அன்புள்ள ஜெ
முப்பதாண்டுகளுக்கு முன்பு நான் தொழில் தொடங்கியபோது பெரிய நஷ்டம். மனம் உடைந்து இருந்தேன். என் உறவிலிருந்த பெரியவர் ஒருவர் ஒரு சோதிடரிடம் அழைத்துச் சென்றார். கேரளத்தில் கோட்டையம் பக்கம்.
அவர் சொன்னார் புதையல் எடுப்பதாக இருந்தால் மூத்தவள்தான் முதலில் வருவாள். பாற்கடல் கடைந்தபோதும் அவள்தான் முதலில் வந்தாள். அவள் வருவது ஒரு அனுக்ரகம். அவள் நம்மை துயரத்திலே மூழ்கடிப்பாள். ஆனால் நடைமுறை ஞானத்தையும் தருவாள். ஆகவே நீ மூத்தவளின் ஆசியைப் பெற்றுவிட்டாய். இதில் கிடைத்த பாடத்தை கொண்டு மேலே செல். இளையவள் தேடிவருவாள்.
நான் அடுத்த இருபதாண்டுகளில் பெரிய அளவிலே வெற்றிபெற்றேன். நஷ்டம் ஏன் வந்தது என்று கண்டுபிடித்தேன். என் கான்ஸெப்ட் புரியாதவர்களை நம்பி அகலக்கால் வைத்துவிட்டேன். அகாவே மிக கவனமாக என்னை ஏற்றுக்கொள்ளும் கூட்டத்தை உருவாக்கி கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தேன்.
பிறகு ஒருமுறை ஒரு சீனியர் சொன்னார், பெரும்பாலும் தொழிலில் வெற்றி அடைந்தவர்கள் முதலில் தோல்வியை அடைந்திருப்பார்கள் என்று. அந்த தோல்விதான் அவர்களை ஜாக்ரதையும் உறுதியும் உடையவர்களாக ஆக்குகிறது
ஆபகந்தி கதையை அப்படித்தான் புரிந்துகொண்டேன்
டி.எஸ்.குமாரசாமி
***
அன்பு ஜெ,
புதையல்கள் என்பது எப்பொழுதுமே புனைவைப்போல பரவசமளிப்பவை. முதன் முதலில் புதையலைப் பற்றி அறிந்து கொண்ட சிறுபிராயத்தில் யாருமறியாது தோண்டித் தோண்டி குழிபறித்திருக்கிறேன். கண்ணாடி மாதிரியான கற்கள், தங்க நிற மிட்டாய் தகடுகள், உருண்டையான கூழங்கற்கள், அழகான கீர்ட்டிங்ஸ்கள், திருமணப் பத்திரிக்கைகள், கலர் தாள்கள், உதிர்ந்த முத்துக்கள் என யாவுமே சிறு பிராயத்தில் எனக்கு புதையல் தான். என் பாட்டி எப்பொழுதுமே என்னை ”பூனைப் பீயை பொட்டளம் கட்டுறாளே” என்று வைது வைப்பாள். புதையல் எடுத்த செய்திகள் வந்தாலோ, அகழ்வாராய்வு செய்யும் இடங்கள் பற்றி செய்திகள் வந்தாலோ நான் பரவச உணர்வதை அடைவைப் பார்த்திருக்கிறேன். அதே போல தான் இந்த ஆபகந்தி முழுவதுமாக புதையல் எப்பொழுது கிடைக்கும் என்று காத்துக் கிடந்தேன். கிடைத்ததற்காய் மகிழ்ந்தேன்.
புதயல்களில் ஆபகந்தி இருப்பாளே என்று எப்பொழுதும் எனக்கு பயம் கிடையாதே. “வாடி பரவாயில்லை நானா நீயானு பாத்திடறேன்” என்பவர்களுக்கே புதையல் இங்கு உண்டு. ரோட்டில் போனால் விபத்துகள் நடக்குமே என்று வெளியில் செல்லாதவர்களுக்கு உலகமில்லை. ஆபகந்தியை எதிர்கொள்ளத் தயாராயில்லாத முயற்சியற்றவர்களுக்கு புதையல் என்பது வாழ்வில் இல்லை என்று கற்றுக் கொண்டேன் ஜெ. அருமையான கதைப் போக்கு, இந்த முடிவுக்காகத்தான் காத்திருந்தேன் என்பது போன்ற குதூகலம் எனக்கு. முடிபில் மிச்சமிருக்கும் புதையல் என் நினைவில் தேங்கிக் கொள்ள ஏதுவான புனைவு. நன்றி ஜெ
அன்புடன்
இரம்யா.
***
அன்புள்ள ஜெ
உற்சாகமான ஆனால் அழகான ஒரு கதை சாவி. எளிமையாகச் சொல்லப்பட்டாலும் ஆழமான ஒரு கேள்வியை முன்வைக்கிறது, அறிவு ஒரு சாபமா வரமா? மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள பகுத்தறிவு அவனை மகிழ்ச்சியாக இருக்கவைக்கிறதா இல்லையா? ஆம் என்றும் இல்லை என்றும் சொல்லவைப்பதுதான் இக்கதையின் அழகு. கதை அறிவின் மகிழ்ச்சியை ஆதரிக்கிறது, ஆனால் வாசகன் அப்படி இல்லை என்று வாதிடுவதற்கும் கதைக்குள் இடமிருக்கிறது
பார்த்திபன் மாரிராஜ்
***
அன்பு ஜெ,
ஒரு குரங்கு இந்த மானுட உலகத்திலிருந்து எப்படி ஸ்க்ரூவைக் கழட்ட வேண்டுமென்று கற்றுக் கொண்டு குதூகலித்தது போலவே மானுடமும் முதலில் காட்டை விட்டு பிரிந்து வாழத் தொடங்கிய முதலில் தான் கண்டறிந்த நெருப்பு, சக்கரம் கண்டு குதூகலித்திருப்பான் என்றெண்ணினேன். ஒரு வகையில் எங்கோ ஓர் புள்ளியில் இந்த கூர்தலறக் கோட்பாடு சொல்வது போலவே குரங்கினின்று மிகவும் போரான(Boredom) ஓர் குரங்கு ஏதோ ஒன்றைப் பற்றிக் கொள்ளவும், தன் இனத்துக்கு வராத ஒன்றை தான் செய்ததனால் ஏற்பட்ட ஞானக் களிப்பையும் உடன் கொண்டு, ஞானதுக்கம் அடைந்து தானே குரங்கை விட உயர்ந்த பரிமாணம் என்று சொல்லிக் கொண்டு ஏதோ ஓர் தேடலில் பல்கிப் பெருகி இந்த பூமியில் நிறைந்து மானுடமாக கிடப்பதாகப் பார்க்கிறேன். மனிதனும், அவன் வளர்க்கும் உயிரினங்களும், அவனைச் சார்ந்து வாழும் உயிரினங்களைத் தவிர்த்து அனைத்துமே நீங்கள் சொல்வது போல வானுக்குரியவை தான். அங்கு துக்கமில்லை, நினைக்க வேண்டுவதில்லை. அங்கு அறிய வேண்டுவது, அறியப்படாதது என்ற பிரிவில்லை. காலத்தின் கடந்த கால துக்கம் என்று நினைவில் சேகரிக்க ஒன்றுமில்லை. காட்டின் குரங்கும் ஒருவகையில் அந்த கீரிட்டிங்ஸ் கதையில் வரும் விடியாவும்/அனைத்து பாப்பாக்களும் ஒன்று தானோ என்றே நினைக்கிறேன். இவர்கள் உலகில் அன்பு ஒன்றே இருக்கிறது. பற்றிக் கொள்ள வேண்டுமென்ற பற்று நுனியில் இருக்கிறது. நேரம் வருகையில் பற்றிக் கொண்டு உலகியலில் ஞானத் துன்பங்களோ, புற துன்பங்களோ அடைந்து, நினைவுகளாலேயே அமிழ்ந்து கேள்விகளோடே மாண்டு போகின்றார்கள்.
நிகழ்காலத்தில் நடக்கும் முன்னேற்றம், வளர்ச்சி என்ற பேரில் காடுகள் உள்ளிழுத்துக் கொள்ளப்படுவதையும் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். நீடித்த நிலையான வளர்ச்சி, சூழலோடு இயைஜ்ந்த வாழ்க்கை தான் இன்றைய காலகட்டத்தின் தேவையாக உள்ளது. அதை நோக்கி தீவிரமாக செயல்பட்டாலொழிய மானுடம் வாழ முடியாது என்பது உண்மை. தர்மசம்வாதம் நடக்குத எடம் காடு என்பதும், மழையை தர்மவர்த்தினி என்பதும் ஓர் அருமையான தொன்மாக பதிந்து விட்டது என் மனதில். இராமாயணத் தொன்மங்கள் கதையில் ஊடும் பாவுமாக வந்திருந்தது. குரங்கு என்றவுடன் வரும் தொன்மங்களில் இன்றியமையாதது ராமாயணத்தொன்மம். அம்மாவின் மரபுப் பேச்சும் மகனின் எதிராடல்களும் ஒரு வகையில் மனதிற்குள் நடக்கும் தொன்ம-நிதர்சன போரட்டம் தான். இறுதியில் நிதர்சனம் என்ற ஒன்று இருக்கிறதே. கீழே இறங்கி இந்த மன்னுலகின் ஞானதுக்கத்தைத் தேடி வந்தாயிற்று. வாழ்ந்தே ஆக வேண்டும். குரங்குக்கு மெக்கானிக் தொழில் போல இந்த மானுடமும் சாவி இருக்கிறதோ இல்லையோ, ஏதோ ஒன்றைப் பற்றி ஞானதுக்கத்தின் உச்சியில் நிறைவை அடைந்து இறப்பதோ அல்லது ஞானசன்னியாசம் அடைந்து முக்தியை அடைவதோ ஏதோ ஒன்றைக் கைக்கொள்ள வேண்டும் போலவே. அரிகிருஷ்ணன் போலவே நானும் புன்னகையுடன் அந்தக் குரங்கின் களியாட்டத்தைப் பார்த்து கொண்டிருந்தேன்.
அன்புடன்
இரம்யா.
***
100. வரம் [சிறுகதை]
99. முதலாமன் [சிறுகதை]
98. அருகே கடல் [சிறுகதை]
97. புழுக்கச்சோறு [சிறுகதை]
96. நெடுந்தூரம் [சிறுகதை]
95. எரிமருள் [சிறுகதை]
94. மலைவிளிம்பில் [சிறுகதை]
93. அமுதம் [சிறுகதை]
92. தீவண்டி [சிறுகதை]
91. பீடம் [சிறுகதை]
90. சிந்தே [சிறுகதை]
89. சாவி [சிறுகதை]
88. கழுமாடன் [சிறுகதை]
87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
86. தூவக்காளி [சிறுகதை]
85. சிறகு [சிறுகதை]
84. வண்ணம் [சிறுகதை]
83. ஆபகந்தி [சிறுகதை]
82. ஆமை [சிறுகதை]
81. கணக்கு [சிறுகதை]
80. சுக்ரர் [சிறுகதை]
79. அருள் [சிறுகதை]
78. ஏழாவது [சிறுகதை]
77. மணிபல்லவம் [சிறுகதை]
76. மூத்தோள் [சிறுகதை]
75. அன்னம் [சிறுகதை]
74. மலையரசி [சிறுகதை]
73. குமிழி [சிறுகதை]
72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
71. செய்தி [சிறுகதை]
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1
69. ஆகாயம் [சிறுகதை]
68. ராஜன் [சிறுகதை]
67. தேனீ [சிறுகதை]
66. முதுநாவல்[சிறுகதை]
65. இணைவு [சிறுகதை]
64. கரு [குறுநாவல்]- பகுதி 1
64. கரு [குறுநாவல்]- பகுதி 2
63. ‘பிறசண்டு’ [சிறுகதை]
62. நிழல்காகம் [சிறுகதை]
61. லாசர் [சிறுகதை]
60. தேவி [சிறுகதை]
59. சிவம் [சிறுகதை]
58. முத்தங்கள் [சிறுகதை]
57. கூடு [சிறுகதை]
56. சீட்டு [சிறுகதை]
55. போழ்வு [சிறுகதை]
54. நஞ்சு [சிறுகதை]
53. பலிக்கல் [சிறுகதை]
52. காக்காய்ப்பொன் [சிறுகதை]
51. லீலை [சிறுகதை]
50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]
49. கரவு [சிறுகதை]
48. நற்றுணை [சிறுகதை]
47. இறைவன் [சிறுகதை]
46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]
45. முதல் ஆறு [சிறுகதை]
44. பிடி [சிறுகதை]
43.. கைமுக்கு [சிறுகதை]
42. உலகெலாம் [சிறுகதை]
41. மாயப்பொன் [சிறுகதை]
40. ஆழி [சிறுகதை]
39. வனவாசம் [சிறுகதை]
38. மதுரம் [சிறுகதை]
37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]
36. வான்நெசவு [சிறுகதை]
35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]
34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
33. வான்கீழ் [சிறுகதை]
32. எழுகதிர் [சிறுகதை]
31. நகைமுகன் [சிறுகதை]
30. ஏகம் [சிறுகதை]
29. ஆட்டக்கதை [சிறுகதை]
28. குருவி [சிறுகதை]
27. சூழ்திரு [சிறுகதை]
26. லூப் [சிறுகதை]
25. அனலுக்குமேல் [சிறுகதை]
24. பெயர்நூறான் [சிறுகதை]
23. இடம் [சிறுகதை]
22. சுற்றுகள் [சிறுகதை]
21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
20. வேரில் திகழ்வது [சிறுகதை]
19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
18. தங்கத்தின் மணம் [சிறுகதை]
17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]
16. ஏதேன் [சிறுகதை]
15. மொழி [சிறுகதை]
14. ஆடகம் [சிறுகதை]
13. கோட்டை [சிறுகதை]
12. விலங்கு [சிறுகதை]
11. துளி [சிறுகதை]
10. வேட்டு [சிறுகதை]
9. அங்கி [சிறுகதை]
8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]
7. பூனை [சிறுகதை]
6. வருக்கை [சிறுகதை]
5. “ஆனையில்லா!” [சிறுகதை]
4. யா தேவி! [சிறுகதை]
3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
2. சக்தி ரூபேண! [சிறுகதை]
1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]