தேனீ, வனவாசம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

தேனீ சிறுகதை தங்களின் “மகாராஜாவின் இசை” கட்டுரையை நினைவுப்படுத்தியது.கதையை படித்துவிட்டு மகாராஜபுரம் சந்தானம் பாடிய மகாகணபதிம் கேட்டு முடித்ததும் இக்கதையின் பேரழகை  முழுதுணர்ந்தேன்.நம் ஆழங்களை ஊடுருவ ஒரே ஒரு கலைஞனால் மட்டுமே முடியும் என்கிற தரிசனத்தை இக்கதை நிகழ்த்திவிடுகிறது.எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்யும் என் சித்தப்பா இளையராஜா இசையை தவிர வேறெதையும் இசையாக அங்கீகரித்ததில்லை. ராகங்களை வெகு இயல்பாக அடையாளம் கண்டுகொண்டு,”என்ன மனுசன்யா இவுரு..இவர மாதிரி இசையமைக்க

இனிமே யாரும் பொறந்து வரமுடியாது மகனே”,என ஒவ்வொரு பாடலுக்கும் சிலாகிப்பார்.ஆச்சரியமாக இருக்கும்.இப்போது ஓரளவுக்கு பிடிபடுகிறது.ஒருமுறையாவது ராஜாவின் பாடலை மேடையில் பாடிவிட வேண்டும் என்கிற முஸ்தீபுடன் எந்நேரமும் ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருப்பார்.

உற்றத்திலும் சுற்றத்திலும் ஓர் இதயத்தைக்கூடச் சந்தித்தறியாத ரசிகன் தன் கலைஞனைக் கண்டடைந்தவுடன் உயிர் பெருகிச் சாவான்

தேவதேவனின் வரிகள் எவ்வளவு அழகாய் பொருந்திப்போகின்றன.

நன்றி,

ஜான்பால் நவீன் ரொஸாரியோ.

அன்புள்ள ஜெ

நலம்தானே?

தேனீ கதையைப் பற்றி என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் அவருடைய தாத்தாவைப்பற்றிச் சொன்னார். 30 ஆண்டுகள் அவர் திருவெண்காடு சுப்ரமணியபிள்ளையின் ரசிகராக வாழ்ந்திருக்கிறார். அவர் சென்ற எல்லா ஊருக்கும் சென்றிருக்கிறார். எல்லா கச்சேரியையும் கேட்டு அதிலேயே மூழ்கி வாழ்ந்திருக்கிறார். இன்றைக்கு இளையராஜா ரசிகர்களெல்லாம் இருக்கிறார்கள். அதைப்போல அல்ல. இது ஒரு வாழ்நாள் அர்ப்பணம். தேனீ கதையில் வருபவரைப்போல. தேனிலேயே வாழ்வது. உங்கள் கதையை புரிந்துகொள்ளமுடிந்தது

ஜெ.ஆர்.சந்தானகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

இன்றுதான் உங்கள் வனவாசம் கதையை வாசித்தேன். அபாரமான துயர் நிறைந்த கதை. வாழ்க்கையே ஒருநாடகம். அதற்குள் ஒருநாடகம் என்ற எண்ணம் ஏற்பட்டது. வாழ்க்கை வனவாசமாகவும் நாடகம் அரசவாழ்க்கையாகவும் அமைகிறது. அந்த கதையின் களமும் அங்கே நிகழும் நிகழ்ச்சிகள் படிப்படியாக விரிவதும் ஒரு கனவனுபவம்போல இருந்தது. வாசித்து முடித்து பெருமூச்சுடன் நிறையநேரம் நினைத்துக்கொண்டே இருந்தேன். வனவாசம் போகாதீங்க, என் மனவாசம் போதுமுங்க என்ற மன்றாட்டின் ஒலியை கேட்டேன். ஆச்சரியமான மடிப்புகள் கொண்ட கதை. ராஜபார்ட் போடும் அர்ச்சுனரிடம் அல்லியாக வருபவர் உண்மையிலேயே மனம் உருகித்தான் அந்த கோரிக்கையை முன்வைக்கிறார் இல்லையா?

ஆர்.ராகவ் மகேந்திரன்

அன்புள்ள ஜெமோ

வனவாசம் எனக்கு ஒரு சிறந்த நஸ்டால்ஜிக் அனுபவம். நான் உங்களுடைய அறம் கதைகளையே வாசித்திருந்தேன். இன்றைக்கு ஒரு நண்பர் இந்தக்கதையை சுட்டி அனுப்பியிருந்தார். என் ஊர் பணகுடிப்பக்கம். ஊருக்குச் சென்று குளிர்ந்த பழையது சாப்பிட்டு மலைக்காற்றில் கண்மயங்கியதுபோல அனுபவம். சாப்பாட்டுவர்ணனைகள், கொடைவர்ணனைகள் எல்லாமே அந்த ஊருக்கே சென்று வந்ததுபோல. ஊரில் திருவிழா என்பது ஊரே சொர்க்கமாக மாறிவிடுவதுபோல. எல்லாருமே மகிழ்ச்சியாக இருக்கும் இடம் அழகாக ஆகிவிடும் என்று நினைக்கிறேன். நன்றி

எஸ்.சங்கர்

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைகிராதம் என்னும் பயணம்- ராமராஜன் மாணிக்கவேல்
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் நினைவுகள்-கடிதம்