துடுப்பை மீனுக்குச் சிறகென கொண்டவன். அவன் செய்யும் தொழிலில் நிபுணன். அயோத்தி ராமன் தன் தம்பியாக்க் கருதிய குகனின் குலத்தில் வந்தவன். குகனை அணைத்துக்கொண்ட ராமனின் தொடுகையை தொழும்பக்குறியாய், ஆபரணமாய் அவன் குலமே ஏந்தி நிற்கிறது. ராமனின் வாழ்வில் முக்கிய தருணத்தில் எந்தவொரு எதிர்ப்பயனும் கருதாது அவனுக்கு உதவியவன் குகன். அவன் வழித்தோன்றலான நிருதன் அவனைப் போலன்றி இருக்க முடியாது போலும்.
கட்டுரை மீண்டும் ஒரு காவிய குகன்-ஸ்ரீனிவாசன்