நூறுகதைகள் பற்றி…

நூறுகேள்விகள்

பயண ஆவணப்படங்களை நான் விரும்பிப் பார்ப்பதுண்டு . அதில் வெவ்வேறு நிலக்காட்சிகளையும் மனிதர்களையும் பார்ப்பது சுவாரசியமாக இருந்தாலும் , அந்நிகழ்ச்சிகளில் ஒரு நல்ல பயணியும் (host ) அமையும்போதுதான் நிகழ்ச்சி உண்மையிலேயே களைகட்ட ஆரம்பிக்கும் . வெறும் வேடிக்கை பார்த்தல் என்பது பயணமாக மாறும் புள்ளி அது .

அதுவும் அது ஏதோ ஒருவகை தேடலை கொண்ட பயணம் எனும் போது அதில் நாம் முழுமையாகவே ஒன்றிப்போய் விடுகிவோம் .அவர் ரயிலை தவற விடுவதோ , எண்ணையில் பொறிக்கப்பட்ட வெட்டுக்கிளியை உண்பதோ , அந்தி சாய்வதை ஒரு மலையுச்சியில் அமர்ந்திருந்து பார்ப்பதோ நாமே அங்கிருப்பது ஈடுபடுவது போன்ற ஒரு ஒரு நிகர் அனுபவமாகிவிடும்.

புனைவில் இன்னும் படி மேலே போய் அது ஒரு கட்டற்ற அகப்பயணமாகிவிடுகிறது , முற்றாகவே கற்பனையில் விரித்துக்கொள்ளும் ஒரு உலகம் . ஜெ எழுதிய இந்த நூறு கதைகளை வாசித்து வந்தது இப்படி ஒரு நிறைவான அனுபவத்தையே அளித்தது ,தொடர்ந்து நூறு நாட்கள் நிகழ்த்திக்கொண்ட அகப்பயணமாய்.

தன்னுடையை தனிப்பட்ட தேடல்களின் ஒரு பகுதியாகவே இந்தக் கதைகளை எழுதிப்பார்க்கிறேன் என்று ஜெ பலமுறை குறிப்பிட்டுள்ளார் . இந்தக் கதைகளில் யாதேவியில் எதிலும் பற்றாமல் உறவாடும் உழிச்சில் மருத்துவனாக ஆரம்பித்து , எதுவுமே பேசாமல் இருளில் வரம் அருளும் பீடி இழுக்கும் திருடன் வரைக்குமான ஒரு நீண்ட பயணம் இருக்கிறது.

இந்தப் பயணத்தில் தேவியும் , பகவதியும் , தேசமும், சமூகமும் இயல்பும் இருப்பும் , ருசியும் பசியும், தனிமையும் திரளும் ,தேடலும் தத்துவமும், அதிகாரமும், அன்பும் ,மரபும் மனமும் ,தகவலும் தர்க்கமும், கேள்வியும் விமர்சனமும் , மெய்யியலும் கவித்துவமும் – பாதையாகவும் , கடக்கும் நிலங்களாகவும் , மனிதர்களாகவும் , காட்சிகளாகவும் ஆழ்மனப்பெருக்காக நம்மை அடித்துச்செல்கிறது.

இதன் மூலம் ஜெ கடந்து வந்த பாதையை போலவே ஒவ்வொரு வாசகருக்கும் அவரவருக்கான பிரத்தியேக பாதைகள் கண்டடையமுடியும். அவர் வலதாக திரும்பிய ஒரு பாதையில் நாம் இடதாக திரும்பலாம்.அவர் சும்மா கைகாட்டி விட்ட நகர்ந்து விட்ட இடத்தில் நாம் ஆழ்ந்து அமர்ந்திருக்கலாம். இப்புனைவுலகில் எண்ணற்ற வகைகளில் நம் அறிதல் நிகழலாம்.

ஒருவகையில் இந்தக் கதைகளை பெயர்நூறான் கதையில் வரும் அந்தரத்தில் மிதக்கும் குழந்தைகளை போல கற்பனை செய்து கொள்கிறேன். நூறாவது கதையாக இன்று வந்த ‘வரம்’ கவித்துவ அடர்த்தியும் தரிசன ஒருமையும் அமைந்த கதை .கடிகாரத்தில் எல்லா நகர்வும் ஒரே மாதிரிதான் என்றாலும் பன்னிரெண்டு என்பது ஒரு நாளையே புரட்டி போட்டுவிடுகிறது , இந்த நூறு என்பதும் அப்படித்தான் கடைசி கதையாக இந்த புனைவு வட்டத்தை நிறைவு செய்கிறது

கேவீ. முகநூலில்

நூறு தருணங்கள்

அன்புள்ள ஜெ

நூறுகதைகளையும் படித்து முடித்தேன். ஒருவாரம் அந்த மீட்டலிலேயே இருந்தேன். இந்தமாதிரி ஒரு அனுபவம் அரிதானதுதான். நான் வாசித்த பெரியநாவல்களின் அதே அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஒரு தனிமை, மொத்த வாழ்க்கையையே திரும்பிப்பார்க்கவேண்டும் என்னும் நினைப்பு. சிந்தனை ஓடாத நிலை

இந்தக்கதைகள் பெரும்பாலும் இனிமையானவை, நம்பிக்கையையும் கனிவையும் உருவாக்குபவை. வாழ்க்கையைப்பற்றிய ஆழமான ஒரு தரிசனநிலையில் நின்றுகொண்டு உருவாக்கப்படும் நம்பிக்கை இது. பஷீர் போன்றவர்களின் கதைகளில் உள்ள மனநிலை. இது ஒருவகையான டிவைன் மனநிலை என நினைக்கிறேன். இது உருவாகிவரவேண்டும். வெண்முரசு வழியாக இதை உருவாக்கமுடியும்

தொடர்ச்சியாக ஒரு மைக்ரோ பார்வைதான் இந்தக்கதைகளில் உள்ளது. வாழ்க்கையின் ஒரு துளியில் இருந்து வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப்பார்க்கும் பார்வை இது என நினைக்கிறேன். சிறுகதைக்கு உரிய பார்வையே அதுதானே? துளி கதையில் வருவதுபோல மிகப்பெரிய சிக்கல்களை தீர்த்து நல்ல உறவுகளை உருவாக்கும் ஒரு துளிதான் எல்லா கதைகளும். ஒவ்வொரு கதையிலும் உள்ள உச்சப்புள்ளியை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். எல்லாமே மனிதவாழ்க்கையின் உச்சங்களில் நிகழ்கின்றன. மர்மமான புள்ளிகள் அவை. வாழ்க்கையின் ஆழமும் அழகும் வெளிப்படுபவை

உதாரணமாக எளிமையான கதையாகிய பூனை. புலியை பூனையாக ஆக்கிக்கொண்டு பிரச்சினை இல்லாமல் வாழும் வாழ்க்கை. அப்படி நினைத்தால் புலிக்கும் வேறுவழி இல்லை. வருக்கை கதையில் ஆணின் நறுமணத்தை அந்த டப்பாவில் உணரும் பெண்ணின் மலர்ச்சி. அப்படியே வந்து வரம் கதையில் கள்வன் அந்த ஏழைப்பெண்ணுக்கு அளிக்கும் முத்தம். எல்லாமே உன்னதமான தருணங்கள். மனிதர்கள் தங்களையும், சூழலையும், தெய்வத்தையும் உணரும் இடங்கள் அவை.

எவ்வளவு இடங்கள். யானைமேல் ஏறி காட்டுக்குள் செல்லும் ஆனைக்காரன் நாயரின் உச்சமும் சரி[ராஜன்], கல்லில் நாதஸ்வரம் கேட்கும் ஆசாரியின் உச்சமும் சரி,[தேனீ] முதுமையில் ஒரு இளைஞனின் உயிர்த்துடிப்பைக் கண்டுகொள்ளும் முதியவரின் உச்சமும் சரி [ பிரசண்டு] புதையல் கண்டுகொள்ளும் அன்னையின் தருணமும் சரி [ஆபகந்தி] மரணதேவியை கண்டுகொள்ளும் நோயாளிப்பெண்ணின் தருணமும் சரி [ அருள்] சோற்றை தெய்வமாக காணும் வியாபாரியும் சரி [புழுக்கச்சோறு] வாழ்க்கை என்பது ஒரு நடிப்பு என உணரும் துறவியும் சரி [நிழற்காகம்]மானுட உச்சங்கள்தான். நூறு அற்புதத்தருணங்கள் என்று இந்தக்கதைகளைச் சொல்லமுடியும்

அதுதான் இந்தக்கதைகளிலுள்ள இன்னொரு சிறப்பு. இந்தக்கதைகள் எதையும் ஒளிக்கவில்லை, செயற்கையாகப் பூடகமாக ஆக்கவுமில்லை. எல்லாவற்றையும் முடிந்தவரை சொல்லவே முயல்கின்றன. இவ்வளவுதான் சொல்லமுடியும் என்ற இடத்தில்தான் நின்றுவிடுகின்றன. அன்றாடவாழ்க்கையிலுள்ள சர்வசாதாரணமான ஒரு கருத்தைச் சொல்லும்போதுதான் அதை ஒளித்துவைக்கவேண்டியிருக்கிறது. ஒரு மானுட உச்சத்தை சொல்லத்தான்வேண்டும், ஆனால் சொல்லி முடிக்கமுடியாது. குறிப்புணர்த்தலாம். வாசகன் அங்கிருந்து அந்த உச்ச அனுபவத்தை மேலே மேலே வளர்த்துச்செல்வான். சப்டெக்ஸ்ட் என்பது அப்படி உருவாகி வருவதுதான். சப்டெக்ஸ்ட் என்பது வாசகன் உருவாக்கவேண்டியது, ஆசிரியன் வைப்பது அல்ல. வாசகன் போகும் பாதையைக்கூட ஆசிரியன் உருவாக்கக்கூடாது.

நமக்குச் சிறுகதைகளிலே பெரிய ஒரு போதாமை உண்டு. சிறுகதை இங்கே வந்தபோது அது ஒரு சுதந்திரத்தை அளித்தது. அன்றாடத்தைச் சொல்லலாம் என்பதும் சின்னவிஷயங்களையும் சொல்லலாம் என்பதும் அதற்குமுன்னால் நம் இலக்கியத்திலே கிடையாது. ஆனால் சிறுகதையை எழுதியவர்கள் பெரும்பாலும் ரொம்பச் சின்னவிஷயங்களையே சொல்லிச் சொல்லி நிரப்பிவிட்டார்கள். ஆகவே சிறுகதைகளை வாசித்தால் சலிப்பே மிஞ்சுகிறது. ஒரு அலுப்பூட்டும் விளையாட்டு போலத் தோன்றுகிறது. சிறுகதை தன்னுடைய கவித்துவத்தால் சப்ளைமை அடையவேண்டும் என்பதை தமிழ்ச்சூழலுக்கு அறுதியிட்டுச் சொன்ன கதைகள் இவை.

ஆர்.ராமச்சந்திரன்

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

முந்தைய கட்டுரைவெண்முரசும் இந்தியாவும்- பிரபு மயிலாடுதுறை
அடுத்த கட்டுரைபுரட்சித்தலைவர் பட்டம்