நண்பர்களுக்கு வணக்கம்,
மூத்த இலக்கிய ஆளுமை, எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை வருகிற சனி மாலை (25 – 07 -2020) ஒருங்கிணைத்திருக்கிறோம். எழுத்தாளர் ஜெயமோகனும் கலந்துக்கொள்ளும் இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை, கேள்விகளை முன்வைக்கலாம்.
“எந்தப் பண்பாட்டுச் சூழலிலும் அரிதாகவே முதன்மைப் பெரும்படைப்பாளிகள் தோன்றுகிறார்கள். அரிதாகவே அவர்கள் சமகாலத்தில் உரிய மதிப்பைப் பெறவும் செய்கிறார்கள். ஐயமின்றி ஈழ இலக்கியச் சூழல் உருவாக்கிய முதன்மைப் பெரும்படைப்பாளி அ.முத்துலிங்கம்தான். தமிழிலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளின் நிரையில் அவருக்கு இடமுண்டு.
மெல்லிய நகைச்சுவையும் சொல்லாதவற்றால் ஆன படலமாக கண்டுகொண்டவற்றை அமைக்கும் கலைத்திறனும் கொண்ட படைப்புகள் அ.முத்துலிங்கம் எழுதுபவை. அனைத்துக்கும் மேலாக தமிழ்ப்படைப்பாளிகளில் அவர் ஒருவரே உலகமனிதன். எந்த நாகரீகத்தின் மேலும் இளக்காரம் சற்றும் அற்ற நோக்கு கொண்டவர். ஏனென்றால் தன் நாகரீகத்திற்குள் தன்னைக் குறுக்கிக் கொள்ளாதவர். எளிய பற்றுகளுக்கும் காழ்ப்புகளுக்கும் அப்பாற்பட்டவர். அவருக்கு முன் அப்பண்பின் தொடக்கநிலை தென்பட்டது தமிழ்ப்படைப்பாளிகளில் ப.சிங்காரத்திடம் மட்டுமே. நாளை உருவாகப்போகும் தமிழ்ப்படைப்பாளிகளின் மாதிரிவடிவம் அவர்.”
-அ முத்துலிங்கம் குறித்து ஜெயமோகன்
அ முத்துலிங்கம் – சந்திப்பு
ஜூலை 25, 2020, மாலை 6:00 மணி – இந்திய நேரம்
யூட்யூப் லைவ்:
ஜூம் மீட்டிங் : https://us02web.zoom.us/j/3827655072?pwd=cWRNTUlWb3R5clcxKytWNU1LYklNUT09
Meeting ID: 382 765 5072
Password: 8965317862
(முதலில் இணையும் 100 பேர் மட்டும்)
அனைவரும் யூட்யூப் லைவில் கலந்துகொள்ளலாம், வருக.
விஷ்ணுபுரம் நண்பர்கள்
தொடர்புக்கு: [email protected]
வாட்ஸப் : +91 9965315137; +91 98940 33123