்கு இடமிருக்கிறது. எதிர்காலத்தில் அது நிகழலாம்

ரா. பாலகிருஷ்ணன்

ஆனால் நீலத்தின் ஆரம்பமே ராதை தான். அவள் பாரதத்தில் இல்லை என்பதையே நீங்கள் சொல்லி தான் எனக்குத் தெரியும். அப்படியிருக்க ராதையை வைத்து கதையை நகர்த்துவது ஏன்?

கனசியாம யோகம்

ரயிலிலே போகிறபோது அந்த தாளம் நம்மை மயக்கி ஒரு சந்தத்தை நம் அகமனதில் உண்டுபண்ணும். அப்போது நாம் சாதாரணமாக யோசிக்காத வரிகள் வந்துவிடும். இந்த சந்தம் அதைவிட ஆழமான ஒரு விஷயம்

சந்தமும் மொழியும்

முந்தைய கட்டுரைஇளிப்பியல்
அடுத்த கட்டுரைகுருபூர்ணிமா