ரம்யா, திராவிட மனு- கடிதம்

நாடகக்காதல்,திராவிட மனு- ஒரு பெண்ணின் கடிதம்

அன்புள்ள ஜெ ,இன்று உங்கள் தளத்தில் வந்துள்ள ரம்யா அவர்களின் கடிதம், நீங்கள் வெளியிட்ட வாசகர் கடிதங்களில் சிறந்தவைகளில் ஒன்று. கலங்கிய கண்களோடுதான் அதை வாசித்தேன். தனி ஒருவராக நீங்கள் செய்யும் அறிவுப்பணி வணக்கத்துக்குரியது .

நன்றி .
அன்புடன்
ஆ .கந்தசாமி .
புனே

***

அன்புள்ள ஜெ

திராவிட மனு போன்ற கட்டுரையை நானே கூட ஒரு பாலிமிக்கல் கட்டுரையாகவே பார்த்தேன். அதிலுள்ள நியாயங்களை உணர்ந்தாலும்கூட இணையச்சூழலில் எல்லாமே ஒரு வகையான சண்டைகளாக ஆகிவிடுகின்றன இல்லையா? ஆனால் ரம்யா அவர்களின் கடிதம் என்னை திகைப்பு அடையவைத்தது.

ரம்யா தொடர்ந்து உங்களுக்கு கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்கிறார். அவருடைய இலக்கியரசனையும் அறிவார்ந்த தேடலும் ஆச்சரியமடைய வைப்பவை. அவர் ஆட்சிப்பணிக்கான பயிற்சியில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இந்த திராவிடமனுவாதிகள் உருவாக்கக்கூடிய முத்திரைகள் அவர்களை எந்த அளவுக்கு பாதிக்கின்றன, அவர்களின் போராட்டங்களை எப்படியெல்லாம் அழிக்கின்றன என்று நினைக்கையில் பதைப்பு உருவாகிறது.

இந்த திராவிடமனுவாதிகள் எவரோ நிதிகொடுத்தார்கள் என்று எதையோ எழுதிவிட்டுப்போகிறார்கள். இங்கே இருப்பது கொடூரமான சாதிய ஒடுக்குமுறை. அந்த சூழலில் உண்மையான ஒடுக்குமுறையை பொய்யான திசைதிருப்பல்களைக்கொண்டு மறைக்க இவர்கள் முயல்கிறார்கள். அதன்விளைவாக உண்மையான ஒடுக்குமுறைகளை வளர்க்கிறார்கள். அவர்களுக்கு ஆயுதங்களைச் செய்து கையில் கொடுக்கிறார்கள்

ராஜன் குறை போன்றவர்கள் பழைய சாதிவெறியர்களை விட ஆபத்தானவர்கள். இவர்கள் உருவாக்கும் அழிவு வரலாறு முழுக்க படந்து பரவுவது. நினைக்கவே பதற்றமாக இருக்கிறது.

ஜெயசீலன்

அன்புள்ள ஜெயசீலன்

ரம்யா இப்போது இரண்டாம்நிலை அதிகாரிகளுக்கான தேர்வில் வென்று பதவியேற்றிருக்கிறார். முதல்நிலை அதிகாரிகளுக்கான தேர்வில் அவர் வெற்றிபெற வாழ்த்துவோம்

ஜெ

முந்தைய கட்டுரைபெருஞ்செயல் ஆற்றுவது
அடுத்த கட்டுரைமணிபல்லவம்,கீர்ட்டிங்ஸ் – கடிதங்கள்