வெண்முரசு விவாதங்கள் தளம்
வரலாற்று நிகழ்வு அல்லது வரலாற்று ஆளுமையை கொண்டு புனையப்படும் கதைகள் பொதுவாக சாமானியனின் பார்வையில் சொல்லப்படும்போது, அது கதைக்கு கூடுதல் நெகிழ்வை அளிக்கிறது. அது அவனுடைய கதையாக, அவனுடைய கோணத்திலும் வரலாற்றை விசாரணைக்கு உட்படுத்துகிறது. கம்யுனிச சுத்திகரிப்பாகட்டும், ஃபாசிசத்தின் கோரமுகமாட்டும், இறுகிய கொள்கை பாறைகள் மூச்சுமுட்ட நம்மை சூழும் தோறும் அதை பிளந்து வருவதும், அம்முயற்சியில் வீழ்வதுமே கதைகளாக நம்மை வந்தடைகின்றன