ஜெ,
மனம் முழுக்க கோதாவரி படுகை. கடந்த ஆண்டு நண்பர்களுடன் ராஜமுந்திரியில் சுற்றினேன்.
நீங்கள் உள்ள இடம் Elamanchili என நினைக்கிறேன். பீமாவரம்-ல் இருந்து ஒரு மணி பயணம் விவரம், வர்ணனை மற்றும் புகைப்படங்களைப் பார்க்கையில் என் கணிப்பில் நான் உங்களை மேலிருந்து பார்த்து கொண்டிருக்கிறேன். :)
கீழே உள்ள சுட்டியில் நீங்களும் படுகையை மேற்பார்வையிடலாம்.
http://maps.google.com/maps?f=d&source=s_d&saddr=&daddr=&hl=en&geocode=&mra=mr&doflg=ptk&sll=16.546367,81.527181&sspn=0.009997,0.013797&ie=UTF8&hq=&hnear=&ll=16.472057,81.794844&spn=0.020001,0.043945&t=h&z=15
-சதீஷ்.
இந்த கடிதம் படித்தவுடன். எனக்கு சட்டென்று ஸ்டெல்லா புரூஸ் எழுதிய பூதம் என்கிற கதை நினைவுக்கு வருகிறது. எனக்கு அதை படித்தபின்பு அவனிடம் சென்று நீ அந்தப் பெண்ணை நிச்சயமாக மணந்து கொள்ளலாம் என்று சொல்லவேண்டும் போல் இருந்தது.
“உள்ளுணர்வு என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அது விலங்குமனம். உங்களுக்கு ஒவ்வாத ஒன்றை எங்கோ கண்டுகொண்டிருக்கிறீர்கள்.உள்ளுணர்வைத் தர்க்கம் மூலம் சமாதானப்படுத்தி அடங்கச்செய்து எதையும் செய்யவேண்டாம்”
என்னும் வரிகள் சரியானவை. இத்தகைய சமயங்களில் வழி காட்டுதலைவிட வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும். நீங்கள் அதையே செய்திருப்பதாக கருதியதால் இக் கடிதம்.
அன்புடன்
ரமேஷ் கல்யாண்
ஓசூர்
அன்பு ஜெ
வேலையில் மும்முரமாக இருப்பீர்கள் எனினும் நண்பர்களைத் தொந்தரவு செய்யும் சந்தர்ப்பம் ஒன்றைக் கூடத் தவறவிடக் கூடாது எ ன்ற நல்லெண்ணத்தால் இக்கடிதம்.தங்களது ‘இறுதி இயந்திரம் ‘ சிறுகதையை நான் பல முறை பின் தொடரும் நிழலின் குரலில் படித்து மகிழ்ந்திருக்கிறேன்.வரலாறு என்பது விருப்பு வெறுப்பின் வழியிலேயே புனையப்படுகிறது.அதிகாரத்தில் இருப்பவர் உருவாக்கும் புனைவாகவே அது பெரும்பாலும் இருக்கிறது.எந்தெந்த பாத்திரங்க்கள் அதில் இடம் பெற வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவரும் அவர்களே.இது போன்ற பின்நவீனத்துவக் கருத்துக்களின் சிறந்த வெளிப்பாடாக இருக்கும் மிகைபுனைவுக் கூறுகளுடன் கூடிய சிறந்த படைப்பு.
அன்புடன்
ராமானுஜம்
உண்மையாகவே பொறாமையை கிளப்புகிறீர்கள்… அலுவலகத்தின் நான்கு சதுரத்தில் அமர்ந்து பொழுதைக்கழிக்கும் எங்களுக்கு பொறாமை இருக்காதா பின்னே… ஒரே ஆறுதல் உங்கள் பயணங்கள் பற்றிய எழுத்துகளின் வழியே நாங்களும் ஓரளவுக்கு அந்த பயண அனுபவத்தை அடைகிறோம் என்பதால் உங்களைக் கொஞ்சம் மன்னித்து விடலாம்.
அன்புடன் சந்தோஷ்
http://ensanthosh.wordpress.com/
அன்புள்ள ஜெ,
உடற்பயிற்சி ஆசிரியர் கவிதையை மீண்டும் வாசித்தபோது, தேவதேவனிடம் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு கவிதையை சிதைத்திருப்பதாகத் தோன்றியது. ஏனெனில் பூமியில் உள்ள வாழும் மனிதர்களை மட்டும் உடற்பயிற்சி ஆசிரியர் வட்ட வளையமாக்கவில்லை என்று நினைத்தேன்.
உங்களை பொறாமைபடச்செய்யும் சிறு சந்தர்பத்தை நானும் விடுவதாக இல்லை. மீண்டும் இஸ்ரேல் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். ஏப்ரல் மாதம் செல்வதாகத் திட்டம்.
I am going to set foot again on the Promised Land and meet the queerest young fellow (His mother’s a jew and His father’s a bird) that ever you heard.
’தாடி வச்சுக்கிட்டு, பரங்கி மாம்பளம் கணக்கா ஒரு மேதிரிப் பாத்துக்கிட்டு இருக்குதானே ’ அவனை பார்க்க அவன் ஊருக்கே போகிறேன். நெஞ்சில ஒரு கலயம் தீபோல எரிஞ்சுக்கிட்டு இருக்குது.
அது என்னைச் சுடுமா என்று தெரியவில்லை.
அன்புடன்
இளையராஜா பரமசிவம்..