ஓர் இடம்

நண்பர்களை பொறாமைப்படச்செய்யும் ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விடக்கூடாதென்ற நல்லெண்ணத்தால் இந்த குறிப்பு. இன்று காலை ஆந்திரத்தில் பீமாவரம் வந்து அங்கிருந்து காரில் ஒருமணிநேரம் பயணம் செய்து கோதாவரியின் கரையில் உள்ள ஒரு கிராமத்துக்கு வந்துசேர்ந்தேன். கூட தனசேகரும் உண்டு.

இந்த இடம் ஒரு மாபெரும் தென்னந்தோப்பு. அதனுள் கோதாவ்ரியை ஒட்டி ஒரு பெரிய விருந்தினர் மாளிகை. நான்கு தூண்கள்மேல் அந்தரத்தில் அமைந்தது. இரு குளிர்சாதன படுக்கையறைகள். சமையலறை. நான்கு பக்கமும் உப்பரிகைகள். ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்குரிய வசதிகள்.

பின்பக்க உப்பரிகையில் இருந்து இதை எழுதுகிறேன். கண்ணெதிரே பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கிறது கோதாவரி, அப்பால் தென்னந்தோப்புகள். தனிமை. இன்னும் பொருத்தமாகச் சொன்னால் ஏகாந்தம். ஏக அந்தம்

ஒரு திரைக்கதை- சொல்ல தேவையில்லை. ஆகவே ஒருவேளை அதிகமாக விவாதங்களில் ஈடுபட முடியாமல் போகலாம். மின்னஞ்சல்கள் தாமதமாகலாம். மன்னிக்கவும்

முந்தைய கட்டுரைதாயார்பாதம்,சோற்றுக்கணக்கு,மத்துறுதயிர்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிமரிசன வடை