பாண்டவர்களுடைய தண்டனையின் கடைசிப் பகுதியான தங்களை உருமாற்றி வாழும் விராடப் பருவத்தை சித்தரிக்கிறது நீர்க்கோலம். இதுநாள் வரை பிறரால் சமைக்கப்பட்டு தனக்கு கொடுக்கப்பட்ட உருவத்தை நீரில் வரைந்த கோலமாய் அழித்து மாற்றுரு கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் பாண்டவர்கள். 12 வருட வனவாசம், இதை எதிர்கொள்வதற்கு அவர்களைப் பண்படுத்தியிருந்தது.
கட்டுரை நீர்க்கோலம் – A Journey of Un-becoming