பொழுதுபோக்கின் எல்லைகள் பற்றி…

பொழுதுபோக்கின் எல்லைகள்

அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?

‘பொழுதுபோக்கின் எல்லைகள்’ என்னும் கட்டுரை இந்தக் காலத்தில் அவசியமான ஒன்று. சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, வாட்ஸப் முதலியவற்றால் மனிதனுக்கு ஏற்படும் கவனச் சிதைவு, அதனால் ஏற்பட்டுள்ள கவனமின்மையால் நிகழ்ந்துள்ள மனித ஆற்றல் விரயம் முதலியன குறித்துத் தமிழில் அதிக அளவில் கட்டுரைகள், நூல்கள் வரவில்லை. அதனை உங்கள் கட்டுரை நிரவ்ர்த்தி செய்ய முயல்கிறது.

கவனச் சிதைவு இல்லாமல், மனதை ஒருமுகப்படுத்திப் பல புதிய தொழில் நுட்பங்களையும், ஆற்றல்களையும் கற்றாக வேண்டிய / கற்றே ஆக வேண்டிய காலகட்டத்தில் கவனச் சிதைவை ஏற்படுத்தப் பல வழிகள் வந்துள்ளன. உடனடியாகக் கிடைக்கும் டோபமின் வேண்டி கோடிக்கணக்கான மனித மூளைகள் தங்கள் கைகளையே நோக்கிய வண்ணம் உள்ளன. இதனால் ஏற்படும் காலச் செலவு, ஆற்றல் இழப்பு, மனித மன அமைதியின்மை  முதலியனவற்ற்றிற்கு விலை நிர்ணயிக்க முடியாது.

ஆட்டோமேஷன் முறைகள் பெரு வருவதால், எந்தச் செயலுக்குமே பயனில்லாத ஒரு சமூகக் கூட்டத்தை உருவாக்குகிறோம் என்கிறார் ‘சேப்பியன்ஸ்’ நூலை எழுதிய யுவல் நோவா ஹராரி.

இந்தத் தலைப்பு தொடர்பன சில ஆங்கில நூல்களை உங்கள் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த விழைகிறேன். தமிழிலும் இம்மாதிரியான நூல்கள் வெளிவர வேண்டும்.

சமூக ஊடகங்களால் ஏற்படும் கவனச்சிதைவைக் குறைப்பது, மனித மூளை ஆற்றலை முற்றுமாகப் பயன்படுத்திச் சிறந்த செய்ல்களை ஆற்றுவது எப்படி என்பது பற்றி எம்.ஐ.டி.யின் கணிப்பொறிப் பேராசிரியர் கார்ல் நியூபோர்ட் தனது Deep Work’ என்னும் நூலில் அறிவியல் பூர்வமாக விளக்குகிறார். அந்த நூலைப் பற்றிய என் அறிமுகம் இதோ:

https://amaruvi.in/2017/11/28/deep-work-my-review/

ஸர்வ வியாபி என்பது இறைவனுக்குச் சொல்லப்படுவது. ஆனால், எப்போதும் நம்முடனேயே இருப்பதால் கைப்பேசிகளுமே சர்வ வியாபிகளாக மாறிவிட்டன. இதனால் மனிதத் தனிமை என்பதே இல்லாமல் ஆகிவிட்டது. இதனைக் களைவது எப்படி, இதிலிருந்து விடுபட்டு வெளியேறுவது எங்ஙனம் என்பது பற்றி ‘The End of Absence: Reclaiming What We’ve Lost in a World of Constant Connection’ என்னும் நூலில் விளக்குகிறார் இதன் ஆசிரியரும், சமூக ஊடங்களை விட்டு விலகுங்கள் என்று போராடிக்கொண்டிருப்பவருமான மைக்கேல் ஹாரிஸ். இந்த நூல் பற்ற்றிய என்னுடைய பார்வையை இங்கே அளிக்கிறேன்.

https://amaruvi.in/2014/09/29/the-end-of-absence-a-review/

தனது முன்னாள் காதலனைத் தனது சமூக வலைத்தள நட்பிலிருந்து நீக்குவது பற்றிய நூலில் கிம் ச்டோல்ஜ், சமூக ஊடங்கங்களில் மூழ்கியுள்ள சமூகத்திற்கு சில வழிகளை அளிக்கிறார். நூல் : Unfriending my ex’. இந்த நூலைப் பற்றிய என் பார்வை இங்கே:

https://amaruvi.in/2014/09/11/un-friending-my-ex-book-review/

இவை தவிரவும், கணினிமயமானதால் பெரு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைச் சம்பளமில்லா ஊழியர்களாக வைத்துள்ளதை விளக்கும் ’Shadow Work’ என்னும் நூலைப் பற்றிய பார்வையையும் இங்கே அளிக்கிறேன்:

https://medium.com/@amaruvi/shadow-work-book-review-c2b36e707426

மேற்சொன்ன நூல்கள் தமிழில் வர வேண்டும். நம் சமூகத்திற்கு அவசியமான நூல்கள் இவை.

நன்றி.

ஆமருவி தேவநாதன்.

முந்தைய கட்டுரைதன்மீட்சியின் நெறிகள்
அடுத்த கட்டுரைஅலகில் அலகு – நதியின் நீர்க்கரங்கள்.