ஜெயகாந்தன்:கடிதங்கள்

/ஜெகெ தமிழ்ச்சமூகத்தில் எழுத்தாளனின் முகமாக அறியப்படுபவர்/ என்று ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.
தமிழ்ச்சமூகத்தில் எழுத்தாளனுக்கு ஒரே முகம் மட்டும் இருந்தால் மட்டுமே ஜெயமோகன் சொல்வது சரியாகும் எனலாம். ஆனால், ஒரே முகமா? பன்முகமா?
ஒரே முகம் என்றால், சிரிப்புத்தான் வரும்.  அப்படிப்பட்ட இலக்கியம் வரண்டுவிடும் சாமி!
ஜெகெ ஒரு தமிழ் எழுத்தாளர். அவர் பாணியில் எழுதுகிறார். அது பிறரிடம் இருந்து வேறுபட்டிருப்பதால், பரவலாக அறியப்படுகிறார். படிப்பவர் உலகத்தில் பாமரர்களைத்தவிர மற்றவர்களால்.
பிறமொழி இலக்கியம் அறிந்தவருக்கு, இவர் பாணி ஒன்றும் வியப்பல்ல.  பிறமொழி இலக்கியம் என இங்கு குறிப்பிடப்படுவது சொல்வது, ஆங்கிலம், பிரென்சு,  தமிழருக்கு பிறமொழி இலக்கியம் வந்து சேராததால், இவர் எழுத்து ஒரு தமிழ்ச்சேவை எனலாம். நான் செய்த பெரிய தப்பு: ஜேம்ஸ் ஜாய்ஸையும், ஹென்றி ஜேம்ஸையும் படித்துவிட்டு, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ஐப் படித்ததுதான். இல்லாவிட்டால், இவரின் தீவிர இரசிகனாய்ப் போயிருப்பேன்.
பரிசுகள் கொடுக்கலாம். எழுத்தாளர்களை ஊக்கிவிக்க வேண்டும். அதுவும் 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் இவரைப்போன்றோரைக் கண்டிப்பாக ஊக்கிவிட வேண்டும். எங்களுக்கு பரிசுகள் தேவையில்லை என்பததெல்லாம் சும்மா பந்தா.
நன்றி. வணக்கம்.
கரிக்குளம்.

கரிக்குளம்.

அன்புள்ள கரிக்குளம்,

தங்கள் கருத்துக்களை அறிந்துகொண்டேன். நன்றி

நானும் ஹென்றி ஜேம்ஸையும் ஜேம்ஸ் ஜாய்சையும் படித்திருக்கிறேன். ஆகவே ஜேம்ஸ் என்ற பொது அம்சத்தை வைத்து இருவரையும் ஒரே மூச்சில் குறிப்பிடமாட்டேன்.

இவ்விருவர் எழுத்துக்களும் சென்றுசேராத மொழிகளிலேயே இலக்கியம் இருக்க முடியும் என்றும் சொல்ல மாட்டேன்.


ஒரு காலகட்டத்தின் சிந்தனைகளை வடிவமைத்த , ஒரு தலைமுறையினரை பாதித்த ஓர் எழுத்தை அப்படி தூக்கி வீசவும் மாட்டேன்
எகிப்து அல்லது மெசபடோமிய நாகரீகம் குறித்த ஆய்வுகளை படித்து தொலைத்துவிடாமையால் நீங்கள் ஐராவதம் மகாதேவனின் ஆய்வுகளை தூக்கி வீசவில்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது

தமிழில்வந்து சேர்ந்தமாப்பஸான், தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, விக்தர் யூகோ, ரோமேய்ன் ரோலந்து, எமிலி ஜோலா, தாமஸ் மன், ஹெர்மன் ஹெஸ், இவான் துர்கனேவ், எர்னஸ்ட் ஹெமிங்வே, மாப்பஸான், கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸ், ஜோர்ஜ் லூயி போர்ஹெ, இடாலோ கால்வினோ போன்றவர்களைப் படித்தவர்களுக்கும் ஓரளவு உலகஇலக்கிய அறிமுகம் இருக்கலாம் என்றே சொல்வேன். அதாவது தமிழர்களில் பாமரர்கள் அல்லாத சிலரும் இருக்கிறார்கள் என்று.

மேலும் உலக இலக்கியம் படிக்கும் அவசரத்தில் நான் ஒருபோதும் சொற்றொடர்களை பிழைபடப்புரிந்துகொள்ள மாட்டேன். தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஓர் எழுத்தாளனின் முகம் என அறிந்திருக்கும் முகம் ஜெயகாந்தனுடையது. ஆகவே அவரை அனைத்துவிருதுகளும் இயல்பாகவே தேடிவருகின்றன என்று நான் எழதியதை புரிந்துகொள்ள தினத்தந்தி மொழிஞானமே போதும்
ஜெ

**
எம்..சுசீலா,புது தில்லி.

அன்பு ஜெ.எம்.குருவணக்கம்.

ஜே.கேயின் பத்மபூஷண் செய்தி, சொல்லொணாத மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது.அவரை முதல் ஆதர்சமாகக்கொண்டு எழுதுகோலை ஏந்தியவள் நான்.

ஜே.கே பற்றி ஒரு கட்டுரை எழுதிவிட்டு,நினைவுகளை அசைபோட்டபடிஸஉங்கள்மண்ணும் மரபும்நூலில் ஜெயகாந்தன் பற்றிய பக்கங்களைப்புரட்டிக்கொண்டிருந்தேன். ‘அக்கினிப்பிரவேசம்பற்றிய உங்கள் கோணத்தைப்பார்த்து ஒருகணம்திகைப்பில் உறைந்துவிட்டேன்.எத்தனை முறை படித்திருப்பேன் அதை?எனக்கு அதிலுள்ள மேலோட்டமான சமூகச்செய்திதான் கண்ணில்,மனதில் பட்டிருக்கிறதே தவிர நீங்கள்

குறிப்பிட்டிருப்பதைப்போன்ற உளவியல் நோக்கு,சூயிங்கம் மெல்லும் சூட்சுமம்அதைத்தொடர்ந்தசில நேரங்கள்இணைப்புக்கண்ணி,உறைத்ததே இல்லை.

ஜே.கேயே அப்படி நினைத்து எழுதினாரோ இல்லையோ? உங்கள்விளக்கம் தருக்க பூர்வமானதாகவும், பொருத்தமானதாகவும்தான் படுகிறது.நன்றி.

அன்புள்ள சுசீலா

நன்றி


ஜெகெயிடம் நேற்று பேசினேன். சம்பிரதாயமாக ஒரு வாழ்த்து சொன்னேன். சிரித்தார். விருதுகளால் அடையாளம் காட்டப்படும் இடத்தை அவர் தாண்டிவிட்டார்.

ஜெயகாந்தனின் பல கதைகள் இப்போதுதான் சரியான மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் முக்கியமான இலக்கிய இதழ்களில் வெளிவருகின்றன. அவரது எழுத்தில் பலதரப்பட்ட கதைகள் உண்டு. நேரடியான குரலில் சமூகப்பிரச்சினைகளை பேசக்கூடியவை, அறப்பிரச்சினைகளை விவாதிக்கக்கூடியவை, உணர்ச்சிகரமானவை. அவரது அறம் சார் கதைகளே முக்கியமானவை. அவர் ஒரு நவீன அறவியலாளர் .

கதைகள் அவற்றைப் படிப்பவர்களாலேயே உயிர் கொள்கின்றன. புரட்டிப்பார்ப்பவர்கள், அன்றாட அரசியலை மட்டுமே தேடுபவர்கள் அவருக்குள் என்றல்ல எந்த படைப்புக்குள்ளும் நுழைய முடியாது. நம் படிப்பாளிகள் பலருக்கு மேலை இலக்கியம்புரிவதற்குகாரணம் புரிந்துகொண்டவர்கள் ஏற்கனவே நிறைய எழுதியிருப்பார்கள் என்பதே

ஜெகெயை இனிமேல்தான் தமிழ்ச்சமூகம் காய்தல் உவத்தல் இன்றி வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்


ஜெ

88

அன்புள்ள ஜெயமோகன்

ஜெயகாந்தனுக்கு பத்மபூஷண் விருது கொடுக்கபப்ட்டது பற்றி எழுதியிருந்த வரிகள் கச்சிதமாக இருந்தன. அவர் சிறந்த படைப்பாளி என்பதுடன் படைப்பாளிக்குரிய வாழ்க்கையை வாழ்ந்தவரும்கூட. ஆகவேதான் அவர் தமிழ் மக்கள் இலக்கியவாதியாக மதிக்கும் முகமாக இருக்கிறார். பிறர் இலக்கியம் மட்டும் எழுதி தனித்த வாழ்க்கையிலே ஒளிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் இலக்கியவாதியின் கமாக அறியப்படாமல் இருப்பதுதானே இயல்பானது?

நேற்றுவந்த தினகரன் நாளிதழைப்பார்த்தீர்களா? ‘நடிகர் விவேக்குக்கு தேசிய விருதுஎன்று தலைப்பு. விருது கிடைத்த அத்தனைபேரிலும் அவர்களுக்கு விவேக் தான் முக்கியமானவர். இது அவர்களின் பாமரப்புத்தியா ? இல்லை தமிழ் மக்களின் பாமரப்புத்தியா? என்று தெரியவில்லை. என் நண்பன் பத்திரிகையிலே வேலை பார்க்கிறான். அவன் சொல்கிறான் பத்க்திரிகையிலே வேலைபார்ப்பவர்களுக்கு உண்மையிலேயே ஜெயகாந்னை தெரிந்திருக்காது என்று. அவர்கள் எல்லாம்SSLC படித்துவிட்டு பத்திரிக்கை வேலைக்கு வந்து பலவருடங்களாக இதிலேயே உழல்பவர்களாம். உண்மையா?

கோதண்டம்

சென்னை

அன்புள்ள கோதண்டம்,


40
வருடங்களாக நம் இதழியல் இப்படித்தான் இருக்கிறது.


எழுத்தாளர்கள் இரு வகை. சிலர் சமூகப்பிரச்சினைக்காக எழுத்துக்கு வெளியே பேசுவார்கள். சிலர் பேச மாட்டார்கள். ஒருவர் இதில் எந்த வகையான எழுத்தாளர் என்பது அந்த எழுத்தாளரின் தனிப்பட்ட இயல்பை பொறுத்த விஷயம் மட்டுமே. இரண்டுமே சரி. இரண்டுமே சிறப்பான தகுதி அல்ல. அவர்களின் இயல்பு மட்டுமே. இலக்கியவாதியை அதைவைத்து மதிப்பிட முடியாது கூடாது.


. a

 

முந்தைய கட்டுரைமரபிலக்கியம் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவரலாறு ,ஒரு கடிதம்