எண்ண எண்ணக் குறைவது, நெடுந்தூரம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

எண்ணஎண்ணக்குறைவது இந்த வரிசையில் முதல் கதை. ஆனால் அதை எழுதும்போது நூறு கதைகளுக்கு முதல்கதையாக அது அமையும் என்று தெரியாது. அப்படி அமைந்த பிற்பாடு அந்தக்கதையை வாசிக்கையில் விசித்திரமான எண்ணங்கள் ஏற்படுகின்றன.

அது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ஒருவன் தன் வாழ்க்கையை தானே அமைத்துக்கொள்கிறான், சமூகத்தையோ விதியையோ நம்பி இருப்பதில்லை. அப்படியென்றால் அவன் ஏன் சாவை மட்டும் தானே அமைத்துக்கொள்ளக்கூடாது? அதற்கு மட்டும் ஏன் விதியை நம்பி இருக்கவேண்டும்? அவனுக்கு அந்த உரிமை இல்லையா?

அவநம்பிக்கையிலோ விரக்தியிலோ எவரையாவது பழிவாங்குவதற்காகவோ உயிர்விடுவது வேறு. ஆனால் ஒருவன் தான் இங்கே வந்த வேலைமுடிந்தது என்று கண்டு உயிரை இழப்பதில் மிகப்பெரிய தைரியமும் தெளிவும்தானே இருக்கிறது.

கதை இந்தக் கேள்வியை மட்டும்தான் எழுப்புகிறது. அந்தக்கதையில் வருபவர்கள் எல்லாருமே அறிஞர்கள், இலக்கியவாதிகள். அவர்கள் அனைவருமே அதை ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது. ஆனால் அது ஒரு தொந்தரவளிக்கும் கேள்வி. நாம் வாழ்க்கையைப்பற்றி இன்று கொண்டிருக்கும் எந்த சிந்தனைக்கும் நேர் மறுபக்கமாக அமையும் கேள்வி அது

தங்க. சிவக்குமார்

***

அன்புள்ள ஜெ,

எண்ண எண்ணக்குறைவது கதையை நான் வாசித்துவிட்டு நண்பர்களுடன் பேசும்போது அது ஒரு பிற்போக்கான கதை என்று பலர் கருத்துச் சொன்னார்கள். ஆனால் என் தாத்தா அவருடைய 76 ஆவது வயதில் எங்களை அழைத்து எல்லா மாத்திரைகளையும் நிறுத்திவிடப்போவதாகவும் உணவையும் நிறுத்துவதாகவும் சொன்னார். “இந்த கட்டை இனிமேல் தாங்காது”என்றார். சொல்லவேண்டிய எல்லாவற்றையும் சொல்லிவிட்டு ஏழாவதுநாள் போய்விட்டார். இந்த நாட்டில் இந்த வழக்கம் எல்லா இடங்களிலும் பெரியவர்களின் இயல்பாகவே இருந்திருக்கிறது. இதற்குக் காரணம் இந்த உலகவாழ்க்கையை ஒரு கர்மாவாக பார்ப்பதும், இந்த நாடகத்தை முடித்துவிட்டு கிளம்பிச்சென்றுவிடவேண்டும் என்று நினைப்பதும்தான்

ஆனந்தகுமார்

 அன்புள்ள ஜெ..

நெடுந்தூரம் சிறுகதை  ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் , ஒரு குறிப்பிட்ட சூழலில் நிகழும் கதை. ஆனால் அது எல்லா கால கட்டத்துக்கும் எல்லா இடங்களுக்கும் பொருந்திப்போகிறது

அனாயசமாக பிணங்களைக் குதறித்தின்னும் ஆற்றல் மிக்க, அச்சமூட்டும் கழுகுகள், வசதியான சூழலில் வாழ்ந்து பழகி, கோழிக்குஞ்சினும் பலவீனமான நிலையில் இருக்கின்றன

இதைப்படிக்கும்போது, நம்மூர் வாரிசு அரசியல்வாதிகளின்  நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை

ஹிட்லர், ரஷ்ய ஸ்டாலின், தமிழக எம் ஜி ஆர், என பலர் மண்ணின் மைந்தர்களை மிஞ்சி அந்தந்த ஊர்களில் ஜெயக்கொடி நாட்டியதை பார்க்கிறோம். அவர்கள் எல்லாம் வானில் சிறக்கடித்துப்பறக்கும் கழுகுகள். புயலையும் மழைகளையும் எதிர் கொண்டு அதற்கேற்ப தகவமைப்பை பெற்றவர்கள்

இதற்கு மாறாக, தமது அப்பாக்களால் பொத்தி பொத்தி  பாதுகாக்கப்பட்டு அரசியலுக்கு வருபவர்கள், அரசியல் அரங்கில் திக்கி திணறுவதை பார்க்கிறோம்.

அந்த கதையில் வரும் கைதிகள், போலிசாரை அலட்சியமாக  எதிர்கொள்ளும் விதமும், டில்லி அனாவசியமாக அடி வாங்குவதும் முக்கியமான இடமாகும்

அந்த கைதிகள், இயல்பான கழுகுகள், தானோ ஒரு சின்ன வட்டத்தில் பழகி முடங்கிப்போன கழுகு என அவன் தன்னை உணர்ந்து இருந்தக்கூடும்

அந்த சுய தரிசனமே மிகப்பெரிய விடுதலைதான் என்பதைத்தான் கடைசி வரிகள் காட்டுகின்றன

வாட்ச்மேன் பாத்திரமும் முக்கியமானது.. மரியாதைக்குரிய, ஓர் இடத்தில் பாதுகாப்பாக இருந்து பழகி விட்டு, திடீரென ஒரு கால கட்டத்தில் வாழ்வை அதன் நிதர்சனத்தை சந்திக்கும் சூழல் அவருக்கும் அமைகிறது.. வாழ்வின் பிற்பாதியில்தான் அது அமைகிறது என்றாலும் அதற்கேற்ப தகவமைத்துக்கொண்டு, தன் மனிதத்தை மீட்டுக்கொள்கிறார், தன் கணக்கில் யாரோ ஒரு புது ஆளுக்கு டீ வாங்கித்தருகிறார்

அதேபோல, கருப்புசாமி பாத்திரம். போலிசில் அவ்வப்போது சிக்குவதை இயல்பாக ஏற்று பழகியவன். அவனுள்ளும் மனிதம் மலர் வீசுகிறது

இவர்களை ஒப்பு நோக்க ,டில்லி போக வேண்டியது இன்னும் வெகு தூரம். ஆனால், தான் யார் என்று அறிந்த பின்பு , அதுவே அவனுக்கு வழிகாட்டும்

நத்தையே

சிகரத்தில் ஏறு

ஆனால் மெதுவாக.. மிகவும் மெதுவாக 

என்ற இஸ்ஸாவின் ஹைக்கூ நினைவுக்கு வந்தது // உங்களது ஆமை சிறுகதையும் நினைவுக்கு வந்தது

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்புள்ள ஜெ

நெடுந்தூரம் கதையை இந்தவரிசைக் கதைகளிலேயே மாறுபட்ட ஒன்று என்று சொல்லமுடியும். சினிமாப்பின்னணியில், சென்னை பின்னணியில், தெலுங்குபேசும் கதாபாத்திரங்களைக்கொண்டு நீங்கள் இதை எழுதியிருக்கிறீர்கள். அசோகமித்திரன் பாணியிலான புறவயமான நடைகொண்ட யதார்த்தச் சிறுகதை.

ஆனால் கடைசியில் இது ஒரு சாமானியனின் வீழ்ச்சியை சொல்லும் கதையாக நின்றுவிடாமல் இன்னொரு இடத்திற்கு நகர்கிறது. அங்கே தங்கள் வளர்த்தவனிடமும் வளர்த்த சூழலிலும் கட்டுண்டு சாகின்றன இரு கழுகுகள். வானில் புள்ளிபோல உலவுகின்றன வேறு இரண்டு கழுகுகள். உயிரின் ஆதி இயல்பை இழந்தவை இவை. இங்கே கூவம்நதிக்கரையில் சாக்கடையில் வாழும் அந்த மனிதர்களும் உயிரின் இயல்பால் அத்தனை மேலே செல்லும் தகுதி கொண்டவர்கள்தான்.

மாக்ஸிம் கார்க்கியின் மனிதன் எத்தனை மகத்தான சொல் என்ற வரியைத்தான் நினைத்துக்கொண்டேன்

ஆர்.சபரிகிரீசன்

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைவெண்முரசில் குருமார்கள் – சௌந்தர்
அடுத்த கட்டுரைகுமரி- வான்வரைபடம்