என்றுமுள ஒன்று

வெண்முரசு விவாதங்கள்

அன்புள்ள ஜெ

வெண்முரசு முடிந்தபிறகுதான் அதை நான் ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறேன். அதை ஒருவகையான பரவசநிலையில் வாசித்துக்கொண்டெ இருந்தேனே ஒழிய தொகுத்துக்கொள்ளவில்லை. அப்படி வாசிக்கலாமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் என்ற கட்டுரை அந்த சந்தேகத்தை தீர்த்துவைத்தது. வெண்முரசை அப்படித்தான் வாசிக்கவேண்டும் என்ற எண்ணத்தை அடைந்தேன். கொஞ்சம் கனவும் கொஞ்சம் குழந்தைத்தனமும் கொஞ்சம் பித்துக்குளித்தனமும் இல்லாமல் இதை வாசிக்கமுடியாது என்பதுதான் உண்மை

இப்போது தொகுத்துக்கொள்வதற்காக பழைய வெண்முரசின் விடுபட்ட பகுதிகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். மழைப்பாடலில்தான் பலபகுதிகளை விட்டிருக்கிறேன். ஏனென்றால் அப்போது இந்நாவல் எப்படி விரியப்போகிறதென்று தெரியாது. இதன் அமைப்பு என்னவென்றும் தெரிந்திருக்கவில்லை. ஆகவே பல வர்ணனைப்பகுதிகளை விட்டுவிட்டேன். ஆனால் அங்கேதான் அடித்தளம் அமைந்திருக்கிறதென்று இப்போதுதான் புரிந்தது

இப்படி தொகுத்து வாசிக்கும்போது முன்பே இந்த தளத்தில் வெண்முரசு பற்றி பேசப்பட்ட பகுதிகளெல்லாம் முக்கியமானவை என்ற எண்ணம் வந்தது. பல அடிப்படையான கேள்விகளெல்லாம் அன்றே பேசப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் தேடித்தொகுத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வளவு நீண்ட காத்திரமான இலக்கியவிவாதம் இந்தத்தளத்திலே நடந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. தமிழில் இது முன்னுதாரணமே இல்லாத ஒரு நிகழ்வு என்று நினைக்கிறேன்

எனக்கு இந்தவடிவம், இந்த மொழிபற்றி நிறைய சிக்கல்கள் இப்போது உண்டு. ஒட்டுமொத்தமகா இதை பார்க்கும்போதுதான் அந்தச்சிக்கல்களெல்லாம் எழுந்து வருகின்றன. அவற்றை எப்படி அணுகுவது என்பதை இந்த கடிதங்கள் விவாதங்களை எல்லாம் தொகுத்துவாசித்தபிறகுதான் முடிவெடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

வெண்முரசின் அடிப்படைகளைப் பற்றி நீங்கள் முன்பு எழுதிய என்றுமுள ஒன்று என்னும் கட்டுரை அவ்வகையில் முக்கியமான ஒரு தொடக்கம்

ராஜசேகர்

வெண்முரசின் வாசகர்களாக வரும் இளையதலைமுறையினரில் ஒருசாராரிடம் எப்போதுமுள்ள கேள்வி ஒன்றுண்டு.  ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இக்கேள்வி என்னைநோக்கி வந்துகொண்டே இருக்கும்.

என்றுமுள ஒன்று

முந்தைய கட்டுரைதன்தேர்வு
அடுத்த கட்டுரைகணையாழி,டார்த்தீனியம்