மரியாதைக்குரிய ஆசான் அவர்களுக்கு
வணக்கம்.
இங்கு நாங்கள் ஒரு சிறு குழுவாக உங்களது சிறுகதைகளை வாராந்திர மெய்நிகர் கூடுகையின் வழியே பேசி வருகிறோம். அவ்வகையில் அடுத்ததாக “அருள்” சிறுகதையை தெரிவு செய்தார் திரு வளவ. துரையன் அவர்கள். ஏற்கனவே வாசித்ததுதான் என்றாலும் அவர் கூறியபோது மறந்து விட்டிருந்தேன். ஆசிரியையான என் மனைவியின் பள்ளி அலுவலுக்காக இன்று திருவக்கரை அழைத்துச் செல்ல நேரிட்டது. கோவிட் காரணமாக கோயில் திறக்கப்படவில்லை. கோயிலைச் சுற்றி நடந்து கொண்டிருந்தபோது உள்ளிருக்கும் அம்மனுருவை நினைத்துக் கொண்டதும் அந்த அருள் சிறுகதையும் முழுவதுமாக நினைவில் எழுந்து வந்தது. திருவக்கரை வக்ரகாளியம்மன் எனக்கு அணுக்கமான உருவகம் கூட. வக்ராசுரன் தங்கை துன்முகியை வதம் செய்யும் அஷ்டபுஜகாளி உக்கிர வடிவானவள். ஆயினும் அவ்வசுர மகள் கருவுற்றிருப்பது அறிந்து அவள் வயிற்றிலிருந்த கருக்குழவியை மிகக் கவனமாக தன் கையால் எடுத்து பத்திரப்படுத்தி வைக்கும் விதமாக தன் செவியில் குழையாக அணிந்துகொண்டு வதம் முடிப்பதை எண்ணும்போதெல்லாம் அன்னையின் குரூரத்தை விட பெருங்கருணையே மாபெரும் தரிசனமாகத் திகழ்கிறது. ஆம். குரூரரும் கருணையும் ஓருருவில் அமைந்து அருள் புரிபவளே காளி. அவள் போலத்தான் கௌமாரி, வராஹி, சாமுண்டி, கொற்றவை, பகவதி ஆகியவையெல்லாம். அதன் வார்ப்புரு ஒன்றுதான். ஆனால் அதை கண்டுணர்ந்து ஒருவர் அடையும் தரிசனமே அக்கதை எனத்தோன்றியது.
பெரும்பிணிக்கு ஆட்பட்டு வாழ்தலின் மீதான சுவையை இழந்து ஓர் அறைக்குள்ளேயே அடைபட்டிருக்கும் தன் மனைவி சாதனாவுக்கு மலைத்தென்றலின் சுவாசமும் சூழலும் சற்றே ஆறுதல் தருமென்றெண்ணி இணையம் வழி அறிந்திட்ட அருகிருக்கும் ஒரு சமண மலைக்குகைக்கு அழைத்துச் செல்கிறான் மாட். அங்கு எதிர்பாராவிதமாக பாறையிடுக்கின் ஊடாக சென்றிறங்கும் ஒரு மிகப்பெரிய குகையில் சுவரில் புடைப்புச் சிற்பமாக வீற்றிருக்கும் கொடூரமானதோர் தெய்வச்சிலையை கண்டு இருவரும் திகைக்கிறார்கள். அந்த குரூரம் அவனை பேதலிக்கச் செய்கிறது. அவளுக்கோ கிடைத்தற்கரிய தரிசனமாகத் திகழ்ந்து விடுகிறது.
அங்கு செல்லும் போது மேலும் உளச்சோர்வு கொண்டு பத்து வயது கூடியது போல் தோற்றம் தந்தவள் திரும்பும் போது பத்து வயது குறைந்த இளமையில் உற்சாகம் பொங்க திளைக்கிறாள். தன் முடிவை தானே கண்டுகொண்டு அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்று எஞ்சிய நாட்களை நொடியும் சிதற விடாது வாழத்துணிகிறாள் . ஒரு வகையில் அதையே அவனும் கண்டுணர்ந்து எதிர்கொள்ள துணிவின்றி பயந்துவிடுகிறான் என்றே கொள்கிறேன். எது எவ்வாறாயினும் அன்று அங்கு அவளுக்கான மீட்பையளித்தது அதுநாள் வரை அவள் கொண்டிருந்த தர்க்க மனமோ, உடனுறையும் அன்பிற்கினிய மானுட உறவோ அல்ல என்பதே நிதர்சனம்.
மிக்க அன்புடன்
மணிமாறன்.
குறிப்பு: நான்காண்டுகளுக்கு முன்னர் காஞ்சியை சுற்றியுள்ள சமண மலைகுகைக் கோயில்களை காணச் சென்ற பயணத்தில் நானும் உடன் வந்திருந்தேன். விழுப்புரம் அருகிருக்கும் பனைமலைக்கோயிலும் அதில் அடக்கம். தாந்த்ரிக் திருமா சொல்லும் வரை அந்தக் கோயிலை இந்தக் கதையுடன் இணைத்து பார்க்கவேயில்லை. அங்கு கண்ட மகிஷாசுரமர்த்தினி சிற்பமும் பிறகே நினைவில் எழுந்து வந்தது
அன்புள்ள ஜெ
அருள் கதை நூறுகதைகளை வாசிக்கும்போது அவ்வளவு அழுத்தமானதகாத் தோன்றவில்லை. ஆனால் இத்தனைநாள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.நம்மைச்சூழ்ந்திருக்கும் இந்த மாபெரும் கொலைத்தெய்வத்திடம் நம்மால் மண்டியிட்டு மன்றாட மட்டுமே முடியும் இல்லையா? அவள் நமக்கு அருள்வது ஞானமாகத்தான் இருக்கும் என்றும் அதன்வழியாக மானுடம் மேலேதான் செல்லும் என்றும் நம்பவேண்டியதுதான்
எம்.ஆர்.லக்ஷ்மணன்
அன்புள்ள ஜெ
இந்த நூறுகதைகளிருந்தும் வெளிவர நெடுநாட்களாகும் என நினைக்கிறேன். பலகதைகளிலுள்ள சின்னச்சின்ன நுட்பங்களை இப்போதுதான் வாசிக்கிறேன். குறிப்பான கதை ஆப்ரிக்காவில் விவசாயம் செய்யப்போகும் இளைஞனைப்பற்றிய கதை. இனிமையான படைப்பு. அந்தக்கதையில் அந்த இளைஞனின் குணாதிசயம் சொல்லப்படவே இல்லை, அவனுடைய பழக்கவழக்கம் வழியாகவே அவனை அணுக்க்மாக பார்க்கவும் முடிகிறது. மென்மையான இனிமையான இளைஞன். கள்ளங்கபடம் அற்றவன். ஏசு உன்னிடம் நேரடியாகத்தான் பேசுவார் உனக்கு பைபிள் தேவையில்லை என்ற வரி அவனுடைய அந்தக் கதாபாத்திரம் வழியாகவே நிறுவப்படுகிறது. ஈஸியாக எழுதப்பட்ட அரிய கதை அது
ஜெ. ஆல்வின் குமார்
அன்புள்ள ஜெ
ஏதேன் கதையை மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்தக்கதையில் வரும் மென்மையான நகைச்சுவையை சொல்லிச்சொல்லி ரசித்தேன். என் அப்பா என்னை பாஸ்டர் ஆகச் சொல்கிறார், நான் கௌரவமாக வாழ நினைப்பது தப்பா என்று அவன் கேட்கிறான். அந்த இடம் முதல் சிரிப்புதான். ஆனால் மென்மையான சிரிப்பு
அந்தக்கதையில் எனக்குப்பிடித்த கதாபாத்திரமே அந்த அம்மாதான் இப்படி ஒரு மகனைப் பெற்று அவனுடைய பாசத்திலிருந்தும் தப்பமுடியாமல் கணவனிக்குத்தெரியாமல் பணத்தைக்கொடுத்துக்கொண்டே இருக்கிறார்
நாகராஜன்
100. வரம் [சிறுகதை]
99. முதலாமன் [சிறுகதை]
98. அருகே கடல் [சிறுகதை]
97. புழுக்கச்சோறு [சிறுகதை]
96. நெடுந்தூரம் [சிறுகதை]
95. எரிமருள் [சிறுகதை]
94. மலைவிளிம்பில் [சிறுகதை]
93. அமுதம் [சிறுகதை]
92. தீவண்டி [சிறுகதை]
91. பீடம் [சிறுகதை]
90. சிந்தே [சிறுகதை]
89. சாவி [சிறுகதை]
88. கழுமாடன் [சிறுகதை]
87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
86. தூவக்காளி [சிறுகதை]
85. சிறகு [சிறுகதை]
84. வண்ணம் [சிறுகதை]
83. ஆபகந்தி [சிறுகதை]
82. ஆமை [சிறுகதை]
81. கணக்கு [சிறுகதை]
80. சுக்ரர் [சிறுகதை]
79. அருள் [சிறுகதை]
78. ஏழாவது [சிறுகதை]
77. மணிபல்லவம் [சிறுகதை]
76. மூத்தோள் [சிறுகதை]
75. அன்னம் [சிறுகதை]
74. மலையரசி [சிறுகதை]
73. குமிழி [சிறுகதை]
72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
71. செய்தி [சிறுகதை]
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1
69. ஆகாயம் [சிறுகதை]
68. ராஜன் [சிறுகதை]
67. தேனீ [சிறுகதை]
66. முதுநாவல்[சிறுகதை]
65. இணைவு [சிறுகதை]
64. கரு [குறுநாவல்]- பகுதி 1
64. கரு [குறுநாவல்]- பகுதி 2
63. ‘பிறசண்டு’ [சிறுகதை]
62. நிழல்காகம் [சிறுகதை]
61. லாசர் [சிறுகதை]
60. தேவி [சிறுகதை]
59. சிவம் [சிறுகதை]
58. முத்தங்கள் [சிறுகதை]
57. கூடு [சிறுகதை]
56. சீட்டு [சிறுகதை]
55. போழ்வு [சிறுகதை]
54. நஞ்சு [சிறுகதை]
53. பலிக்கல் [சிறுகதை]
52. காக்காய்ப்பொன் [சிறுகதை]
51. லீலை [சிறுகதை]
50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]
49. கரவு [சிறுகதை]
48. நற்றுணை [சிறுகதை]
47. இறைவன் [சிறுகதை]
46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]
45. முதல் ஆறு [சிறுகதை]
44. பிடி [சிறுகதை]
43.. கைமுக்கு [சிறுகதை]
42. உலகெலாம் [சிறுகதை]
41. மாயப்பொன் [சிறுகதை]
40. ஆழி [சிறுகதை]
39. வனவாசம் [சிறுகதை]
38. மதுரம் [சிறுகதை]
37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]
36. வான்நெசவு [சிறுகதை]
35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]
34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
33. வான்கீழ் [சிறுகதை]
32. எழுகதிர் [சிறுகதை]
31. நகைமுகன் [சிறுகதை]
30. ஏகம் [சிறுகதை]
29. ஆட்டக்கதை [சிறுகதை]
28. குருவி [சிறுகதை]
27. சூழ்திரு [சிறுகதை]
26. லூப் [சிறுகதை]
25. அனலுக்குமேல் [சிறுகதை]
24. பெயர்நூறான் [சிறுகதை]
23. இடம் [சிறுகதை]
22. சுற்றுகள் [சிறுகதை]
21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
20. வேரில் திகழ்வது [சிறுகதை]
19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
18. தங்கத்தின் மணம் [சிறுகதை]
17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]
16. ஏதேன் [சிறுகதை]
15. மொழி [சிறுகதை]
14. ஆடகம் [சிறுகதை]
13. கோட்டை [சிறுகதை]
12. விலங்கு [சிறுகதை]
11. துளி [சிறுகதை]
10. வேட்டு [சிறுகதை]
9. அங்கி [சிறுகதை]
8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]
7. பூனை [சிறுகதை]
6. வருக்கை [சிறுகதை]
5. “ஆனையில்லா!” [சிறுகதை]
4. யா தேவி! [சிறுகதை]
3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
2. சக்தி ரூபேண! [சிறுகதை]
1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை