கதைகள்- கடிதம்

சிறுகுடத்து நீரை வற்றாத நதியாக்கும் கேள்விக்கு வணக்கம்”

அன்பு நிறை ஜெ,

என்றும் இளமையுடனும் , உற்சாகத்துடனும் இருப்பதற்கு பிராத்தனைகள்.. குரு பூர்ணிமா நிகழ்வு வெகு சிறப்பாக அமைந்தது. காலை அமர்வை விட மாலை அமர்வு அற்புதமாக இருந்தது, முழுவீச்சில் ஆழ்ந்த சிந்தனைகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

சிலநாட்களாக ஒரு நெருடல் மிகுந்த  உணர்வு கொண்டுருந்தேன், கலை, இலக்கியம் எதற்கு ?, கலையால்  ஒருவரை என்ன செய்து விட முடியும் அல்லது என்ன செய்ய வைக்க முடியும் போன்ற வழக்காமான உணர்வுகள் தான்.

வாழ்விலோ,அகத்தேடலிலோ முன்னகரும் விசை மட்டுப்படும்  போது அதை புதுப்பித்து கொள்ளவும், சீராக்கி கொள்ளவும் உங்கள் எழுத்தும், பேச்சும் தான் உதவுகின்றன.

இந்த 100 கதைகள் எத்தனை எத்தனை சுவரசியங்காளையும், தேசங்களின் சித்திரங்களையும் கொண்டு உள்ளது என்பதை எண்ணி பார்க்கையில் பெரு வியப்பு மட்டுமே எஞ்சுகிறது.. கதைகளை அன்றாடம் தொடர்ந்து படிக்கவில்லை என்றாலும் சேர்த்து சேர்த்து சிறுகதை மாரத்தான் போல படித்து வருகிறேன்.. கதைகளை படிக்கும் போது நான் எண்ணி பார்க்கதவை எல்லாம் கைகளில் துரிகையோ, பேனாவோ எடுக்கும் பொது அதுவே சித்திரமாகி வழிகிறது. ஒரு சிறந்த படைப்பென்பது என்னவெல்லாம் செய்யும் என்பதை கண்கூடாக பார்க்கிறேன்..

அந்த வண்ணங்கள் கரைந்து முகத்தில் பரவியிருந்தன ; வனவாசம் போகாதீங்க, என் மனவாசம் போதுமுங்க..

இறைவன், வனவாசம், காக்காய் பொன்  போன்ற கதைகள் உண்டாக்கிய உணர்வுகளை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளவேண்டும், அக் கதைகளை பற்றி மீண்டும் மீண்டும் யாரிடமாவது பேசவேண்டும் போல் உணர்ந்தேன். வீட்டையும் என்னையும் சுற்றி ஆயிரம் அன்றாட அலுவல்கள் இருந்தாலும், உங்கள் கதைகள் உண்டாகும் உணர்வுகளிலிருந்து மீளவே முடியவில்லை.. அதை உங்களுக்கு கடிதமாக எழுதலாம் என்று நினைத்து எழுதாமல் விட்டுவிட்டேன், எழுதியிருந்தால் வெறும் உணர்வுரீதியான வார்த்தைகள் மட்டுமே வந்திருக்கும், அதிகமாக ரொமாண்டிசைஸ் செய்வது போல ஆகிவிடும்.. ஒரு மாதிரியான நேர்மறை அழுத்தம் கொண்டேன்.

நான் இதுவரை முறையாக ஓவிய பயிற்சி பெற்றது இல்லை, அனால் கொஞ்சம் ஓவியத்தின் மேல் ஆர்வம் உண்டு, தொடர்ந்து ஓவிய உலகில் நடந்து வரும் மாற்றங்களை அவதானித்து வருகிறேன். மனதில் வரும் எண்ணங்களை இங்கொன்றும் அங்கொன்றும் நாட்குறிப்பில் கிறுக்கிப் பார்ப்பதுண்டு . ஓவியம் கற்றுக்கொள்ள ஆசை , ஏதோ எண்ணங்களலால் அதை தள்ளி போட்டு கொண்டே வந்தேன். உங்கள் படைப்புகள் கொடுத்த நேர்மறை அழுத்தத்தால் வருவதை முயற்சி செய்து பாத்து விடலாம் என தற்செயலாக சதானந்த தீர்த்தர் முகத்தை வரைவதற்கு யோசித்து கொண்டுருந்தேன், நாராயண குருவின் உருவத்தை கூகிள் செய்து பார்த்தேன் ஒரு பிடிகிட்டியது முதலில் நாட்குறிப்பில் வரைந்தேன், திருப்தி வரவில்லை, எதோ ஒன்று குறைவது போல் உணர்ந்து காக்காய் ஒன்றை அவர் மேல் அமர செய்தேன் ஒரு சித்திரம் உருவாகியது.. தூங்கலாமென எழுந்தபோது என்னை கைகள் தடுத்தது, ஐ-பேடை எடுத்து முதல் முயற்சி செய்தேன் அதுவரை அதற்கான மென்பொருள் கூட நான் தரவிறக்கம் செய்து வைத்திருக்க வில்லை..

அன்றே நீ பிறந்தவனன்றோ ? ஆமாம், ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ?

மென்பொருள் திறந்து உள்ளே சென்றதும் நான் நாட்குறிப்பில் வரைந்து வைத்து இருந்த சதானந்தரை  வரைய தொடங்கியதும் எல்லா மாயமும் நிகழ்ந்தது.. அவர் முழுமைபெற்று சென்றதும், சாமியப்பாவின் அர்ஜுனன் எழுந்து வந்தார் அவரை சமாதானம் செய்ததும், மாணிக்கம் ஆசாரி, இசைக்கியம்மை, நீலாம்பாள் மூவரும் வந்தனர் இதுக்கு மேலே போனால் தாங்காது என்று படுத்து கொண்டேன்;நீண்ட நாட்களுக்கு பின் நல்ல உறக்கம்.. காலை யெழுந்ததும் நிலம்பாளை வரைத்து முடித்தேன், ஏதொ ஒரு திருப்தி…

இன்று அம்மாவின் கலம்காரி புடவை வெளியே காய்ந்து கொண்டுருந்தது, குரு பூர்ணிமா அன்று நான் ஏன் உங்களுக்கு  எந்த அன்பளிப்பும்  கொடுக்கவில்லை  என்று எண்ணிக் கொண்டேன்; உங்களுக்கு கோட்ஸன் கொடுத்த புத்தர் ஓவியம் அருமையாக இருந்தது.. கடந்த பத்து தினங்களுக்கு முன் “சிலுவையின் பெயரால் ” புத்தகம் படிக்க தொடங்கியிருந்தேன், நிகோஸ் காஸென்டகீஸ் கண்ட கிறிஸ்துவை பற்றி, ஒரு ஞான குருவை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் , அவர் அன்று என்னுள் சென்றுவிட்டார். இன்று அம்மாவின் கலம்காரி புடவையிலிருந்து என் கண்முன் வந்தார் அவரையும் உங்கள் சொல் தந்த ஆசியால் வரைந்துவிட்டேன்… எங்கள் ஞான குருவான உங்களுக்கு அதை அர்ப்பணிக்கிறேன்..

நான் குடுக்கேண்டீ உனக்க மகளை… என் செல்லமே… எனக்க செல்ல மகளே! எனக்க முத்தே…

கலை என்பது என்னையே எனக்கு யார் என்று காட்டியது, என்னை புரட்டி போட்டது. ஒருவேளை உங்களின் கதை கொண்டாட்டங்களில் பங்குகொள்ளாமல் போய் இருந்தால் என்னை தொலைத்து விட்டுருப்பேன்.. தொன்ம கதைகளில் பேச்சு வராத ஒருத்தருக்கு சரஸ்வதி அவர் நாவில் எழுதியதால் பேச்சு வந்து பல பாடல்கள் இசைத்தார் என்றெல்லாம் கேட்டதுண்டு.. என் அளவில் உங்கள் மூலம் அதை உணர்ந்துள்ளேன்..

நீங்கள் குறைவில்லாமல் அருளும் அன்புக்கும் அறத்திற்கும் நன்றி ஜெ..

பணிவன்புடன்,

இளம்பரிதி

( போதி என்ற பெயரில் ஓவியத்தில் கையப்பம் இட்டுள்ளேன்)

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை

 

முந்தைய கட்டுரைநட்பின் அழகியல்-ஸ்ரீனிவாசன்
அடுத்த கட்டுரைதன்னந்தனிப்பாதை -கடிதங்கள்