தோல்பாவை நிழற்கூத்து

ஆசிரியருக்கு வணக்கம்

வனவாசம் கதையை நண்பர்கள் இணைந்து இன்று  விவாதித்தோம். கிராமிய கலைகள் மற்றும் கலைஞர்கள்  பற்றி விரிவாக சொன்னது அந்த கதை.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் தோல்பாவை கூத்து நடத்தும் முப்பத்தி ஏழு குடும்பங்கள் உள்ளன.அவர்களை வழிநடத்தும் முத்து சந்திரன் அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.ஆறு தலைமுறைகளாக இதை செய்துவரும் அவர்களுக்கு வேறெந்த தொழிலும் தெரியாது .

தற்போதுள்ள சூழ்நிலையில் எங்கும் அவர்களால் நிகழ்சிகள் நடத்த இயலாததால் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர்.கூத்து நடத்தாத நாட்களில் அந்த கலைஞர்கள் வீடுகள் இருக்கும் பகுதிக்கு சென்று அரிசி மற்றும் உணவுபொருட்களை பெற்றுத்தான் வாழ்ந்து வந்தனர் . தற்போது அதற்கும் வழியில்லை .

நான் டிரஸ்ட்டியாக இருக்கும் கடலூரில் பதிவு செய்த கிளப் டென் சாரிட்டபிள் அறக்கட்டளை சார்பாக அந்த முப்பத்திஏழு குடும்பங்களுக்கும்.இரு கட்டமாக உணவு பொருட்கள் வழங்கினோம்.அவர்கள்  சுயதொழில் செய்து பிழைப்பதற்காக கடந்த வாரம் ஒரு குடும்பத்திற்கு தையல் இயந்திரம் ஒன்று வழங்கியுள்ளோம் .

அவர்களின் வருவாயை பெருக்கி  சுயதொழில் செய்வதற்கான நிதியை உருவாக்க,இணையம் மூலமாக ஒரு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.கட்டணம் ஐம்பது ரூபாய் மட்டுமே .பள்ளி,கல்லூரி, நிறுவனங்கள் அவர்களுக்கு இணையவழி நிகழ்ச்சிகள் நடத்தவும் அவர்களுக்கு வாய்ப்பு தரலாம்.  பிளாஸ்டிக் ழிப்புணர்வு,ராமாயணத்தின் சில பகுதிகளையும்  நிகழ்ச்சிகளாக அவர்கள் நடத்துவார்கள் .

வரும் ஞாயிறன்று நடக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன் . அந்த குடும்பங்கள் இனி வரும் நாட்களில் பசியின்றி வாழ உதவுங்கள்.

ஷாகுல் ஹமீது ,

நாகர்கோயில்

CLUB TEN CHARITABLE TRUST & 92.7 BIGFM cordially invite you to join us for the leather puppet virtual show .

*Click here to Register*

https://bit.ly/3iM3NO8

GPAY  9842670869

(Muthuchandran)

*Join Google Meet*

https://meet.google.com/wbw-ngab-ngv

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்- வாசிப்பு
அடுத்த கட்டுரைஞானி-16