மழை இருகவிதைகள்:போகன் சங்கர்

மழை எல்லாவற்றையும்
மென்மையாக்கியிருந்தது.
நிலம் குழைந்து
காலடிகளை
ஓவியங்கள் போல
தன்னுள் பதித்துக்கொண்டது.
கூடலின் நிலம்
தன்னியல்பு மறந்து
நீர் போல ஓட முயன்றது.
கூடலின் பின்
நாணம் இல்லைதானே?

*

நான் என்பது என் நிலம்.
என் வயல்கள்.
என் அருவிகள்.
சாளரம் வழி நான் பார்க்கும் மழைத் துளிகள்.
நீ என்னைக் காதலிக்கும்போது
என் வயல்களில் அளைகிறாய்.
என் அருவிகளில் நனைகிறாய்.
என் மழைத் துளிகளை அருந்துகிறாய்.

முந்தைய கட்டுரைஒளிகொண்டு மீள்வோர்
அடுத்த கட்டுரைஞானி-1