புழுக்கச்சோறு, தங்கப்புத்தகம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் கதையை இன்று வாசித்தேன். ஒரு முழுநாளும் அந்த ஒரு கதையிலேயே ஊறிப்போய் அமர்ந்திருதேன். எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் எல்லா முக்கியமான நூல்களும் தங்கப்புத்தகங்கள்தான் புத்தகம் என்றாலே அப்படித்தான் இருக்கமுடியும். அது ஒருவருக்கு அளிப்பதை இன்னொருவருக்கு அளிப்பதில்லை. நாம் மகத்தான நூல்களை வாசித்த அனுபவங்களை எல்லாம் மிகமிக பிரைவேட் ஆன அனுபவங்களாகவே நினைவில் வைத்திருக்கிறோம். அந்த அனுபவங்களை நம்மால் முழுக்க பகிர்ந்துவிடக்கூட முடிவதில்லை. சொல்லப்போனால் அதை எழுதியவரிடம்கூட நம்மால் சொல்லிவிட முடிவதில்லை.

தங்கப்புத்தகத்தில் இருந்து சொந்தமான ஒரு பிரதியை உருவாக்கிக்கொள்ள முயல்கிறார்கள் ஒவ்வொருவரும். அது அனைவருக்கும் அப்பாலிருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் அது அத்தனைபேருக்கும் ஒரு பிரதியை அளிக்கும்படி அத்தனைபேருக்கும் அணுக்கமாக இருக்கிறது என்பதுதானே உண்மை?

தங்கவேல் ராமசாமி

***

அன்புள்ள ஜெ

ஒருவாறு இந்தக் கதையை உடலிலிருந்து ஆன்மாவைப் பிரித்தெடுத்து தான் என்பதைக் கரைக்க முற்படும் ஒரு செயலின் படிநிலையாகப் பார்த்தேன். அது தனக்கான சிறந்த கூட்டைத் தேடி அடைந்து அதற்காக முற்படுகிறது. இப்படி ‘தான்’ என்பதிலிருந்து பிரிதொன்றாக மாற தியானத்தைத் தவிர வேறொன்று உள்ளதானால் அது புத்தகம் தான். அது அந்த மாயப்புனைவிலுள்ள தங்கப்புத்தகமாக இருக்க வேண்டும் என்பதில்லை. தன்னைக் கரைத்து தன்னையே வேறொன்றாகப் பார்க்க உதவும் எந்தப் புத்தகமும் தங்கப் புத்தகம் தான்.

இருக்கிறேன் என்பதையே இனிமையாகப் காணுமளவு தன்னைக் கரைத்து புத்தகத்தில் மூழ்கிப் போகும் நிலை! உடலைக் கரைத்து பிரக்ஞையைக் கரைப்பது என்ற வார்த்தையின் திறப்பில் அமிழ்ந்தேன் ஜெ. அவன் விதைக்குள் பருப்பாக மாறிக் கொண்டே இருக்கும் அந்த உணர்வுகளை எனக்குள்ளும் மீட்டிப் பார்த்தேன். உருகி இழைந்தேன்.

உணர்வுகளற்ற ஆன்மத் திறப்பை அடைவதற்கான உணர்வைக் கடத்தியிருக்கிறீர்கள் ஜெ. இங்ஙனம் தன்னையே உருமாற்றி காண்பவை யாவையும் உயிர்ப்போடு பிரிதொன்றாக காணும் இனிய நிலையில் இருத்தலை உணர்வதென்பதே இனிமையாய்ப் படும்தான். இது போன்ற ஆன்மத் திறப்பிற்காக சமைக்கப்படும் சாமானியனின் கூடு இப்படி தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

பின்னும் வேறாக யோசித்துப் பார்த்தேன் ஜெ. மிகப் பெருந்துயரங்களைத் தருகையில் காலம் இரக்கமற்றதாக மாறிவிடுகிறது. அதை ஞாபகப் படுத்தும் ஒரு சொல் கூட முள்ளென மாறுகிறது. அத்தகைய துயரங்களை அடைந்தவன் தனிமையை நாடுகிறான். அதில் அனைவரும் வாழும் நிகழுலகை தவிர்த்து வேறோர் காலத்தில் மூழ்க அவனுக்கு உதவுகிறது. இழப்பினின்று தன்னை மீட்க வேறொன்றில் ஒருவன் மூழ்க வேண்டும். அதில் அவன் கடந்த கால ‘தான்’ -ஐக் கரைக்க வேண்டுமே. அந்த நிலையாக அவனை நினைந்து மனம் உருகினேன்.

இத்தகைய நிலையில் தான் மிக நல்ல மனிதரான இக்கா போன்றோரைப் பார்க்க கண்ணீர் பொங்கும். மிகப் பரந்த கடல் பயத்தை அளிக்கும். அங்கிருந்து ஊற்றெடுக்கும் கவிதையோ, கருக்கொண்டு வளரும் கதையோ எதுவோ உயிர்ப்புடனிருக்குமள்ளவா! அப்படித்தானிருந்தது ஜெ.

அன்புடன்

இரம்யா

***

அன்பு ஜெ,

இது ஓர் பயண அனுபவமாக எனக்கு அமைந்தது ஜெ. வெறும் உடலாலான பயணம் மட்டுமில்லை அதையும் தாண்டியது. ஒன்றையும் கண்டேன். மனிதனால் கட்டப்பட்ட வீடுள்ள இடத்தினின்று, வளைந்து நெளிந்து செல்லும் பாதை வழியாக, பாதை மாறி, காடேயான யானையை எதிர்கொண்டோடி தப்பவேமுடியாதளவு வழி தவறி, காட்டின் கருவை அடைந்து, காட்டின் மனிதர்களால் மீட்கப்படும் ஓர் அற்புதப் பயணம். பயணத்தின் புனைவை ஒன்றுவிடாமல் கட்டமைக்க ஏதுவான சித்தரிப்புகள்… இனிமையான பயணம்.

இன்னொரு பயணம் அது அகத்தினுள், ஆன்மாவில் ஊடுருவிப் பாய்ந்து சென்றது. திருவிழாக்கள் அனைத்துமே மனித மனத்திற்காக உருவாக்கப்பட்டவையாகப் பார்க்கிறேன். கடந்த காலம் அனைத்தையும் கரைத்து தன்னை முழுவதுமாக மீட்டு எதிர்காலத்தில் செலுத்த மன வைத்தியம் தெரிந்தவர்களால் உருவாக்கப்பட்டவையாகப் பார்க்கிறேன். மனம் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு, நினைக்க ஒன்றுகூட எஞ்சியிருக்கவில்லை என்பதான நிலையை அடைய உருவாக்கப்பட்டவையாகப் பார்க்கிறேன். மனம் தன்னையே அனைத்திலிருந்தும் விடுவித்துக் கொள்ளும் ஓர் இளைப்பாற்றி இந்த புழுக்கச் சோறு.

அன்புடன்

இரம்யா.

***

அன்புள்ள ஜெமோ

புழுக்கச்சோறு ஒரு சிறந்த கதை. என் அனுபவத்தில் நோயுற்று கொஞ்சநாள் சாப்பிடாமலிருந்து சாப்பிடும் முதல் உணவு பயங்கரமான சுவையானதாக ஆகிவிடுகிறது. அதைப்போல எந்த சுவையும் இருப்பது கிடையாது. அதன்பிறகு அதைத்தான் நமக்குப்பிடித்த சுவையாகச் சொல்லிக்கொண்டிருப்போம். எனக்கு அப்படி நீண்டநாள் டைஃபாயிடு நோய்க்குப்பிறகு சின்னவயசிலே நான் சாப்பிட்ட கோதுமை உப்புமா மனசிலேயே நின்றுவிட்டது. நினைத்தாலே எச்சில் ஊறும். பயணங்களிலே நாம் சாப்பிடும் உணவு அற்புதமான சுவையுடன் இருப்பதும் அப்படித்தான். நமக்கு உணவு அர்த்தமாக்வேண்டுமென்றால் பசிக்கவேண்டும். சாகிற பசி என்றால் உணவு அமுதமாகவே ஆகிவிடுகிறது. அன்னம் கதையுடன் சேர்த்து வாசிக்கவேண்டிய கதை புழுக்கச்சோறு

சிவபாலன்

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைவெண்முரசில் தந்தையர்- ரகு
அடுத்த கட்டுரைநுரைச்சிரிப்பு – கடிதங்கள்