நாமனைவரும் அறிந்த ஒன்று மகாபாரதம் ஒரு தொன்மம் என. தொன்மங்கள் தம் வேர்களை எங்கு கொண்டுள்ளன எனும் கேள்வி முக்கியமானது. அதன் வழியே நாம் அறியக் கிடைக்கும் வாசிப்புகள் புரிதலை மேம்படுத்தும். தொன்மங்கள் அவற்றின் வேர்களை ஆழப் பரப்பியிருக்கும் இடங்களை முதற்கட்டமாக நான்கு அடுக்குகளாகக் கொள்ளலாம். (படம் 1) இவை இறுதி செய்யப்பட அடுக்குகளல்ல. இவற்றில் இன்னும் சிலவற்றை சேர்க்க இயலும். எனினும் முக்கிய அடுக்கு நிலைகளை மட்டுமே இங்கு பேசுகிறேன்.
வெண்முரசு வாசிப்பு முறை – ராஜகோபாலன்
——————————————————————————